Jio சிம் இருக்கா? உஷார் சாரே.. Jio கொடுத்த வார்னிங் அலெர்ட்.. மிஸ்டு கால் வந்தா ரிடையால் செய்யாதீங்க.. ஏன்னா?
ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் அதன் கோடி கணக்கான வாடிக்கையாளர்களுக்கு ஒரே நேரத்தில் ஒரு அபாய எச்சரிக்கை செய்தியை (Warning alert message for Jio customers) வெளியிட்டுள்ளது. ஜியோ சிம் (Jio SIM) பயனர்களின் மொபைல் சந்தானத்திற்கு வெளிநாட்டு மொபைல் எண்கள் போன்ற வித்தியாசமான எண்களில் இருந்து வாய்ஸ் கால்கள் வந்தால் மிகவும் கவனமாக இருக்கும்படி எச்சரித்துள்ளது. ஏன் இந்த வாய்ஸ் கால் அழைப்புகளை ஜியோ பயனர்களை கவனத்துடன் கையாள வேண்டும்? ஒரு வேளை தெரியாமல் இந்த அழைப்புகளை ஏற்றல் என்னவாகும்? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ள்லாம்.
இந்தியாவில் முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வரும் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், பிரீமியம் ரேட் சர்வீஸ் ஸ்கேம் (Premium Rate Service Scam) என்ற புது வகை மோசடி குறித்து அதன் வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது. இந்தியாவில் உள்ள மொபைல் பயனர்களை (mobile users) குறிவைத்து நடத்தப்படும் இந்த புதுவகையான நூதன முறை மோசடியில் ஜியோ சிம் கார்ட் பயனர்கள் மாட்டிக்கொள்ள வேண்டாம் என்று ஜியோ எச்சரித்துள்ளது.

Jio சிம் இருக்கா? உஷார் சாரே.. Jio கொடுத்த வார்னிங் அலெர்ட்:
இந்த புதிய பிரீமியம் ரேட் சர்வீஸ் ஸ்கேம் (Premium Rate Service Scam) என்பது சர்வதேச மொபைல் எண்களில் இருந்து வரும் மிஸ்டு கால் மூலம் நடக்கிறது. உங்கள் எண்ணிற்கு வரும் சர்வதேச எண் மிஸ்டு கால் அழைப்பை நீங்கள் ஏற்க முயலும் பொழுது அந்த அழைப்பு கட் ஆகிவிடும். இது யாராக இருக்கும்? என்ன அவசரமோ? என்ற எண்ணத்தில் நீங்களும் அந்த சர்வதேச எண்ணிற்கு ரிடையால் செய்வீர்கள்.
அவ்வளவு தான் சோலி முடுஞ்சுது.. உங்கள் அழைப்பை மறுமுனையில் இருக்கும் நபர் ஏற்றவுடனே, உங்கள் அழைப்பு பிரீமியம் ரேட் சர்வீஸ் பிரிவிற்குள் சென்றுவிடும். இதன் சிறப்பு சேவைக்குள் உங்கள் அழைப்பு சென்றவுடன் ஒரு நிமிடத்திற்கு பல நூறு ரூபாய்கள் என்ற விதத்தில் உங்களுக்கு கட்டணம் விதிக்கப்பட்டு, அவை உங்களிடம் இருந்து வசூலிக்கப்படும் மக்களே.
எச்சரிக்கை கொடுத்த Jio.. பிரீமியம் ரேட் சர்வீஸ் ஸ்கேம் என்றால் என்ன? (What is mean by Premium Rate Service Scam)?
நீங்கள் அழைப்பை துண்டிக்காமல், அந்த அழைப்பில் நீங்கள் செலவழிக்கும் ஒவ்வொரு நொடிக்கும் காசு வசூலிக்கப்படும். அதேபோல், ஒரு சில நிமிடங்கள் எந்த அழைப்பில் நீங்கள் நீடித்திருந்தால் இறுதியில் பல நூறு ரூபாய் கட்டணம், ஆயிரம் ரூபாய் கட்டணமாக மாறக்கூடும். உங்களை அழைப்பில் தக்கவைத்துக்கொள்ளும்படியான தகவல்களை அந்த வாய்ஸ் காலில் நீங்கள் கேட்க முடியும்.
ஆகையால், இது போன்ற அழைப்புகள் அல்லது சர்வதேச எண்களில் இருந்து மிஸ்டு கால் நோட்டிபிகேஷனை உங்கள் போனில் பார்வையிட்டால், உடனே அந்த எண்ணிற்கு மீண்டும் அழைத்து பேச நினைக்காதீர்கள். மீறி நினைத்தால் உங்கள் பணம் முழுமையாக விரையமாகும் என்பதை தெளிவாக புரிந்துகொள்ளுங்கள். இந்த நூதன முறை மோசடியில் தற்போது பல லட்சம் மக்கள் சிக்கி பணத்தை இழந்து வருகின்றனர்.
இந்த மேசடி குறித்து மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள் மக்களே:
இதனால் தான், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், இந்த புதிய பிரீமியம் ரேட் சர்வீஸ் ஸ்கேம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே சென்றடைய செய்ய, புதிய எச்சரிக்கையை செய்தியை அதன் அணைத்து வாடிக்கையாளர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளது. இந்த புதிய மோசடி குறித்து, உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.


Click it and Unblock the Notifications








