ரூ.349 ரீசார்ஜ் இனி ரூ.419.. Jio, Airtel, Vodafone Idea திட்டங்களின் விலை 20% அதிகரிக்கும்.. எப்போது முதல்?
2026 ஆம் ஆண்டில் பல வகையான துறைகளில் பல முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ள நிலையில், இந்திய டெலிகாம் துறையிலும் ஒரு பெரிய மாற்றம் வரப்போகிறது. இந்தியாவில் உள்ள 3 முக்கிய தனியார் டெலிகாம் ஆப்ரேட்டர்களுமே தத்தம் மொபைல் ரீசார்ஜ் விலைகளை கடுமையாக உயர்த்த உள்ளன.
ரிலையன்ஸ் ஜியோ (Jio), பாரதி ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vi) உள்ளிட்ட 3 இந்திய தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுமே 2026 ஆம் ஆண்டில் அதன் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் கட்டணங்களை 20% உயர்த்த வாய்ப்பு உள்ளதாக மோர்கன் ஸ்டான்லியை சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மோர்கன் ஸ்டான்லியின் இந்த அறிக்கை உண்மையாகும் பட்சத்தில்.. எடுத்துக்காட்டுக்கு, ரூ.349 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் ஜியோ மற்றும் ஏர்டெல் திட்டங்கள் ஆனது ரூ.70 வரை விலை உயர்வை காணலாம். இதன் மூலம் ரூ.349 ரீசார்ஜ் ஆனது ரூ.419 வரை விலை உயர்த்தப்படலாம்.
முன்னதாக அறிவிக்கப்பட்ட ரீசார்ஜ் கட்டண உயர்வுகள் ஆனது இந்திய டெலிகாம் நிறுவனங்கள் ஆனது தத்தம் திட்டங்களின் கட்டணங்களை உயர்த்த 2 வருட கால அவகாசம் எடுத்துகொள்வதை வெளிப்படுத்தி உள்ளன. நினைவூட்டும் வண்ணம் கடைசியாக அறிவிக்கப்பட்ட ரீசார்ஜ் விலை உயர்வு - ஜூலை 2024 இல் வந்தது. இந்த போக்கின்படி, அடுத்தது 2026 இல் வரக்கூடும்.
மோர்கன் ஸ்டான்லியின் கூற்றுப்படி, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அடுத்த ஆண்டு மீண்டும் 20% வரை கட்டணங்களை உயர்த்தலாம். இப்போதைக்கு டெலிகாம் நிறுவனங்கள் மறைமுகமான விலை உயர்வையே அமல்படுத்தி வருகின்றன. அதாவது ஒரு திட்டத்தின் வேலிடிட்டியை குறைப்பது, ஓடிடி நன்மைகளை சிறந்த அல்லது அதிக விலை கொண்ட திட்டங்களுடன் வழங்குவது போன்ற நடவடிக்கைகளை மட்டுமே செய்து வருகின்றன.
மேலும் கடந்த பல மாதங்களாவே அன்லிமிட்ட் 5ஜி டேட்டா நன்மை ஆனது 2ஜிபி அல்லது அதற்கு மேலான டெய்லி டேட்டாவை வழங்கும் திட்டங்களுடன் மட்டுமே இணைக்கப்படுகின்றன. அடுத்த விலை உயர்வில், 5ஜி நெட்வொர்க்கிற்கான அணுகல் இன்னும் விலை உயர்ந்ததாக மாறக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மோர்கன் ஸ்டான்லியின் ஆய்வாளர்களின் கூற்றுப்படி 2026 ஆம் ஆண்டில் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் ஆகிய இரண்டிலும் 16 முதல் 20% வரை கட்டண அதிகரிப்பு இருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம், இது F27 இல் நிறுவனங்களுக்கு வலுவான ஏஆர்பியு (ARPU) அதிகரிப்பை ஏற்படுத்தும்.
ஏஆர்பியு அதிகரிப்பு ஆனது டெலிகாம் துறைக்கு பெரிதும் பயனளிக்கும். பாரதி ஏர்டெல் ஆனது 2026 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டின் இறுதியில் ரூ.256 என்கிற ஏஆர்பியு (ஒரு பயனருக்கு சராசரி வருவாய்) என்கிற நிலையில் இருக்கும், மற்றொரு சுற்று கட்டண உயர்வுடன் ரூ.300 என்ற ஏஆர்பியு-வை எளிதாக தொடக்கூடும்.
தற்போதைய கட்டணங்களில் 20% உயர்வு தொலைத்தொடர்பு நிறுவனங்களின் உயர்மட்ட வருவாயை அதிகரிக்கும், இது அவர்களின் லாபத்தையும் சாதகமாக அதிகரிக்கும். ஏர்டெல் மற்றும் ஜியோஆகிய 2 நிறுவனங்களுமே தங்கள் வாடிக்கையாளர்களை இழக்கவில்லை என்றாலும், வோடபோன் ஐடியா இழந்து வருகிறது. ஆக அடுத்த அடுத்த உயர்வு, எப்போதும் போல, சிம் ஒருங்கிணைப்பு மற்றும் குறுகிய காலத்தில் பெரிய அளவிலான சந்தாதாரர் இழப்பிற்கு வழிவகுக்கும். இருப்பினும், இது எப்போதும் போல, இரண்டு முதல் மூன்று காலாண்டுகளில் தலைகீழாக மாறும்.
பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் கட்டண உயர்வு ஆனது ரூ.300 என்கிற ஏஆர்பியு-வை தாண்டுவது மட்டுமல்லாமல், 2026 இல் ஏற்பட் உள்ள கட்டண உயர்வை விட வேறு எந்த கட்டண உயர்வும் இல்லாமலேயே ரூ.400 என்கிற ஏஆர்பியு-வை தாண்டும் என்று மோர்கன் ஸ்டான்லி மதிப்பிட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications








