ஓஹோனு 1 வருஷ நன்மை தரும் தீபாவளி சலுகையா? மிரட்டும் Jio மற்றும் Vi ரீசார்ஜ் திட்டங்கள்.!

|

யார் சொன்னது தீபாவளி முடிந்துவிட்டது என்று.! இந்த வருட தீபாவளி கொண்டாட்டம் இன்னும் தொடர்கிறது. சரியாக சொன்னால், இந்த மாதம் இறுதி வரை இந்த கொண்டாட்டம் இந்த ஆண்டு தொடர்கிறது.

பண்டிகை காலம் இன்னும் முடியவில்லை என்பதை நிரூபிக்கும் விதமாக, ஜியோ மற்றும் விஐ (Jio and Vi) வழங்கும் பண்டிகை கால சிறப்புத் தள்ளுபடிகள் மற்றும் சிறப்பு ரீசார்ஜ் திட்ட நன்மைகள் அனைத்தும் இன்னும் நமக்கு பயன்படுத்தக் கிடைக்கிறன.

தீபாவளி முடிந்த பின்னரும் தீபாவளி சலுகை கிடைக்கிறதா?

தீபாவளி முடிந்த பின்னரும் தீபாவளி சலுகை கிடைக்கிறதா?

ஆம், சரியாக தான் படித்தீர்கள். தீபாவளியை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட சிறப்பு ரீசார்ஜ் நன்மைகள் அனைத்தும் இந்த மாத இறுதி வரை பயன்படுத்தக் கிடைக்கின்றன.

ஆகையால், அவற்றை உடனே பயன்படுத்துவதன் மூலம் உங்களுக்குச் சிறப்பான நன்மைகள் கிடைக்கவாய்ப்பு கிடைக்கிறது என்பதை மறக்காதீர்கள்.

இவை சிறப்பு ரீசார்ஜ் திட்டங்கள் என்பதனால், இதனுடன் கிடைக்கும் சலுகைகளை நீங்கள் இப்போது அணுகினால் மட்டுமே கிடைக்கும்.

ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு டபுள் குஷி.!

ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு டபுள் குஷி.!

சரி, ஜியோ (Jio) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனங்கள் அதன் வாடிக்கையாளர்களுக்காக என்ன நன்மைகளை எந்தெந்த திட்டங்களுடன் வழங்குகின்றன என்பதைத் தெரிந்துகொள்ளலாம் வாங்க.

Jio மற்றும் Vi ஆகியவை சிறந்த ரீசார்ஜ் பேக்கேஜ்களை விற்பனை செய்கின்றன.

தீபாவளி முடிந்துவிட்டாலும், பயனர்கள் இந்தத் திட்டங்களைப் பயன்படுத்தி ரீசார்ஜ் செய்தால் கூடுதல் நன்மை கிடைக்கின்றன என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

அதிரடி விலை குறைப்பு.! இனி எல்லாரும் iPhone 13 வாங்கலாம் போலயே.!அதிரடி விலை குறைப்பு.! இனி எல்லாரும் iPhone 13 வாங்கலாம் போலயே.!

Vi கொடுக்கும் தீபாவளி பரிசு.! 3 திட்டம் வழங்கும் வேற லெவல் நன்மைகள்.!

Vi கொடுக்கும் தீபாவளி பரிசு.! 3 திட்டம் வழங்கும் வேற லெவல் நன்மைகள்.!

இந்தியாவில் ஜியோ மற்றும் விஐ வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் சிறந்த சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளைப் பற்றிப் பார்ப்போம்.

முதலில் Vi வழங்கும் தீபாவளி ஆஃபர் விவரங்கள் பற்றி பார்த்துவிடலாம். தீபாவளி விளம்பரத்தின் ஒரு பகுதியாக, Vi (Vodafone-Idea) மூன்று ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.

சம்பந்தப்பட்ட Vi திட்டங்களை அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் Vi Diwali ஆஃபர் மூலம் ரீசார்ஜ் செய்தால், வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் டேட்டா இலவசமாக கிடைக்கிறது.

Vi ரூ. 1,449 திட்டம்

Vi ரூ. 1,449 திட்டம்

இந்த ரூ.1,449 Vi தீபாவளி சலுகை திட்டம், உங்களுக்கு வரம்பற்ற அழைப்பு நன்மை மற்றும் தினமும் 100 SMS நன்மைகளை வழங்குகிறது.

Vi ரூ.1,449 ரீசார்ஜ் திட்டம் 180 நாள் வேலிடிட்டி உடன் வருகிறது.

இது தினமும் 1.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது.

கூடுதலாக 50ஜிபி டேட்டாவும் கிடைக்கிறது.

இந்த Vi Diwali ஆஃபர் திட்டம் வீகென்ட் டேட்டா ரோல் ஓவர் நன்மை மற்றும் தினமும் நள்ளிரவு முதல் காலை ஆறு மணி வரை இலவசடேட்டாவை 180 நாளுக்கு வழங்குகிறது.

Vi ரூ. 2,899 திட்டம்

Vi ரூ. 2,899 திட்டம்

நாம் முன்பு பார்த்த ரூ.1,449 திட்டத்தைப் போலவே, இந்த ரூ.2,899 ரீசார்ஜ் திட்டமும் அதே பலன்களை அப்படியே வழங்குகிறது.

ஆனால், இது 50ஜிபி கூடுதல் டேட்டாவுக்குப் பதிலாக 75ஜிபி டேட்டாவை வழங்குகிறது.

மற்றொரு புறம் இந்த ரீசார்ஜ் திட்டம் 365 நாள் வேலிடிட்டியுடன் வருகிறது.

ஒரு வருடம் முழுதும் இந்த திட்டம் வீகென்ட் டேட்டா ரோல் ஓவர் நன்மை மற்றும் ஆள் நைட் பிங்கே இலவச டேட்டா நன்மையை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LPG சிலிண்டரை கம்மி விலையில் வாங்க வேண்டுமா? அப்போ இந்த முறைப்படி புக்கிங் செய்யுங்க.!LPG சிலிண்டரை கம்மி விலையில் வாங்க வேண்டுமா? அப்போ இந்த முறைப்படி புக்கிங் செய்யுங்க.!

Vi ரூ. 3,099 திட்டம்

Vi ரூ. 3,099 திட்டம்

இந்த திட்டமும் 365 நாள் வேலிடிட்டி உடன் வருகிறது.

இந்த திட்டம் தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது.

தீபாவளி சிறப்பு சலுகையாக இதில் கூடுதலாக 75ஜிபி டேட்டாவுடன் கிடைக்கிறது.

இந்த ரீசார்ஜ் திட்டம் ஒரு வருட டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவையும் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இது தவிர மற்ற அணைத்து நன்மைகளும் மேல் பார்த்த திட்டங்களுடன் ஒற்றுமையானது.

ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் தீபாவளி ஆஃப்பர்.!

ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் தீபாவளி ஆஃப்பர்.!

இப்போது ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் தீபாவளி ஆஃபர் விவரங்களைப் பற்றிப் பார்க்கலாம்.

அனைத்து ஜியோ 4ஜி ப்ரீபெய்ட் பயனர்களுக்கும், ரிலையன்ஸ் ஜியோ ஒரு தனித்துவமான தீபாவளி கொண்டாட்ட சலுகையை வெளியிட்டுள்ளது.

இது டேட்டா அணுகல் உடன் வாய்ஸ் கால் நன்மை மற்றும் SMS ஆகியவற்றுடன் கூடுதலாகப் பல நன்மைகளை வழங்குகிறது.

ஜியோ தீபாவளி சலுகையை வழங்கும் ரீசார்ஜ் திட்டம் ரூ. 2,999 விலையில் கிடைக்கிறது.

Jio True 5G சென்னைக்கு வந்தாச்சா? 5ஜியின் அல்டிமேட் ஸ்பீடை தமிழ்நாட்டில் எப்படி அணுகுவது?Jio True 5G சென்னைக்கு வந்தாச்சா? 5ஜியின் அல்டிமேட் ஸ்பீடை தமிழ்நாட்டில் எப்படி அணுகுவது?

விலையைப் பார்த்ததும் மலைத்துவிடாதீர்கள்.! விஷயம் இருக்கு.!

விலையைப் பார்த்ததும் மலைத்துவிடாதீர்கள்.! விஷயம் இருக்கு.!

விலையைப் பார்த்ததும் மலைத்துவிடாதீர்கள், இதன் நன்மையை பார்த்தால் நீங்களே விஷயத்தைப் புரிந்துகொள்வீர்கள்.

இந்த ஜியோ தீபாவளி கொண்டாட்ட சலுகை 365 நாள் வேலிடிட்டி உடன் வருகிறது.

இந்தத் திட்டம் அதன் பயனர்களுக்கு வரம்பற்ற வாய்ஸ் கால்ஸ் நன்மை, தினமும் 100 SMS மற்றும் ஒவ்வொரு நாளும் 2.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது.

1 ஆண்டுக்கு இது 912 ஜிபி டேட்டாவை வழங்குகிறது.

அடேங்கப்பா.! ஒரு ரீசார்ஜ் திட்டத்திற்குள் இவ்வளவு எக்ஸ்டரா நன்மையா?

அடேங்கப்பா.! ஒரு ரீசார்ஜ் திட்டத்திற்குள் இவ்வளவு எக்ஸ்டரா நன்மையா?

இந்த தனித்துவமான தீபாவளி ரீசார்ஜ் விருப்பத்துடன், ஜியோ கூடுதலாக 75 ஜிபி டேட்டாவையும் உள்ளடக்கியது.

கூடுதலாக, பயனர்கள் JioTV, JioCinema, JioSecurity மற்றும் JioCloud உள்ளிட்ட ஜியோ சேவைகளுக்கான சந்தாவைப் பெறுகின்றனர்.

கூடுதலாக, Ferns & Petals 150 ரூபாய் தள்ளுபடி வழங்குகிறது. Zoomin நன்மை மற்றும் Ixigo விமான முன்பதிவுகளில் 750 ரூபாய் தள்ளுபடி வழங்குகிறது.

லாஸ்ட் டைட் இது தான்.. உடனே ரீசார்ஜ் செய்யுங்க.!

லாஸ்ட் டைட் இது தான்.. உடனே ரீசார்ஜ் செய்யுங்க.!

Ajio வழங்கும் 1000 ரூபாய் தள்ளுபடி. அர்பன் லேடர் 1500 ரூபாய் தள்ளுபடி வழங்குகிறது. Reliance Digital தளத்திற்கான ரூ.1,000 தள்ளுபடி கிடைக்கிறது.

இந்த சிறப்பு ரீசார்ஜ் தீபாவளி சலுகை இந்த மாதம் இறுதி வரை மட்டுமே கிடைக்கும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

அக்டோபர் 31ம் தேதிக்கு முன்னதாக இந்த ரீசார்ஜ் திட்டங்களை நீங்கள் ரீசார்ஜ் செய்தால் உங்களுக்கு அடுத்த ஆண்டு வரை எந்த கவலையும் இருக்காது.

இத்துடன் கிடைக்கும் கூடுதல் சலுகைகளையும் பெற இதுவே சரியான நேரம் என்பதை மறக்காதீர்கள்.

Best Mobiles in India

English summary
Jio and Vi Diwali Recharge Offer Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X