ஜியோ, விஐ பயனர்களே: இலவச நெட்பிளிக்ஸ் அணுகல் உடன் கிடைக்கும் சிறந்த ரீசார்ஜ் திட்டங்கள் இதோ!
நாட்டின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் பிரதானமாக இருப்பது ஜியோ மற்றும் விஐ ஆகும். நிறுவனம் குறிப்பிட்ட திட்டங்களில் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களில் ஓடிடி ஸ்ட்ரீமிங் அணுகலை வழங்குகிறது. சந்தாதாரர்களிடையே ஓடிடி தேவை என்பது பிரபலமடைந்து வருகிறது. ஓடிடி தளங்களில் நெட்பிளிக்ஸ் என்பது பிரதான தளமாகும். நெட்பிளிக்ஸ் இந்தியாவில் தனி ரசிகர்கள் பட்டாளத்தையே கொண்டிருக்கிறது. ஜியோ மற்றும் விஐ போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் போஸ்ட்பெய்ட் சந்தாதாரர்களுக்கு நெட்பிளிக்ஸ் சந்தா அணுகலை வழங்குகிறது.

ஜியோ போஸ்ட்பெய்ட் திட்டங்கள்
ஜியோ திட்டங்கள் கிட்டத்தட்ட அனைத்து போஸ்ட்பெய்ட் திட்டங்களுடனும் ஜியோ நெட்பிளிக்ஸ் சந்தாவை வழங்குகிறது. நெட்பிளிக்ஸ் அணுகல் உடன் கிடைக்கும் ஜியோவின் போஸ்ட்பெய்ட் திட்டங்கள் குறித்து பார்க்கையில், இதன் விலை வெறும் ரூ.399 ஆக இருக்கிறது. இந்த திட்டத்தில் மாதத்திற்கு மொத்தம் 75 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்தத் தரவைப் பயன்படுத்திய பிறகு, நீங்கள் ரூ.10 ஒரு ஜிபி-க்கு கட்டணத்தைச் செலுத்த வேண்டும். இந்த பேக் 200ஜிபி டேட்டா ரோல்ஓவர் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்குகிறது. இந்த திட்டத்தின் மூலம் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் பெறுவீர்கள்.

போஸ்ட்பெய்ட் திட்டத்தின் விலை ரூ.599
ஜியோ வழங்கும் நெட்பிளிக்ஸ் அணுகலுடன் கூடிய அடுத்த போஸ்ட்பெய்ட் திட்டத்தின் விலை ரூ.599 ஆக இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ், சந்தாதாரர்கள் மொத்தம் 100 ஜிபி டேட்டாவைப் பெறுவார்கள், அதன் பின் ஒரு ஜிபி டேட்டாவிற்கு ரூ.10 வசூலிக்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் பயனர்கள் 200ஜிபி ரோல்ஓவர் டேட்டாவையும் பெறுகிறார்கள். இந்த திட்டத்தில், சந்தாதாரர்கள் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகளைப் பெறுவார்கள்.

ரூ.799 போஸ்ட்பெய்ட் திட்டம்
ஜியோவின் குறிப்பிடத்தக்க திட்டங்களில் ஒன்று ரூ.799 போஸ்ட்பெய்ட் திட்டமாகும். ஜியோ ரூ.799 திட்டத்தில் இரண்டு கூடுதல் சிம் கார்டுகளை வழங்குகிறது. இந்த திட்டம் பயனர்களுக்கு மொத்தம் 150 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டம் 200 ஜிபி டேட்டா ரோல் ஓவருடன் வருகிறது. 150 ஜிபி டேட்டா காலாவதியான பிறகு, ஒவ்வொரு ஜிபி டேட்டாவிற்கும் ரூ.10 செலுத்த வேண்டும். இந்த திட்டத்தில் நீங்கள் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் இலவச நெட்பிளிக்ஸ் சந்தாவைப் பெறுவீர்கள்.

போஸ்ட்பெய்ட் பேக் விலை ரூ.999
ஜியோவின் மிகவும் பிரபலமான குடும்ப போஸ்ட்பெய்ட் பேக் விலை ரூ.999 ஆக இருக்கிறது. ஜியோ ரூ.999 திட்டத்தில் மூன்று கூடுதல் சிம் கார்டுகளை வழங்குகிறது. இந்த திட்டம் மொத்தம் 200 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தில் 500 ஜிபி டேட்டா ரோல்ஓவர் வசதியும் உள்ளது. 200 ஜிபி டேட்டா முடிந்ததும், பயனர்களுக்கு ஒரு ஜிபிக்கு ரூ.10 வசூலிக்கப்படும். இந்த திட்டம் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது. இந்த திட்டத்தின் மூலம் நெட்பிளிக்ஸ் அணுகலும் கிடைக்கிறது.

போஸ்ட்பெய்ட் திட்டத்தின் விலை ரூ.1,499
ஜியோ வழங்கும் மிகவும் விலையுயர்ந்த தனிப்பட்ட போஸ்ட்பெய்ட் திட்டத்தின் விலை ரூ.1,499 ஆகும். இந்த திட்டத்தில் ஜியோ மொத்தம் 300 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தில் 500 ஜிபி ரோல்ஓவர் டேட்டாவும் கிடைக்கிறது. திட்டத்தின் மூலம் கிடைக்கும் 300 ஜிபி டேட்டா முடிவில், பயனர்கள் ஒரு ஜிபிக்கு ரூ.10 செலுத்த வேண்டும். இந்த திட்டம் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது. மேலே உள்ள திட்டங்கள் அனைத்தும் நெட்பிளிக்ஸ், ஒரு வருட அமேசான் பிரைம் வீடியோ மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் உள்ளிட்ட பல ஓடிடி இயங்குதளங்களுக்கான அணுகலை வழங்குகின்றன.

விஐ போஸ்ட்பெய்ட் திட்டங்கள்
விஐ தனிநபர் மற்றும் குடும்ப போஸ்ட்பெய்ட் திட்டங்களை தனித்தனியாக வழங்குகிறது. நிறுவனம் அதன் ரெட்எக்ஸ் திட்டங்களுடன் நெட்பிளிக்ஸ் சந்தாக்களை மட்டுமே வழங்குகிறது. முதல் திட்டம் தனிப்பட்ட பயனர்களுக்குக் கிடைக்கும். இந்த திட்டத்தின் விலை மாதம் ரூ.1,099 ஆக இருக்கிறது. விஐ வழங்கப்பட்ட இரண்டாவது ரெட்எக்ஸ் திட்டம் 3 குடும்ப உறுப்பினர்களுக்குக் கிடைக்கிறது, அதாவது 3 குடும்ப உறுப்பினர்கள் திட்டத்தின் பலன்களை அனுபவிக்க முடியும். இந்த திட்டத்தின் விலை மாதம் ரூ.1,699 ஆக இருக்கிறது. அதேபோல் ரூ.2,299 திட்டமானது ஐந்து குடும்ப உறுப்பினர்களுக்கான அணுகலை வழங்குகிறது. அதேபோல் ரூ.1499 திட்டம் நெட்பிளிக்ஸ் அணுகலை வழங்குகிறது. இந்த திட்டத்தில் ஒரு வருட டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் அணுகலை வழங்குகிறது.


Click it and Unblock the Notifications