நண்பேன்டா.. Jio உடன் OnePlus கூட்டு.. இந்தியாவில் புதுமையான லேப்.. என்ன செய்யப் போறீங்க அம்பானி சார்?
இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு (Telecom) நிறுவனமான ஜியோ (Jio), இந்தியாவில் பரந்தளவு 5ஜி (5G) நெட்வொர்க் சேவையை விரிவுபடுத்தி வருகிறது. ஜியோவுடன் ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் இப்போது கூட்டு சேர்ந்து இந்தியாவின் முதல் 5ஜி இன்னோவேஷன் லேப்பை அமைத்துள்ளது.
பெரிய இந்திய தொலைத்தொடர்பு (Telecom operator) நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) மற்றும் மாபெரும் ஸ்மார்ட்போன் (Smartphone) தயாரிப்பாளரான ஒன்பிளஸ் இணைந்து, இந்தியாவில் 5ஜி இன்னோவேஷன் லேப்பைத் (India's 5G Innovation Lab) திறக்க கூட்டு சேர்ந்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் 5ஜி இன்னோவேஷன் லேப்பைத் (India's 5G Innovation Lab):
இந்த ஆய்வகத்தின் நோக்கம் பயனர் அனுபவங்களை மேல்நோக்கி இயக்க புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கி சோதனை செய்வதன் மூலம் புதிய கண்டுபிடிப்புகளை திறம்பட இயக்குவதாகும். இந்தியாவில் 5G தொழில்நுட்பத்தின் முழு திறனையும் திறக்கும் நோக்கில், ஜியோ மற்றும் ஒன்பிளஸ் என்ற இரண்டு ஜாம்பவான்கள் இப்போது அதிகாரப்பூர்வமாக ஒரு கூட்டாண்மையை துவங்கியுள்ளன.
இந்தியாவின் அனைத்து மூலைகளிலும் ஜியோ தனது 5ஜி சேவையை வேகமாக பரப்பிவருகிறது. உண்மையில், நாட்டில் 5G SA என்ற ஸ்டேண்ட் அலோன் 5ஜி சேவையை நாட்டில் பயன்படுத்தப்படும் ஒரே தொலைதொடர்பு ஆபரேட்டராக ஜியோ மட்டுமே செயல்படுகிறது. OnePlus மற்றும் Jio இடையேயான இந்த கூட்டாண்மை, வாடிக்கையாளர்களுக்கு எதிர்காலம் மற்றும் சிறந்த இணைப்பு அனுபவத்தை வழங்க உதவும்.
5G உடன் சிறந்த அனுபவத்தைப் பெற, ஸ்மார்ட்போன்களில் ஒருங்கிணைக்கப்பட்ட சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் ஆகியவற்றுடன் TSP மொபைல் உள்கட்டமைப்புடன் நன்கு தொடர்பு கொள்ள அனுமதிக்கும் திட்டங்களை இந்த 5ஜி இன்னோவேஷன் லேப் மேம்படுத்தும். இது எப்படி ஒன்பிளஸ் நிறுவனத்திற்கு உதவும்?மொபைல் நெட்வொர்க்குகளுடன் சிறப்பாகச் செயல்பட ஒன்பிளஸ் அதன் தொழில்நுட்பத்தை மேம்படுத்த இந்தக் கூட்டாண்மை உதவுகிறது.

மொத்த 5G நெட்வொர்க்கில் 85% பயன்படுத்தப்பட்டு, நாட்டின் மிகப்பெரிய 5G நெட்வொர்க் வழங்கும் நிறுவனமாக ஜியோ திகழ்கிறது. OnePlus சமீபத்தில் ஒன்பிளஸ் 12 5ஜி (OnePlus 12 5G) சீரிஸ் அறிமுகப்படுத்தியது. இந்த புதிய போன்களுடன் சிறந்த 5G பதிவிறக்க வேகம் மற்றும் பேட்டரி ஆயுள் கிடைக்கும் என்று பயனர்களுக்கு ஒன்பிளஸ் உறுதியளித்துள்ளது.
Jio மற்றும் OnePlus இணைந்து 5G பயன்பாட்டை மேம்படுத்துகிறது:
OnePlus செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ஜியோவுடனான இந்த கூட்டாண்மை 5ஜி நெட்வொர்க்கில் எதிர்கால ஸ்மார்ட்போன்களை சிறப்பாக செயல்பட வைக்க தேவைகளை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்த கூட்டாண்மை இணைப்பின் எதிர்காலத்தில் தேவைப்படும் தொழில்நுட்பங்களை ஆராய்ந்து மேம்படுத்தும் என்று கூறியுள்ளார்.
இங்கு புதுமைகளுக்கு எல்லையே இல்லை. ஜியோ மற்றும் ஒன்பிளஸ் இந்தியா நாட்டில் 5G நிலப்பரப்பை மறுவரையறை செய்யத் தயாராக உள்ளது. இது வரம்பற்ற சாத்தியக்கூறுகளைப் பற்றிய ஒரு பார்வையை பயனர்களுக்கு வழங்கும். இந்தியாவில் 85% 5G சேவை ஜியோவால் மேற்கொள்ளப்படுகிறது. இது ஜியோ பயனர்களுக்கு மாயாஜால 5G அனுபவங்களை வெளிப்படுத்துவதற்கான நேரம்.
OnePlus உடனான இந்த கூட்டு இந்தியா முழுக்க 5ஜி நெட்வொர்க்கை மேம்படுத்துவதை திட்டமாக கொண்டுள்ளது. அடுத்த சில மாதங்களில், ஜியோ பயனர்கள் சிறப்பான 5ஜி அனுபவத்தை அனுபவிப்பார்கள் என்று இரண்டு நிறுவனங்களும் உறுதியளித்துள்ளது. கேமிங், வீடியோ ஸ்ட்ரீமிங் மற்றும் 5ஜியின் சிறந்த பயன்பாட்டு அனுபவம் எல்லாமே இனி அடுத்த நிலைக்கு எடுத்து செல்லப்படும் என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








