Home
News

Jio, Airtel, Vi சிம் இருக்கா? 1 நாள் வேலிடிட்டி.. 3 டேட்டா வவுச்சர்களில் எதுல லாபம் அதிகம்.. இப்போ பாக்கலாம்!

ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனங்களின் கஸ்டமர்களுக்கு 1 நாள் வேலிடிட்டியில் கிடைக்கும் டேட்டா வவுச்சர்களை (Data Voucher) இங்கே கொடுத்துள்ளோம். இதில் எந்த நிறுவனத்தில் என்ன விலைக்கு டேட்டா வவுச்சர் கிடைக்கிறது என்பதை கொடுத்துள்ளோம். ஆகவே, இதில் எந்த டேட்டா வவுச்சர் பெஸ்ட் என்பதை அந்தந்த நிறுவனங்களின் கஸ்டமர்களே முடிவு செய்து கொள்ளலாம்.

அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) இருக்கும் கஸ்டமர்களுக்கு டேட்டா வவுச்சர்களே தேவைப்படாது. ஆனால், 4ஜி டேட்டாவை (4G Data) சலுகையை கொண்ட ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு நிச்சயம் டேட்டா வவுச்சர் தேவைப்படும். ஒரு நாளுக்கு ஒதுக்கப்பட்ட டேட்டா முடிந்தவுடன் உடனே டேட்டா வவுச்சருக்கே கஸ்டமர்கள் செல்வார்கள்.

Jio, Airtel, Vi சிம் இருக்கா? 1 நாள் வேலிடிட்டி.. 3 டேட்டா வவுச்சர்!

இதில் பெரும்பாலான கஸ்டமர்கள் ஒரு நாளுக்கு மட்டுமே கிடைக்கும் டேட்டா வவுச்சரை மட்டுமே ரீசார்ஜ் செய்வார்கள். ஏனென்றால், அடுத்த நாளுக்கான டேட்டா நள்ளிரவில் மீண்டும் கிடைக்க தொடங்கிவிட்டும். ஆகவே, இடைப்பட்ட சில மணி நேரங்களுக்கு அவர்களுக்கு ஒரு நாள் வேலிடிட்டி கொண்ட மலிவான டேட்டா வவுச்சரே போதுமானதாக இருக்கிறது.

இதில் பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள், வெவ்வேறு விலைக்கு திட்டங்களை கொடுக்கின்றன. ஆனால், அதற்கு ஏற்ப விலை மாறுதல்களும் இருக்கின்றன. ஆகவே, அந்த திட்டங்களின் சலுகைகளை பார்த்தால் மட்டுமே உங்களுக்கு அது புரிய வரும். இப்போது, ஒவ்வொரு திட்டமாக இங்கே தெரிந்து கொள்ளலாம்.

ஜியோ ரூ 19 திட்ட விவரங்கள் (Jio Rs 19 Plan Details): இந்த டேட்டா திட்டத்தில் 1 ஜிபி டேட்டா மட்டுமே கொடுக்கப்படுகிறது. இந்த டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கிடைக்கும். ஆனால், இதற்கு ஆக்டிவ் திட்டம் உங்களிடம் இருக்க வேண்டும். இதற்கு 1 நாள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, அதற்கு பிறகு டேட்டாவை பயன்படுத்த முடியாது.

சொல்லப்போனால், ஜியோவில் இதைவிட மலிவான விலைக்கு மற்றொரு டேட்டா திட்டம் இருக்கிறது. ஆனால், அதில் 1 நாட் வேலிடிட்டி கிடைக்காது. ஆகவே, அதை இந்த பட்டியலில் சேர்க்கவில்லை. இருப்பினும், அதன் சலுகைகளை பார்க்க வேண்டி இருக்கிறது. இந்த திட்டம் ரூ.11 விலைக்கு கிடைக்கிறது. ஆனால், 1 மணி நேரம் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கிறது.

இருப்பினும், அந்த 1 மணி நேரத்தில் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். அதிகபட்சம் 10 ஜிபி டேட்டா வரையில் பெற்று கொள்ளலாம். அதற்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்துக்கு டேட்டா சலுகை குறைக்கப்படும். இந்த திட்டமானது, குறிப்பிட்ட கஸ்டமர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஏனென்றால், 1 மணி நேரத்துக்குள் பயன்படுத்தி முடிக்க வேண்டும்.

ஏர்டெல் ரூ 22 திட்ட விவரங்கள் (Airtel Rs 22 Plan Details): இந்த ஏர்டெல் திட்டத்துக்கும் 1 நாள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாளில் ஜியோவை போலவே 1 ஜிபி டேட்டா மட்டுமே பயன்படுத்த கிடைக்கிறது. ஆகவே, அடுத்த நாள் காலாவதியாகிவிடும். ஆகவே, இரவு நேரத்தில் ரீசார்ஜ் செய்யும்போது, அது நள்ளிரவு காலாவதியாகிவிடும் என்பதை நினைவில் வையுங்கள்.

வோடபோன் ஐடியா ரூ 23 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 23 Plan Details): இந்த வோடபோன் ஐடியா டேட்டா திட்டத்துக்கும் 1 நாள் வேலிட்டி மற்றும் 1 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இந்த டேட்டாவுக்கு பிறகு போஸ்ட் டேட்டா கிடைக்கிறது. இந்த திட்டங்களில் எது பெஸ்ட் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Airtel Vodafone Idea Data Vouchers With 1 Day Validity Check Difference
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X