Home
News

ஏர்டெல், ஜியோ.. ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம்.. அதிக சலுகைகளை வழங்கும் நிறுவனம் எது?

ஜியோ (Jio) மற்றும் ஏர்டெல் (airtel) நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு ப்ரீபெய்ட் திட்டங்கள் அற்புதமான சலுகைகளை வழங்கி வருகின்றன. குறிப்பாக இந்நிறுவனங்கள் ப்ரீபெய்ட் திட்டங்களில் இலவச ஓடிடி சந்தா வழங்குவதால் நல்ல வரவேற்பு உள்ளன.

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டத்தை வைத்துள்ளன. குறிப்பாக இந்த ரூ.999 ப்ரீபெய்ட் திட்டத்தில் எந்த நிறுவனம் அதிக சலுகைகளை வழங்குகிறது என்று இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

Jio, Airtle.. ரூ.999 திட்டத்தில் அதிக சலுகைகளை வழங்கும் நிறுவனம் எது?

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டத்தில் (Airtel Rs 999 plan) தினமும் 2.5ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 210ஜிபி டேட்டா கிடைக்கிறது. அதேபோல் இதில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கிறது.

இதுதவிர 84 நாட்களுக்கு அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் வழங்கப்படுகிறது. மேலும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே (Airtel Xstream Play) சந்தா, RewardsMini சந்தா, அப்பல்லோ 24/7 சர்க்கிள், இலவச ஹெலோட்யூன்ஸ், விங்க் மியூசிக், அன்லிமிடெட் 5ஜி டேட்டா உள்ளிட்ட பல சலுகைகளை வழங்குகிறது இந்த அசத்தலான ஏர்டெல் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம்.

Jio, Airtle.. ரூ.999 திட்டத்தில் அதிக சலுகைகளை வழங்கும் நிறுவனம் எது?

அதேபோல் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே சந்தாவின் கீழ் சன் நெக்ஸ்ட் (Sun NXT), சோனிலிவ் (Sony LIV), லயன்ஸ்கேட்பிளே (Lionsgate Play), சவ்பால் (Chaupal), ஹோய்சோய் (Hoichoi), ஃபேன்கோட் (FanCode), மனோரமா மேக்ஸ் (ManoramaMax), ஷீமாரூமி (ShemarooMe), ஆல்ட் பாலாஜி (Alt Balaji), அல்ட்ரா (Ultra),ஈராஸ்நவ் (ErosNow), எபிக்ஆன் (EPICon), டாக்குபே (Docubay), நம்மபிளிக்ஸ் (Namma Flix), கிளிக் (Klikk) உள்ளிட்ட 20+ ஓடிடி ஆப்ஸ்களை பயன்படுத்த முடியும்.

ஜியோ நிறுவனத்தின் ரூ.909 ப்ரீபெய்ட் திட்டத்தில் (Jio Rs 909 Prepaid Plan) தினமும் 3ஜிபி டேட்டா கிடைக்கிறது. குறிப்பாக இந்த திட்டமும் 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. எனவே நீங்கள் இந்த ஜியோ ரூ.909 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 252ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளும் வழங்குகிறது ஜியோ ரூ.909 ப்ரீபெய்ட் திட்டம். இதுதவிர ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றுக்கான அணுகல் கூட இதில் உள்ளது. குறிப்பாக அன்லிமிடெட் 5ஜி டேட்டா வழங்குகிறது இந்த திட்டம்.

Jio, Airtle.. ரூ.999 திட்டத்தில் அதிக சலுகைகளை வழங்கும் நிறுவனம் எது?

எது சிறந்தது? ஜியோ நிறுவனத்தின் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது அதிக டேட்டா நன்மையை வழங்குகிறது. மற்றபடி இலவச ஒடிடி மற்றும் சிறந்த டேட்டா நன்மையை வழங்குகிறது ஏர்டெல் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம். எனவே ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது நல்லது.

மேலும் 2024 மக்களவை தேர்தலுக்குப் பிறகு டெலிகாம் துறையில் ரீசாஜ் கட்டண விலை உயர்வு (Recharge Tariff Hike) அறிவிக்கப்படும் எனத் தகவல்கள் வெளியானது. குறிப்பாக ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் கண்டிப்பாக ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தும். எனவே இப்போதே அதிக நாள் வேலிடிட்டி வழங்கும் ஒரு ப்ரீபெய்ட் திட்டங்களில் ரீசார்ஜ் செய்வது நல்லது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio and Airtel: What they Offer for Rs 999 to prepaid users: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X