Home
News

Jio-வை தூக்கி சாப்பிட Airtel.. அடிமட்ட விலைக்கு அன்லிமிடெட் டேட்டா.. எது கெத்துனு அடித்து காட்டியதா Airtel?

ஜூலை 3, 2024 ஆம் தேதி முதல், ஜியோ (Jio) மற்றும் ஏர்டெல் (Airtel) ஆகியவை தங்கள் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை அதிகரித்தன. போஸ்ட்பைட மற்றும் ப்ரீபெய்ட் ஆகிய இரண்டிலும் தனியார் டெலிகாம் ஜாம்பவான்கள் சராசரியாக 15 சதவீதம் வரை விலை உயர்வை அறிமுகப்படுத்தின. இந்த திருத்தத்தில் புதிய ரீசார்ஜ் விருப்பங்களை இரண்டு நிறுவனங்களும் அறிமுகம் செய்தன. பழைய திட்டங்களின் கீழ் கிடைத்த நன்மைகளிலும் சில திருத்தங்களை நிறுவனங்கள் மேற்கொண்டு வெளியிட துவங்கின. இது பல குழப்பங்களை உருவாக்கியது என்றே கூட நாம் கூறலாம்.

இப்போது எந்த விலை திட்டத்தில் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை அலசி ஆராய்வதற்கே வாடிக்கையாளர்களுக்கு ஒரு முழு நாள் தேவைப்படுகிறது. இதில் அடிமட்ட மலிவு விலைக்கு ரீசார்ஜ் செய்ய கிடைத்த திட்டங்கள் எல்லாம் கூட இப்போது 300 ரூபாய்க்கு மேல் சென்றுவிட்டதனால், மக்கள் சரியான ரீசார்ஜ் பேக்கை தேடி கண்டுபிடிப்பதில் கூட சிக்கல் எழுந்துள்ளது.

Jio-வை தூக்கி சாப்பிட Airtel.. அடிமட்ட விலைக்கு அன்லிமிடெட் டேட்டா..

Jio-வை தூக்கி சாப்பிட Airtel.. அடிமட்ட விலைக்கு அன்லிமிடெட் டேட்டா:

ஜியோ மற்றும் ஏர்டெல் வாடிக்கையாளர்களை பொறுத்த வரை எல்லோரும் அன்லிமிடெட் டேட்டா நன்மை கிடைக்கும் திட்டங்களை தான் தேடுகிறார்கள். அதிலும், குறைந்த விலையில் இரண்டு நெட்வொர்க்கிலும் இருந்து கிடைக்கும் அன்லிமிடெட் டேட்டா நன்மை திட்டங்களை தான் குறிவைத்து தேடி வருகிறார்கள். அத்தகைய திட்டங்களை தேடும் நபர்களில் நீங்களும் ஒருவர் என்றால், இந்த பதிவு உங்கள் தேடுதலை சுலபமாக்கும்.

ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டு திட்டங்களில் மலிவு விலையில் தற்போது ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் திட்டங்களை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். ஜியோவை பொறுத்தவரை அன்லிமிடெட் இலவச 5ஜி டேட்டா நன்மையை வழங்கும் திட்டம் ரூ. 198 விலையிலும், ஏர்டெல்லில் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை வழங்கும் திட்டம் ரூ. 349 விலையிலும் தற்போது ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது என்பதை தெரியப்படுத்திக்கொள்கிறோம்.

ஜியோ ரூ. 198 திட்டம் (Jio Rs 198 Plan):
ஜியோவின் ரூ. 198 திட்டம் 14 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இது இந்த செல்லுபடியாகும் காலத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை, நாள் ஒன்றுக்கு 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் தினசரி 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. ஜியோவின் 5G நெட்வொர்க் இயங்கும் பகுதிகளில் இந்த திட்டம் அன்லிமிடெட் 5ஜி டேட்டா நன்மையை வாரி வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் ரூ. 349 திட்டம் (Airtel Rs 349 Plan):
ஏர்டெல்லின் ரூ. 349 திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இந்த திட்டமும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை, தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் நன்மை மற்றும் தினசரி 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. ஜியோவின் சலுகையைப் போலவே, ஏர்டெல்லின் திட்டமும்அன்லிமிடெட் 5G டேட்டாவை வழங்குகிறது. ஆனால் இது 28 நாட்களுக்கு கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோ மற்றும் ஏர்டெல்லின் குறைந்தபட்ச '5G வரம்பற்ற டேட்டா' ரீசார்ஜ் திட்டங்களை ஒப்பிட்டுப் பார்த்தால், ஏர்டெல் மிகவும் மலிவான தேர்வாக தோன்றுகிறது. 28 நாட்களுக்கு ரூ. 349 விலையில், ஏர்டெல்லின் திட்டம், ஜியோவின் ரூ. 198 திட்டத்துடன் ஒப்பிடும்போது, ​​14 நாட்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. ஏர்டெல்லின் 28 நாட்கள் செல்லுபடியாகும் காலத்தைப் பொருத்த ஜியோ திட்டத்தை இரண்டு முறை ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

இது மொத்தம் ரூ. 396 ஆகும். இது ஏர்டெல்லின் ஒற்றை ரீசார்ஜை விட அதிக விலை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, மதிப்பை முன்னுரிமைப்படுத்துபவர்களுக்கு, ஏர்டெல்லின் குறைந்தபட்ச வரம்பற்ற 5G டேட்டா திட்டம் சிறந்த தேர்வாக அமைகிறது.

Best Mobiles in India

English summary
Jio and Airtel Low Price Prepaid Plan With Unlimited 5G Data Benefits Which Is Best In India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X