2025-க்கு SIM ஆக்டிவ்.. 1 வருட வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. Jio, Airtel, Vi-க்கு இதை விட்ட இல்ல!
2025ஆம் ஆண்டு முழுவதும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) சலுகையுடன் சிம் ஆக்டிவ் (SIM Active) கிடைக்க வேண்டுமானால், ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) கஸ்டமர்களுக்கு ஒரேவொரு திட்டம் மட்டுமே இருக்கிறது. இந்த திட்டத்தில் வாய்ஸ் கால்களானது அன்லிமிடெட் சலுகையாகவும், டேட்டாவானது லம்ப்-சம் சலுகையாகவும் கிடைக்கிறது. நீங்கள் மலிவான விலையில் வருடம் முழுவதும் சிம் ஆக்டிவ் விரும்பினால், இந்த ப்ரீபெய்ட் திட்டங்களை (Prepaid Plan) ரீசார்ஜ் செய்யலாம்.
ஜியோ ரூ 1899 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 1899 Prepaid Plan): இந்த திட்டத்துக்கு மட்டும், 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்காது. 336 நாட்களுக்கு மட்டுமே கொடுக்கப்படுகிறது. 24 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இது லம்ப்-சம் டேட்டாவாக இருப்பதால், 336 நாட்களுக்கும் பொருந்தும். இந்த 24 ஜிபிக்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் மட்டுமே டேட்டா கிடைக்கும்.

இந்த சிம் ஆக்டிவ் திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கிடைக்கிறது. லம்ப்-சம் சலுகையில் 3600 எஸ்எம்எஸ்கள் இந்த திட்டத்தில் கொடுக்கப்படுகிறது. ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) சலுகைகளை இதில் பயன்படுத்தி கொள்ளலாம்.
ஏர்டெல் ரூ 1999 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 1999 Prepaid Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டம் ரூ.100 விலை அதிகமாக கிடைக்கிறது. ஆகவே, அதற்கு ஏற்ப 365 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கிறது. இதில் வருடம் முழுவதும் சிம் ஆக்டிவ் மற்றும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகைகளை ஏர்டெல் கஸ்டமர்கள் பெற்று கொள்ளலலாம்.
டேட்டாவை பார்க்கையில், முந்தைய திட்டத்தை போலவே லம்ப்-சம் சலுகையில் 24 ஜிபி மட்டுமே கொடுக்கப்படுகிறது. ஆனால், முந்தைய திட்டத்தில் கிடைத்த 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகையை இந்த திட்டத்தில் பெற முடியாது. 24 ஜிபி டேட்டா முடிந்த பிறகு கட்டணம் வசூலிக்கப்படும். ஆகவே, 24 ஜிபிக்கு மேல் டேட்டா வவுச்சர்களுக்கு செல்ல வேண்டியிருக்கும்.
இந்த ஏர்டெல் வருடாந்திர திட்டத்தில் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கிறது. ஆனால், ஜியோவில் லம்ப்-சம் சலுகையில் கிடைத்தது. மற்ற சலுகைகளை பார்க்கையில், 3 மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ளும்படி அப்பல்லோ 24/7 சர்கிள் (Apollo 24|7 Circle) மெம்பர்ஷிப் வழங்கப்படுகிறது. மேலும், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப் (Airtel Xtream App) சலுகை இதில் வருகிறது.
இதுபோக வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களுக்கு ஸ்பேம் அலெர்ட் சப்போர்ட் கொடுக்கப்படுகிறது. மேலும், ஒரு மாதத்துக்கு ஒரு ரிங் டோன் வைத்துக்கொள்ளும்படி ஹாலோ டியூன்ஸ் (Hellotunes) சலுகை கொடுக்கப்படுகிறது. ஆகவே, ரூ.100 விலைக்கு ஏற்ப இந்த திட்டத்தில் கூடுதல் வேலிடிட்டி மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
விஐ ரூ 1999 ப்ரீபெய்ட் திட்டம் (Vi Rs 1999 Prepaid Plan): ஜியோவில் கிடைத்ததை போலவே இந்த விஐ வருடாந்திர திட்டத்திலும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகையும், 3600 எஸ்எம்எஸ் சலுகையும் கிடைக்கிறது. அதேபோல 24 ஜிபி டேட்டா வருகிறது. ஆனால், போஸ்ட் டேட்டா சலுகை இந்த திட்டத்துக்கு கிடையாது.
24 ஜிபி டேட்டா கொடுக்கப்படுகிறது. வேறு எந்த கூடுதல் டேட்டா சலுகையும் இதில் இல்லை. ஆகவே, வருடம் முழுவதும் சிம் ஆக்டிவ் கிடைக்க விரும்பினால், வாய்ஸ் கால்கள் சலுகையுடன் கிடைக்கும் இந்த மூன்று திட்டங்களை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். தினசரி டேட்டா தேவைப்பட்டால், கூடுதலாக செலவு செய்ய வேண்டி இருக்கும்.


Click it and Unblock the Notifications








