Jio, Airtel, Vodafone கஸ்டமர்கள் தலையில் இடி.. 2025 இல் மீண்டும் ரீசார்ஜ் கட்டணம் உயரலாம்.. எவ்வளவு?
கடந்த ஜூலை 2024 இல் ஏர்டெல் (Airtel), ஜியோ (Jio) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) ஆகிய 3 தனியார் நிறுவனங்களும் திடீரென செய்த காரியத்தை யாரும் மறந்திருக்க மாட்டோம். இம்மூன்று நிறுவனங்களும் தத்தம் மொபைல் ரீசார்ஜ் கட்டணங்களை 25% வரை உயர்த்தி வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கின.
மேலோட்டமாக பார்த்தால் அதுவொரு அநியாய விலை உயர்வாக தெரிந்தாலும் கூட, இந்திய டெலிகாம் துறையில் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்கு பிறகு வந்ததால், 25% வரையிலான விலை உயர்வில் - கொஞ்சம் நியாயமும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் ஒரு வருட இடைவெளியில் இரண்டாவது விலை உயர்வு வந்தால் - நிச்சயம் அது அநியாயம் தான்!

தனியார் டெலிகாம் ஆபரேட்டர்கள் ஆன ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), பார்தி ஏர்டெல் (Bharti Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) ஆகிய மூன்று நிறுவனங்களும், இந்த 2025 ஆம் ஆண்டில் மீண்டும் ரீசார்ஜ் கட்டணங்களை 10% உயர்த்லாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
ஃபைனனாஷியல் எக்ஸ்ப்ரெஸ்-ன் சமீபத்திய அறிக்கையின்படி, தனியார் டெலிகாம் ஆபரேட்டர்கள் ஆனது பணமாக்குதலின் மீது தங்கள் கவனத்தை தொடரக்கூடும் என்பதால் 2025 ஆம் ஆண்டில் மீண்டுமொரு கட்டண உயர்வுக்கு வாய்ப்பு இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்நிறுவனங்கள் 5ஜி திட்டங்களுக்கான விலையையும் அறிமுகப்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளனர்.
ஆய்வாளர்களின் கூற்றுப்படி 2025 ஆம் ஆண்டில் ஜியோவின் கவனம் அதன் வளர்ச்சியை அதிகரிப்பதன் மீது இருக்கும். ஆகையால் இந்நிறுவனம் மொபைல் ரீசார்ஜ்களுக்கு அதிக கட்டணம் வசூலிப்பதை தேர்வு செய்யும். மறுகையில் உள்ள பார்தி ஏர்டெல் நிறுவனமானது சிறந்த ரோஸ்-க்கான (ROCE) கட்டணங்களை உயர்த்த விரும்புகிறது.
கடைசியாக, அரசாங்கமே மிகப் பெரிய பங்குதாரராக இருப்பதால், விஐஎல் நிறுவனமும் கட்டண உயர்வை ஆதரிக்கலாம். இப்படி செய்வதன் மூலம் இம்மூன்று நிறுவனங்களின் ஏஆர்பியு (ARPU) ஆனது, அதாவது ஒரு பயனரின் சராசரி வருவாய் (Average revenue per user) ஆனது குறைந்தபட்சம் 25% அதிகரிக்கும். ஒட்டுமொத்தமாக 2025 ஆம் ஆண்டானது தனியார் தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களுக்கான வளர்ச்சி ஆண்டாக இருக்கலாம்.
விலை உயர்வு ஒருபக்கம் இருக்க, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) ஆனது அரசாங்கமானது ஜியோ, ஏர்டெல், விஐ, பிஎஸ்என்எல் ஆகிய 4 டெலிகாம் நிறுவனங்களுக்கும் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது மற்றும் அதை 2025 ஏப்ரல் 1 ஆம் தேதிக்குள் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவைகளை மேம்படுத்தும் நோக்கத்தின் கீழ் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமானது 4 தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களும், தத்தம் வலைத்தளங்களில் விரிவான நெட்வொர்க் கவரேஜ் வரைபடங்களை (Detailed network coverage maps) வெளியிடுமாறு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் டெலிகாம் நிறுவனங்களின் சேவையின் தரம் (Quality of service - QoS) மேம்படும் என்று டிராய் நம்புகிறது
மேலும் நாட்டில் உள்ள 1.2 பில்லியன் மொபைல் பயனர்களுக்கு, எந்த தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் அல்லது எந்த நிறுவனத்திற்கு இடம்பெயர வேண்டும் என்கிற முடிவுகளை எடுக்க மிகவும் உதவியாக இருக்கும் என்றும் நம்புகிறது. டிராய்-ன் புதிய ஆணையின்படி, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் 2ஜி, 3ஜி, 4ஜி மற்றும் 5ஜி நெட்வொர்க் கவரேஜைக் காண்பிக்கும் புவியியல் வரைபடங்களை தத்தம் வலைத்தளங்களில் காண்பிக்க வேண்டும்.
இதன் மூலம் பயனர்கள் தங்கள் பகுதியில் எந்த ஆபரேட்டர் சிறந்த கனெக்டிவிட்டியை வழங்குகிறது என்பதை மதிப்பீடு செய்ய முடியும். மேலும் புதிய சிம் கார்டை தேர்ந்தெடுக்கும் செயல்முறையை இன்னும் எளிதாக்கும். இப்போது வரை, ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே இத்தகைய விரிவான கவரேஜ் தகவலை பயனர்களுடன் பகிர்ந்துகொள்கிறது. இது அனைத்து வட்டங்களுக்கும் விரிவடைய உள்ளது. இந்த வரைபடங்கள் ஆனது அந்தந்த டெலிகாம் நிறுவனங்களின் மொபைல் ஆப்கள் மூலம் எளிதாக அணுகும்படி இருக்கும்.


Click it and Unblock the Notifications








