Home
News

ஜியோ ப்ரீபெய்ட் சிம் ஆக்டிவ்.. ரூ.149 எடுத்து வைங்க.. டெலிகாமில் வரும் மாற்றம்.. ஏர்டெல்லுக்கும் பொருந்தும்!

ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் நடுத்தர மக்கள் பயன்படுத்தும் மினிமம் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் கட்டணங்களை மறைமுக உயர்த்தி வருகின்றன. குறைந்தபட்சம் ரூ.150 இருந்தால் மட்டுமே, இன்கமிங் கால் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை பெறும் காலம் நெருங்கிவிட்டது. இதுகுறித்த விவரம் இதோ.

இந்தியாவில் 90 சதவீதத்துக்கும் அதிகமான டெலிகாம் வாடிக்கையாளர்கள், ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Ideo) ஆகிய நிறுவனங்களின் சிம் கார்டுகளையே பயன்படுத்துகின்றனர். ஆகவே, இந்த நிறுவனங்களின் ரீசார்ஜ் கட்டணங்கள் மாற்றப்பட்டால், மக்களும் அதற்கு ஏற்ப மாறிக்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு வந்துவிட்டனர்.

ஜியோ ப்ரீபெய்ட் சிம் ஆக்டிவ்! ரூ.149 எடுத்து வைங்க! டெலிகாமில் மாற்றம்

இதையறிந்த அந்த மூன்று நிறுவனங்களும் இன்கமிங் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் பெறும் சலுகை கொண்ட மினிமம் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை படிப்படியாக அதிகரிக்க தொடங்கிவிட்டன. இனி ஜியோவில் ரூ.129 திட்டம், ஏர்டெல்லில் ரூ.99 திட்டம் கிடைக்காது. அதற்கு பதிலாக கூடுதல் விலைக்கு வந்துள்ள திட்டங்களை பற்றி இப்போது தெரிந்துகொள்வோம்.

ஜியோ ரூ 149 திட்ட விவரங்கள் (Jio Rs 149 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், 1 ஜிபி டெய்லி டேட்டா (1GB Daily Data), அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) மற்றும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் (100 SMS/Day) சலுகைகள் வழங்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், ஜியோ டிவி (JioTV), ஜியோசினிமா (JioCinema) மற்றும் ஜியோகிளவுட் (JioCloud) ஆகியவற்றின் சப்ஸ்கிரிப்ஷனும் கொடுக்கப்படுகிறது. மேலும், ஜியோ ட்ரூலி அன்லிமிடெட் 5ஜி (Jio Truly Unlimited 5G) சலுகையும் இந்த திட்டத்துக்கு வழங்கப்படுகிறது. அதாவது, ஜியோ வெல்கம் ஆஃபர் (Jio Welcome Offer) பெறும் கஸ்டமர்களுக்கு, பிரத்யேக டேட்டா திட்டம் மூலம் அன்லிமிடெட் 5ஜி சேவை ப்ரீயாக வழங்கப்படும்.

இந்த சலுகை 5ஜி சேவை கிடைக்கும் நகரங்களுக்கு மட்டுமே பொருந்த கூடியதாகும். இந்த திட்டத்துக்கு முன்பு வெறும் ரூ.129 விலையில் 14 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டம் இருந்தது. இதற்கு 1 ஜிபி டெய்லி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகைகள் வழங்கப்பட்டது. இப்போது, இந்த திட்டம் கைவிடப்பட்டது.

ஏர்டெல் ரூ.155 திட்ட விவரங்கள் (Airtel Rs 155 Plan Details): ஏர்டெல் நிறுவனம் வெறும் ரூ.99 மதிப்புள்ள திட்டம் மூலம் மினிமம் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் கட்டணத்தை விதித்திருந்தது. ஆனால், இந்த திட்டம் 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து படிப்படியாக கைவிடப்பட்டது.

அதற்கு பதிலாக மினிமம் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் கட்டணம் ரூ.155ஆக அதிகரிக்கப்பட்டது. இந்த ரூ.155 திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், உங்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 300 எஸ்எம்எஸ்கள் மற்றும் 1 ஜிபி தினசரி டேட்டா கிடைக்கிறது. இந்த திட்டத்துக்கு 24 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது.

வோடபோன் ஐடியா ரூ 99 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 99 Plan Details): ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களை ஒப்பிடுகையில், வோடபோன் ஐடியாவில் மட்டுமே வெறும் ரூ.99 விலையில் மினிமம் ப்ரீபெய்ட் திட்டம் கிடைக்கிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், ரூ.90 மதிப்பிலான வேலிடிட்டி டாக்டைம் மற்றும் 200 எம்பி டேட்டா கிடைக்கும்.

இந்த திட்டத்தில் வாய்ஸ் கால்களுக்கு மலிவான கட்டணம் வசூலிக்கப்படும். ஒரு செகண்ட்டுக்கு 2.5 பைசா வீதம் லோக்கல் மற்றும் எஸ்டிடி கால்களுக்கு வசூலிக்கப்படும். இந்த திட்டத்தில் எஸ்எம்எஸ் சலுகைகள் வழங்கப்படாது. இந்த திட்டம் மிகவும் குறைவான சலுகைகளை கொண்டிருந்தாலும், வெறும் ரூ.99 இருந்தால், ரீசார்ஜ் செய்துகொள்ள முடியும்.

இன்கமிங் கால்கள் மற்றும் மெசேஜ்களை பெற்றுக்கொள்ள தொடர்ந்து பெறலாம். வேறு எந்த டெலிகாம் நிறுவனங்களும், இவ்வளவு குறைவான விலைக்கு டேட்டா, வாய்ஸ் கால்கள் கொண்ட திட்டத்தை வழங்கவில்லை. இருப்பினும், இந்த திட்டத்தை பல்வேறு சர்கிள்களில் வோடபோன் ஐடியா நிறுவனம் வழங்குவதை படிப்படியாக குறைத்து வருகிறது.

வரும் மாதங்களில் இந்த திட்டம் கைவிடப்பட வாய்ப்புள்ளது. இந்த விலைக்கு அடுத்தபடியாக ரூ.129 விலையில் வோடபோன் ஐடியாவில் மற்றொரு திட்டம் இருக்கிறது. இந்த திட்டத்திலும் எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்காது. இருப்பினும், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 200 எம்பி டேட்டா வழங்கப்படும். இதற்கு 18 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Airtel Vodafone Idea Minimum Recharge Plan List With Rs 149 Rs 155 Rs 99 Prepaid Packs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X