Home
News

ஜியோ ரூ.222 விலைக்கு அட்டகாச திட்டம்: அதிரடி சலுகைகள் மற்றும் இலவச சந்தாக்கள்!

ஜியோ ரூ.222 விலைக்கு அதிவேக டேட்டா சலுகையோடு டிஸ்னி ப்ளஸ், ஹாட்ஸ்டார் சேவை சந்தாவையும் வழங்குகிறது.

ஜியோ ரூ.222-க்கு வழங்கப்படும் திட்டம்x

ஜியோ ரூ.222-க்கு வழங்கப்படும் திட்டம்x

ஜியோ ரூ.222-க்கு வழங்கப்படும் திட்டத்தில் நிறுவனம் அட்டகாச சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்தில் டிஸ்னி ப்ளஸ், ஹாட்ஸ்டார் சேவையின் சந்தா சலுகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தா

டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தா

ஜியோ தனது வாடிக்கையாளர்களின் அனைத்து ரீசார்ஜ் திட்டங்களுக்கும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்கியது. அதேபோல் விஐபி ஒரு வருட சந்தாவை ரூ. 401 திட்டம், ரூ. 2,599 திட்டம் போன்ற திட்டங்களின் கீழ் வழங்குவது குறிப்பிடத்தக்கது. வழக்கமாக ரீசார்ஜ் திட்டங்களில் அதிவேக டேட்டா, குரல் அழைப்பு, எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளையே வழங்கியது. ஆனால் ஜியோ புதிதாக அறிமுகப்படுத்தப்படும் திட்டங்களில் ஜியோ டிஸ்னி ப்ளஸ் மற்றும் ஹாட்ஸ்டார் தேவையை வழங்குகிறது.

15 ஜிபி அதிவேக டேட்டா

15 ஜிபி அதிவேக டேட்டா

ஜியோ வழங்கும் ரூ.222 ப்ரீபெய்ட் திட்டத்தில் 15 ஜிபி அதிவேக டேட்டா வழங்குவதோடு திட்டம் காலாவதியாகும் காலம் வரை டிஸ்னி ப்ளஸ், ஹாட்ஸ்டார் விஐபி சந்தா சலுகையை ஒரு வருடத்திற்கு குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. ஏணைய சந்தா கணக்குகளில் இந்த சலுகை காணமுடியவில்லை என்றாலும் சில பயனர்களுக்கு இந்த ரீசார்ஜ் தரவு காணமுடிகிறது என தெரிவிக்கப்படுகிறது.

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் பயன்பாடு

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் பயன்பாடு

இந்த சலுகை கிடைக்கும் வாடிக்கையாளர்களுக்கு டேட்டா சலுகையோடு டிஸ்னி ப்ளஸ், ஹாட்ஸ்டார் நன்மைகள் ரீசார்ஜ் செய்வதன் மூலம் கிடைக்கிறது, அதோடு ரீசார்ஜ் செய்யும் பயனர்கள் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் பயன்பாட்டை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

ஜியோ எண்ணுக்கு ஓடிபி எண் வழங்கப்படும்

ஜியோ எண்ணுக்கு ஓடிபி எண் வழங்கப்படும்

இந்த சலுகையை பதிவிறக்கம் செய்தவுடன் ஜியோ எண்ணிலிருந்து ஓடிபி எண் வழங்கப்படும் அதை பயன்படுத்தி உள்நுழையலாம் இந்த டேட்டா பேக் சலுகையானது ஒரு குறிப்பிட்ட கால சலுகையின் கீழ் கிடைக்கிறது.

ரூ.2,599 திட்டம்

ரூ.2,599 திட்டம்

ஜியோ திட்டங்களில் ரூ.401 திட்டம் மற்றும் ரூ.2,599 திட்டம் வழங்கப்படுகிறது. இதில் ஒரு வருடத்திற்கான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சந்தா சலுகை கிடைக்கிறது. இந்த திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்ட மற்றும் 10 ஜிபி கூடுதல் டேட்டா சலுகையும் கிடைக்கிறது, ஜியோ டூ ஜியோ வரம்பற்ற அழைப்புகள் ஜியோ டூ பிற தொலைத் தொடர்பு நிறுவன அழைப்புகளுக்கு 1000 நிமிடங்கள் வழங்கப்படுவதோடு 100 எஸ்எம்எஸ்-கள் வழங்கப்படுகிறது. ரூ.2588 திட்டமானது 365 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

ரூ. 401 ஜியோ ரீசார்ஜ் திட்டம்,

ரூ. 401 ஜியோ ரீசார்ஜ் திட்டம்,

நாள் ஒன்றுக்கு 3 ஜிபி டேட்டா 6 ஜிபி கூடுதல் அதிவேக டேட்டா உள்ளிட்ட சலுகையோடு ஜியோ-டு-ஜியோ வரம்பற்ற அழைப்புகள், ஜியோ-டு-லேண்ட்லைன் வரம்பற்ற அழைப்புகள், பிற நிறுவன அழைப்புகளுக்கு 1000 நிமிடங்கள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ்கள் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் 28 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Jio announce Rs.222 plan with disney+ hotstar subscription
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X