நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய ஜியோ,ஏர்டெல், வோடபோனின் கம்மி விலை பலே திட்டங்கள்.

|

COVID-19 ஊரடங்கை முன்னிட்டு ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு ஒரு நாளைக்கு 2 ஜிபி இலவசம் டேட்டா நன்மையை வழங்குகிறது. இருப்பினும் வீட்டிலிருந்து வேலை பார்க்கும் வாடிக்கையாளர்களுக்காக அது போதியதாக இல்லை, எனவே ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஆகிய நெட்வொர்க்குகளின் கீழ் கிடைக்கப்பெறும் 1.5 ஜிபி, 2 ஜிபி மற்றும் 3 ஜிபி டேட்டா நன்மை அடங்கிய டாப் 10 சிறந்த திட்டங்களை இங்கே உங்களுக்காகத் தொகுத்துள்ளோம்.

ரூ.500 க்குள் கிடைக்கும் சிறந்த ஏர்டெல் திட்டங்கள்

ரூ.500 க்குள் கிடைக்கும் சிறந்த ஏர்டெல் திட்டங்கள்

வீட்டிலிருந்து வேலை பார்க்கும் தனது வாடிக்கையாளர்களுக்காக ஏர்டெல் நிறுவனம் தற்போது தினசரி 1.5 ஜிபி, 2 ஜிபி, 3 ஜிபி டேட்டா கிடைக்கும் திட்டங்களை 28 நாட்கள் மற்றும் 56 நாட்களுக்கு வேலிடிட்டியுடன் வழங்கி வருகிறது. இந்த திட்டங்களின் கீழ் உங்களுக்கு அதிக நன்மை வழங்கக்கூடிய திட்டம் என்ன என்பதை இப்பொழுது பார்க்கலாம்.

ஏர்டெல் ரூ.249 திட்டம்

ஏர்டெல் ரூ.249 திட்டம்

ஏர்டெலின் ரூ.249 திட்டத்தின் கீழ் பயனர்களுக்குத் தினமும் 1.5 ஜிபி டேட்டா, மற்ற நெட்வொர்க்குகளுக்கான வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் என்று 28 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. இத்திட்டத்தின் படி மொத்தம் 42 ஜிபி, 4 ஜி டேட்டா நன்மை உங்களுக்கு கிடைக்கிறது.

நட்சத்திரங்களிடையே தோன்றிய விசித்திரமான ஒளி.! நாசா கூறிய உண்மை என்ன தெரியுமா?நட்சத்திரங்களிடையே தோன்றிய விசித்திரமான ஒளி.! நாசா கூறிய உண்மை என்ன தெரியுமா?

ஏர்டெல் ரூ.298 திட்டம்

ஏர்டெல் ரூ.298 திட்டம்

ஏர்டெலின் ரூ.298 திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா, மற்ற நெட்வொர்க்குகளுக்கான வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் என்று 28 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. இத்திட்டத்தின் படி மொத்தம் 56 ஜிபி, 4 ஜி டேட்டா நன்மை உங்களுக்கு கிடைக்கிறது.

ஏர்டெல் ரூ.398 திட்டம்

ஏர்டெல் ரூ.398 திட்டம்

ஏர்டெலின் ரூ.398 திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு தினமும் 3 ஜிபி டேட்டா, மற்ற நெட்வொர்க்குகளுக்கான வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் என்று 28 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. இத்திட்டத்தின் படி மொத்தம் 84 ஜிபி, 4 ஜி டேட்டா நன்மை உங்களுக்கு கிடைக்கிறது.

ஏர்டெல் ரூ.449 திட்டம்

ஏர்டெல் ரூ.449 திட்டம்

ஏர்டெலின் ரூ.449 திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா, மற்ற நெட்வொர்க்குகளுக்கான வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் என்று 56 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. இத்திட்டத்தின் படி மொத்தம் 112ஜிபி, 4 ஜி டேட்டா நன்மை உங்களுக்குக் கிடைக்கிறது.

வோடபோன் ஐடியா ரூ.249 திட்டம்

வோடபோன் ஐடியா ரூ.249 திட்டம்

வோடபோன் ஐடியாவின் ரூ.249 திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா, மற்ற நெட்வொர்க்குகளுக்கான வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் என்று 28 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. இத்திட்டத்தின் படி மொத்தம் 42 ஜிபி, 4 ஜி டேட்டா நன்மை உங்களுக்கு கிடைக்கிறது.

கொஞ்சம் பொறுமை., Google playstore-ல் குவியும் டவுன்லோட்: whatsapp, facebook மிஞ்சும் ஆப்!கொஞ்சம் பொறுமை., Google playstore-ல் குவியும் டவுன்லோட்: whatsapp, facebook மிஞ்சும் ஆப்!

வோடபோன் ஐடியா ரூ.299 திட்டம்

வோடபோன் ஐடியா ரூ.299 திட்டம்

வோடபோன் ஐடியாவின் ரூ.299 திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா, மற்ற நெட்வொர்க்குகளுக்கான வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் என்று 28 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. இத்திட்டத்தின் படி மொத்தம் 56 ஜிபி, 4 ஜி டேட்டா நன்மை உங்களுக்கு கிடைக்கிறது.

வோடபோன் ரூ.398 திட்டம்

வோடபோன் ரூ.398 திட்டம்

வோடபோன் ஐடியாவின் ரூ.398 திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு தினமும் 3 ஜிபி டேட்டா, மற்ற நெட்வொர்க்குகளுக்கான வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் என்று 28 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. இத்திட்டத்தின் படி மொத்தம் 84 ஜிபி, 4 ஜி டேட்டா நன்மை உங்களுக்கு கிடைக்கிறது.

வோடபோன் ஐடியா ரூ.449 திட்டம்

வோடபோன் ஐடியா ரூ.449 திட்டம்

வோடபோன் ஐடியாவின் ரூ.449 திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா, மற்ற நெட்வொர்க்குகளுக்கான வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் என்று 56 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. இத்திட்டத்தின் படி மொத்தம் 112 ஜிபி, 4 ஜி டேட்டா நன்மை உங்களுக்கு கிடைக்கிறது.

ஜியோவின் சிறந்த திட்டங்கள்

ஜியோவின் சிறந்த திட்டங்கள்

ஜியோவின் கீழ் கிடைக்கப்பெறும் சிறந்த திட்டங்களை இப்போது பார்த்துவிடலாம், ரிலையன்ஸ் ஜியோ தற்போது தினசரி 1.5 ஜிபி, 2 ஜிபி, 3 ஜிபி டேட்டா கிடைக்கும் திட்டங்களை 28 நாட்கள் மற்றும் 56 நாட்களுக்கு வேலிடிட்டியுடன் வழங்கி வருகிறது. ஜியோ நெட்வொர்க்கில் ரூ.500க்குள் கிடைக்கும் சிறந்த நன்மை கொண்ட திட்டங்களைக் கீழே பட்டியலிட்டுள்ளோம்.

BSNL, Airtel ப்ரீபெய்ட் பேக் வேலிடிட்டி நீடிப்பு! இலவச டாக் டைம் வழங்கி அதிரடி அறிவிப்பு!BSNL, Airtel ப்ரீபெய்ட் பேக் வேலிடிட்டி நீடிப்பு! இலவச டாக் டைம் வழங்கி அதிரடி அறிவிப்பு!

ஜியோ ரூ.199 திட்டம்

ஜியோ ரூ.199 திட்டம்

ஜியோவின் ரூ.199 திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா, வரம்பற்ற ஜியோ - ஜியோ குரல் அழைப்பு, பிற ஆபரேட்டர்களுக்கான 1000 ஜியோ அல்லாத நிமிடங்கள் மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் என்று 28 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. இத்திட்டத்தின் படி மொத்தம் 42 ஜிபி 4 ஜி டேட்டா நன்மை உங்களுக்குக் கிடைக்கிறது. ஜியோ அல்லாத நிமிடங்கள் அதாவது, உங்களுடைய ஆஃப்-நெட் நிமிடங்கள் முடிந்ததும் கட்டணம் வசூலிக்கப்படும்.

ஜியோ ரூ.249 திட்டம்

ஜியோ ரூ.249 திட்டம்

ஜியோவின் ரூ.249 திட்டத்தின் கீழ் பயனர்களுக்குத் தினமும் 2 ஜிபி டேட்டா, வரம்பற்ற ஜியோ - ஜியோ குரல் அழைப்பு, பிற ஆபரேட்டர்களுக்கான 1000 ஜியோ அல்லாத நிமிடங்கள் மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் என்று 28 நாட்களுக்கு கிடைக்கிறது. இத்திட்டத்தின் படி மொத்தம் 56 ஜிபி, 4 ஜி டேட்டா நன்மை உங்களுக்குக் கிடைக்கிறது. ஜியோ அல்லாத ஆஃப்-நெட் நிமிடங்கள் முடிந்ததும் கட்டணம் வசூலிக்கப்படும்.

ஜியோ ரூ.349 திட்டம்

ஜியோ ரூ.349 திட்டம்

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.349 திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு தினமும் 3 ஜிபி டேட்டா, வரம்பற்ற ஜியோ - ஜியோ குரல் அழைப்பு, பிற ஆபரேட்டர்களுக்கான 1000 ஜியோ அல்லாத நிமிடங்கள் மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் என்று 28 நாட்களுக்கு கிடைக்கிறது. ஜியோ அல்லாத ஆஃப்-நெட் நிமிடங்கள் முடிந்ததும் கட்டணம் வசூலிக்கப்படும்.

Xiaomi அட்டகாச அறிவிப்பு: ரூ.10,600-க்கு அறிமுகமாகிறதா பக்கா 5G போன்?Xiaomi அட்டகாச அறிவிப்பு: ரூ.10,600-க்கு அறிமுகமாகிறதா பக்கா 5G போன்?

ஜியோ ரூ.444 திட்டம்

ஜியோ ரூ.444 திட்டம்

ஜியோவின் ரூ.444 திட்டத்தின் கீழ் பயனர்களுக்குத் தினமும் 2 ஜிபி டேட்டா, வரம்பற்ற ஜியோ - ஜியோ குரல் அழைப்பு, பிற ஆபரேட்டர்களுக்கான 2000 ஜியோ அல்லாத நிமிடங்கள் மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் என்று 56 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. இத்திட்டத்தின் படி மொத்தம் 112 ஜிபி, 4 ஜி டேட்டா நன்மை உங்களுக்குக் கிடைக்கிறது. ஜியோ அல்லாத ஆஃப்-நெட் நிமிடங்கள் முடிந்ததும் கட்டணம் வசூலிக்கப்படும்.

Best Mobiles in India

English summary
Jio, Airtel, Vodafone Top 10 Work From Home Plans Under Rs.500 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X