Home
News

Jio, Airtel, Vi-இருக்கா? இனிமே ரூ.349-க்கு ரீசார்ஜ்.. வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ்.. அன்லிமிடெட் 5ஜி!

இந்தியாவில் அடிமட்ட விலைக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகையை கொடுக்கும் ப்ரீபெய்ட் திட்டம் வேண்டுமானால், ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), பார்தி ஏர்டெல் (Bharti Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) ஆகிய நிறுவனங்களில் தலா ஒரு திட்டம் இருக்கிறது. அதாவது, 28 நாட்கள் வேலிடிட்டியில் வழக்கமாக கிடைக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரி டேட்டா, எஸ்எம்எஸ் சலுகைகளுடன் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவையும் கொடுக்கும் திட்டங்களாக இவை இருக்கின்றன. இதுகுறித்த விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஜியோ மலிவான 5ஜி திட்டம் (Jio Cheapest 5G Plan): ஜியோவில் மட்டுமே மற்ற நிறுவனங்களைவிட மலிவான விலைக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா திட்டங்கள் தொடங்குகின்றன. அதாவது, ரூ.198 முதல் 5ஜி திட்டங்கள் ஜியோவில் இருக்கிறது. இந்த விலைக்கு ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாவில் திட்டங்கள் கிடையாது. அதே நேரத்தில் ரூ.198 மதிப்பிலான திட்டத்தில் 14 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கிறது.

Jio, Airtel, Vi-இருக்கா? இனிமே ரூ.349-க்கு ரீசார்ஜ்.. வாய்ஸ் கால்கள்!

ஆகவே, 28 நாட்கள் வேலிடிட்டியுடன் தொடங்கும் திட்டங்களை மலிவான 5ஜி திட்டமாக இங்கே கணக்கில் எடுத்துள்ளோம். அதனடிப்படையில் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் மலிவான விலைக்கு கிடைக்கும் 5ஜி திட்டமாக ஜியோ ரூ 349 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 349 Prepaid) இருக்கிறது. இந்த திட்டத்தின் சலுகைகளை பார்க்கையில், அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local) மற்றும் எஸ்டிடி (STD) வாய்ஸ் கிடைக்கிறது. ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) வருகிறது.

இந்த திட்டத்துக்கு கிடைக்கும் 28 நாட்கள் வேலிடிட்டி முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா மற்றும் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இதுபோக 2 ஜிபி டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவை (Post Data) கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ள முடியும். மேலும், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகைகளை இந்த ஜியோ ரூ 349 ப்ரீபெய்ட் திட்டம் கொடுக்கிறது.

Jio, Airtel, Vi-இருக்கா? இனிமே ரூ.349-க்கு ரீசார்ஜ்.. வாய்ஸ் கால்கள்!

இந்த டேட்டா, வாய்ஸ், எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகைகள் போக ஜியோ ஏஐ கிளவுட் (Jio AICloud) மற்றும் ஜியோ டிவி (Jio TV) சலுகைகள் கிடைக்கிறது. இதில் ஏஐ கிளவுட் மூலம் 50 ஜிபி ஸ்டோரேஜ் பெற்று கொள்ளலாம். இந்த திட்டத்துக்கு ஜியோ அன்லிமிடெட் ஆஃபர் (Jio Unlimited Offer) சலுகையின் கீழ் ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தா (JioHotstar Mobile) கூடுதலாக கிடைக்கிறது.

இந்த ஓடிடி சலுகைக்கு 90 நாட்கள் சந்தா கிடைக்கும். ஆனால், ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு மட்டுமே, இந்த ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தா கிடைக்கும். ஏனென்றால், ஐபிஎல் போட்டிகளை முன்னிட்டு இந்த சந்தா கொடுக்கப்படுகிறது. ஆனால், இதில் ஒன்றை கஸ்டமர்கள் கவனிக்க வேண்டும். அதாவது, இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 28 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கிறது.

ஆனால், ஜியோஹாட்ஸ்டார் சந்தாவானது 90 நாட்களுக்கு கிடைக்கிறது. ஆகவே, ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி முடிந்த பிறகு அடுத்த 48 மணி நேரத்துக்குள் புதிய ரீசார்ஜ் செய்ய வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே இந்த ஜியோஹாட்ஸ்டார் சந்தாவை 90 நாட்கள் முழுவதும் பயன்படுத்த முடியும். ஆகவே, இந்த மலிவு விலை அன்லிமிடெட் 5ஜி டேட்டா திட்டத்தில் ஓடிடி சலுகையும் கிடைப்பது வரவேற்க வேண்டியது.

Jio, Airtel, Vi-இருக்கா? இனிமே ரூ.349-க்கு ரீசார்ஜ்.. வாய்ஸ் கால்கள்!

ஏர்டெல் மலிவான 5ஜி திட்டம் (Airtel Cheapest 5G Plan): ஜியோ நிறுவனத்தைவிட கூடுதலான விலைக்கு ஏர்டெல்லில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா திட்டம் தொடங்குகிறது. ஆனால், அதற்கு ஏற்ப பிரத்யேக சலுகைகளை கொண்டிருக்கிறது. அதாவது, ஏர்டெல் ரூ 379 ப்ரீபெய்ட் திட்டமானது (Airtel Rs 379 Prepaid Plan) 1 மாத வேலிடிட்டியுடன் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை கஸ்டமர்களுக்கு கொடுக்கிறது.

இது ஜியோவை விட அதிக வேலிடிட்டியாகும். இந்த ஏர்டெல் திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 1 மாதம் முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா மட்டுமல்லாமல், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் முந்தைய திட்டத்தை போலவே 2 ஜிபி டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டாவை பெற்று கொள்ளலாம். வாய்ஸ் கால்கள் சலுகைகளும் முந்தைய திட்டத்தை போலவே இருக்கின்றன.

ஆகவே, அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்கள், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ளலாம். இந்த சலுகைகள் போக ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப் (Airtel Xstream App) சலுகை மூலம் பிரீமியம் அல்லாத கன்டென்ட்கள் கிடைக்கின்றன. ஜியோ நிறுவனத்தின் ஜியோ டிவி கிடைப்பதால், இதில் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப் கிடைக்கிறது. இதுபோக ஸ்பேம் கால்கள் & ஸ்பேம் எஸ்எம்எஸ் அலெர்ட் கிடைக்கிறது.

இதற்கு கட்டணம் கிடையாது. இலவசமாக கொடுக்கப்படுகிறது. இந்த சலுகைகளுக்கு அடுத்தாக அப்பல்லோ 24/7 சர்க்கிள் (Apollo 24/7 Circle) மெம்பர்ஷிப்பை இதில் ஏர்டெல் கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். ஆனால், இந்த மெம்பர்ஷிப் 90 நாட்களுக்கு கிடைக்கிறது. ஜியோவை போலவே ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes) சலுகையானது மாதத்துக்கு ஒன்று என்னும் கணக்கில் கஸ்டமர்களுக்கு கொடுக்கப்படுகிறது.

Jio, Airtel, Vi-இருக்கா? இனிமே ரூ.349-க்கு ரீசார்ஜ்.. வாய்ஸ் கால்கள்!

வோடபோன் ஐடியா மலிவான 5ஜி திட்டம் (Vodafone Idea Cheapest 5G Plan): வோடபோன் ஐடியா நிறுவனத்திலும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா திட்டங்கள் இருக்கின்றன. ஆனால், மும்பை சர்க்கிளில் இருக்கும் கஸ்டமர்களுக்கு மட்டுமே இப்போதைக்கு கிடைக்கிறது. இதே விலையில் மற்ற சர்க்கிள்களிலும் வோடபோன் ஐடியா நிறுவனத்தின் 5ஜி திட்டங்கள் கிடைக்க இருப்பதால் அதையும் கணக்கில் எடுத்து கொள்ளலாம்.

வோடபோன் ஐடியா ரூ 299 ப்ரீபெய்ட் திட்டமானது (Vodafone Idea Rs 299 Prepaid) மலிவான விலைக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை கொடுக்கும் திட்டமாக இருக்கிறது. இந்த திட்டத்தின் விலையானது ஜியோ, ஏர்டெல் நிறுவனத்தைவிட மலிவாக இருக்கிறது. அதே நேரத்தில் டேட்டாவில் குறைவாக சலுகைகளை கொடுக்கிறது. அதாவது, இதில் நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா மட்டுமே கஸ்டமர்களுக்கு கொடுக்கப்படுகிறது.

ஆனால், ஜியோ, ஏர்டெல்லில் 2 ஜிபி டேட்டா கிடைத்தது. மற்ற சலுகைகளை பார்க்கையில், 28 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 100 எஸ்எம்எஸ்கள் சலுகையை கொடுக்கிறது. இதில் கூடுதலாக வேறு எந்த சலுகைகளும் கிடைக்காது. இந்தியாவில் 5ஜி டேட்டாவை பயன்படுத்த வேண்டுமானால், அடிமட்ட விலையில் கிடைக்கும் இந்த ப்ரீபெய்ட் திட்டங்களை மட்டுமே ரீசார்ஜ் செய்ய முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Airtel Vodafone Idea Cheapest Prepaid Plans With Unlimited 5G Data April 2025
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X