Home
News

ஏர்டெல் VS ஜியோ.. பட்ஜெட் விலையில் Netflix சந்தா.. தினமும் 3ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்.. எது சிறந்தது?

ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தியது. ஆனாலும் ஜியோ நிறுவனம் இதுவரை ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தவில்லை. அதேபோல் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் ஓடிடி நன்மைகளுடன் அதிக டேட்டாவை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது.

குறிப்பாக இப்போது மக்கள் வெறும் டேட்டா தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை மட்டும் தேர்வு செய்வதில்லை. அதாவது ஓடிடி தரும் ப்ரீபெய்ட் திட்டங்களைத் தான் அதிகம் தேர்வு செய்கின்றனர். அதன்படி ஏர்டெல் மற்றும் ஜியோ பயனர்களுக்கு தற்போது நெட்பிளிக்ஸ் மற்றும் அதிக டேட்டா தரும் ப்ரீபெயட் திட்டங்கள் உள்ளது. இப்போது அந்த திட்டங்களின் நன்மைகளை இங்கே சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஏர்டெல் VS ஜியோ.. பட்ஜெட் விலையில் நெட்பிளிக்ஸ் சந்தா.. எது சிறந்தது?

ஜியோ நிறுவனத்தின் ரூ.1099 ப்ரீபெய்ட் திட்டத்தில் (Jio Rs 1099 Plan) தினசரி 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. பின்பு இந்த திட்டத்தில் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே ஜியோ வாடிக்கையாளர்கள் ரூ.1099 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 168ஜிபி டேட்டாவை பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளன.

அதாவது ஜியோ ரூ.1099 ப்ரீபெய்ட் திட்டத்தில் இலவசமாக நெட்பிளிக்ஸ் (மொபைல்) சந்தா வழங்கப்படுகிறது. எனவே உங்களுக்குப் பிடித்த புதிய திரைப்படங்கள் மற்றும் வெப்சீரிஸ் போன்றவற்றை எளிமையாகப் பார்க்க முடியும். குறிப்பாக வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

அதேபோல் ஜியோடிவி (JioTV), ஜியோசினிமா (JioCinema), ஜியோ கிளவுட் ( JioCloud) ஆகியவற்றுக்கான அணுகல் ஜியோ ரூ.1099 ப்ரீபெய்ட் திட்டம் வழங்கும். பின்பு இந்த திட்டம் அன்லிமிடெட் 5ஜி டேட்டா வழங்குகிறது.

ஏர்டெல் VS ஜியோ.. பட்ஜெட் விலையில் நெட்பிளிக்ஸ் சந்தா.. எது சிறந்தது?

ஏர்டெல் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது (airtel rs 1499 plan) தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே இந்த இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 252ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த திட்டம்.

இதுதவிர ஏர்டெல் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டத்தில் இலவசமாக நெட்பிளிக்ஸ் சந்தா வழங்கப்படுகிறது. அதேபோல் ப்ரீ ஹாலோடியூன்ஸ், விங்க் மியூசிக் (Wynk Music) சப்ஸ்கிரிப்ஷன் மற்றும் அப்பல்லோ 24/7 சர்கிள் (Apollo 24|7 Circle) போன்ற சலுகைகள் கூட இந்த ஏர்டெல் திட்டம் வழங்குகிறது. பின்பு அன்லிமிடெட் 5ஜி டேட்டா வழங்குகிறது ஏர்டெல் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டம்.

ஏர்டெல் VS ஜியோ.. பட்ஜெட் விலையில் நெட்பிளிக்ஸ் சந்தா.. எது சிறந்தது?

எது சிறந்தது?
ஜியோ நிறுவனம் ரூ.1099 திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா வழங்கினாலும், நெட்பிளிக்ஸ் சந்தாவை மொபைல் அல்லது டேப்லெட் சாதனத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும். அதேசமயம் ஏர்டெல் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டம் தினமும் 3ஜிபி டேட்டா உடன் நெட்பிளிக்ஸ் சந்தாவை மொபைல், டேப்லெட், கணினி அல்லது ஸ்மார்ட் டிவியில் கூட பயன்படுத்த முடியும். எனவே ஏர்டெல் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேர்வு செய்வது நல்லது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio and Airtel offer special Netflix plan at low cost: Which is better?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X