Jio, Airtel.. தினமும் 3ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. அமேசான் பிரைம்.. இனி இந்த திட்டங்கள் தான் பெஸ்ட்..
ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் முன்பு கம்மி விலையில் அமேசான் பிரைம் சந்தா வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வந்தன. ஆனால் தான் இந்த திட்டங்களின் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். குறிப்பாக ஓடிடி தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை மக்கள் அதிகமாகப் பயன்படுத்தி வந்தனர்.
குறிப்பாக ஜியோ நிறுவனம் அமேசான் பிரைம் சந்தா வழங்கும் சில முக்கியமான திட்டங்களையும் நீக்கியது. தற்போது இந்நிறுவனங்கள் சில திட்டங்களில் மட்டுமே அமேசான் பிரைம் சந்தா நன்மையை வழங்கி உள்ளது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் தற்போது அமேசான் பிரைம் சந்தா வழங்கும் திட்டங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஜியோ ரூ.1029 ப்ரீபெய்ட் திட்டம் (Jio rs 1029 prepaid recharge plan) தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே இந்த இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 168ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது.
அதேபோல் ஜியோ ரூ.1029 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் உங்களுக்கு பிரைம் வீடியோ மொபைல் எடிஷன் சந்தா வழங்கப்படுகிறது. இதுதவிர ஜியோடிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் ( JioCloud) ஆகியவற்றுக்கான அணுகல் வழங்கும் ஜியோ ரூ.1029 ப்ரீபெய்ட் திட்டம். குறிப்பாக இந்த திட்டம் அன்லிமிடெட் 5ஜி டேட்டா வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.838 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் (airtel rs 838 prepaid recharge plan) தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்கும். அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். குறிப்பாக நீங்கள் இந்த ஏர்டெல் ரூ.838 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா நன்மை உள்ளது. அதேபோல் 56 நாட்களுக்கு அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் சந்தா வழங்குகிறது இந்த ஏர்டெல் திட்டம்.
அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினமும் 100 எஸ்எம்எஸ், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), விங்க் மியூசிக் ( Wynk Music), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle) உள்ளிட்ட நன்மைகளை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.838 திட்டம்.

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.1199 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் (airtel rs 1199 prepaid recharge plan) தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்கும். அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். குறிப்பாக நீங்கள் இந்த ஏர்டெல் ரூ.1199 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா நன்மை உள்ளது. பின்பு 84 நாட்களுக்கு அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் சந்தா வழங்குகிறது இந்த ஏர்டெல் திட்டம்.
அதன்பின்பு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினமும் 100 எஸ்எம்எஸ், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), rewards mini subscription, விங்க் மியூசிக் ( Wynk Music), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle) உள்ளிட்ட நன்மைகளை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.1199 திட்டம்.


Click it and Unblock the Notifications








