Home
News

ஜியோ அறிவித்த கேமிங் மாஸ்டர்ஸ் போட்டி.. பரிசு தொகையே 12,50,000 ரூபாயாம்.. உடனே நீங்களும் சேரலாம்..

இந்தியாவில் புதிய மற்றும் ஏற்கனவே உள்ள ஆன்லைன் கேமிங் ஆர்வலர்களை இலக்காகக் கொண்ட இஸ்போர்ட்ஸ் (esports) நிகழ்வான 'கேமிங் மாஸ்டர்ஸ்' ஐ தொடங்க ஜியோ மற்றும் மீடியா டெக் இணைந்து கூட்டு சேர்ந்துள்ளது.

ஆன்லைன் கேமிங் நிகழ்வு

ஆன்லைன் கேமிங் நிகழ்வு

ஜியோ கேம்ஸின் முதல் ஆன்லைன் கேமிங் நிகழ்வு - 'இந்தியா கா கேமிங் சாம்பியன்' என்ற போட்டி அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான பரிசு தொகை 12,50,000 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோ மற்றும் மீடியா டெக் இணைந்து நடத்தும் இந்த கேமிங் மாஸ்டர்ஸ் போட்டிக்கான விளையாட்டு வீரர்களின் முன்பதிவு இப்பொழுது துவங்கியுள்ளது.

மீடியா டெக் மற்றும் ஜியோ இணைந்து நடத்தும் கேமிங் போட்டி

மீடியா டெக் மற்றும் ஜியோ இணைந்து நடத்தும் கேமிங் போட்டி

கேமிங் மாஸ்டர்ஸ் என்பது மீடியா டெக் மற்றும் ஜியோ இணைந்து நடத்தும் ஆன்லைன் கேமிங் புரட்சியாகும். இது ஒரு மெய்நிகர் கேமிங் அரங்கில் விளையாட்டாளரின் திறமை, குழுப்பணி மற்றும் திறமையைச் சோதிக்க இந்த போட்டி அமைக்கப்பட்டுள்ளது,

முழு போட்டிகளும் ஜியோடிவி எச்டி எஸ்போர்ட்ஸ் சேனல் மற்றும் யூடியூப்பில் மூலம் லைவ் ஆக ஒளிபரப்பப்படும்.

முன்பதிவிற்கான இறுதி நாள்

முன்பதிவிற்கான இறுதி நாள்

கேமிங் மாஸ்டர்கள் கரேனாவின் ராயல் பேட்டில் டைட்டில், ஃப்ரீ ஃபயர் இடம்பெறும், இது ஜியோ கேம்ஸ் இயங்குதளத்தின் மூலம் ஜியோ மற்றும் ஜியோ அல்லாத பயனர்களுக்குக் கிடைக்கிறது. இந்த போட்டிக்கான முன்பதிவு காலம் ஏற்கனவே டிசம்பர் 29 முதல் துவங்கி ஜனவரி 9, 2021 நடைபெறுகிறது.

ஜியோ இணைந்து நடத்தும் இந்த கேமிங் போட்டிகள் ஜனவரி 13, 2021 முதல் மார்ச் 7, 2021 வரை நடைபெறும்.

பங்கேற்பு கட்டணம் எதுவும் கிடையாது

பங்கேற்பு கட்டணம் எதுவும் கிடையாது

ஆர்வமுள்ள வீரர்கள் play.jiogames.com/esports வலைப்பக்கத்திற்குச் சென்று வீரர்களின் பெயர்களைப் போட்டிக்காகப் பதிவு செய்துகொள்ளலாம். இந்த முன்பதிவு ஜியோ மற்றும் ஜியோ அல்லாத பயனர்களுக்குத் திறக்கப்பட்டுள்ளது. மற்ற போட்டிகளை போல் இந்த கேமிங் போட்டியில் பதிவு செய்யப் பங்கேற்பு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை.

Best Mobiles in India

English summary
Jio and MediaTek join hands to host 'Gaming Masters' event : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X