Jio, Airtel, Vodafone Idea.. ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம்.. எது அதிக சலுகை வழங்குகிறது? இதோ விவரம்..
கடந்த மாதம் ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) ஆகிய நிறுவனங்கள் 11 முதல் 25 சதவீதம் வரை ப்ரீபெய்ட் கட்டணங்களை உயர்த்தி அதிர வைத்தது. அதுவும் கம்மி விலையில் கிடைத்த அருமையான திட்டங்கள் விலை உயர்வைப் பெற்றதால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஆனாலும் இந்நிறுவனங்கள் பட்ஜெட் விலையில் இப்போது அதிக சலுகைகள் வழங்கும் திட்டங்களை வைத்துள்ளன.
சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா நிறுவனங்கள் ரூ.349 ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளன. இப்போது ரூ.349 ப்ரீபெய்ட் திட்டத்தில் எந்த நிறுவனம் அதிக சலுகைகளை வழங்குகிறது என்பதை இந்த பதிவில் சற்று விரவாகப் பார்க்கலாம்.

ஜியோ ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 349 Plan Details) தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த ஜியோ ரூ.349 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 56ஜிபி டேட்டா வழங்கப்படும். இதுதவிர பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.
வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது ஜியோ ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை இந்த திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும். குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 Kbps ஆக குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 349 Plan Details) ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 மாதம் ஆகும். எனவே நீங்கள் ஏர்டெல் ரூ.349 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்வதன் மூலம் மொத்தமாக 42ஜிபி டேட்டா கிடைக்கும் என்பதை நினைவில் கொள்க
அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம். ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play), விங்க் மியூசிக் ( Wynk Music), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle) உள்ளிட்ட நன்மைகள் இந்த ஏர்டெல் திட்டத்தில் கிடைக்கும்.
வோடபோன் ஐடியா ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம் (Vodafone Idea Rs.349 Plan Details) ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 மாதம் ஆகும். எனவே நீங்கள் வோடபோன் ஐடியா ரூ.349 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்வதன் மூலம் மொத்தமாக 42ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது வோடபோன் ஐடியா ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் (Weekend Data Rollover), டேட்டா டிலைட்ஸ் (Data Delights) மற்றும் பிஞ்ச் ஆல் நைட் டோட்டா (Binge All Night Data) போன்ற நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.
குறிப்பாக ரூ.349 திட்டத்தில் ஜியோ நிறுவனம் தான் அதிக டேட்டாவை வழங்குகிறது. ஆனால் ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் டேட்டாவை குறைவாக வழங்கினாலும் சில கூடுதல் சலுகைகளை வழங்குகிறது. எனவே அதிக டேட்டா தேவைப்படும் பயனர்கள் ஜியோவின் திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது நல்லது. கூடுதல் சலுகைகள் எதிர்பார்க்கும் பயனர்கள் ஏர்டெல், வோடபோன் திட்டங்களில் ரீசார்ஜ் செய்வது நல்லது.


Click it and Unblock the Notifications








