5ஜி போட்டியில் Jio, Airtel, VI.. வேகத்திலும், விலையிலும் யாரு பெஸ்ட்? உங்க சிம் என்ன?

|

வருவது உறுதி நேரமும் காலமும் பின்னர் அறிவிக்கப்படும் என்ற அறிவிப்புகளுக்கு எல்லாம் சமீப காலமாக பதில் கிடைத்து வருகிறது. அதன்படி இந்தியாவில் 5ஜி சேவை விரைவில் அறிமுகமாகும் என்ற எதிர்பார்ப்பு நீண்ட காலமாக இருந்து வந்தது. இந்த நிலையில் இந்தியாவில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த 5G சேவையை பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கி வைத்தார். டெல்லி பிரகதி மைதானத்தில் நடைபெற்ற 6வது இந்திய மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் 5ஜி சேவையை பிரதமர் மோடி அறிமுகம் செய்தார்.

அதீத முன்னேற்றங்கள்..

அதீத முன்னேற்றங்கள்..

4ஜி வேகத்தை விட பல மடங்கும் அதிகமாக 5ஜி வேகம் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இதில் குறிப்பிடத்தக்க விஷயம் இதுவரை 3ஜி, 4ஜிக்களால் கண்ட முன்னேற்றங்களைவிட 5ஜி இல் அதிகளவு முன்னேற்றம் காண இருக்கிறோம்.

5ஜி வேகத்தில் எந்த தொலைத்தொடர்பு நிறுவனம் சிறந்ததாக இருக்கிறது என்ற விவரத்தை பார்க்கலாம்.

இணைய வேகம் மற்றும் விலை

இணைய வேகம் மற்றும் விலை

இந்தியாவில் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமாக ஜியோ, ஏர்டெல், விஐ இருக்கிறது. இதில் அதிக வாடிக்கையாளர்களுடன் ஜியோ முதலிடத்திலும், இரண்டாவது இடத்தில் ஏர்டெல்லும், மூன்றாவது இடத்தில் விஐ நிறுவனமும் இருக்கிறது. இதே நிலை தான் கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வருகிறது.

5ஜி முழுமையாக அறிமுகம் செய்யும்பட்சத்தில் இந்த வரிசைப் பட்டியலில் மாற்றம் ஏற்படுமா என்றால். அது 5ஜி இணைய வேகம் மற்றும் விலையில் அடிப்படையில் தான் இருக்கிறது.

5ஜி வேகத்தில் எந்த தொலைத்தொடர்பு நிறுவனம் சிறந்ததாக இருக்கும் என்ற விவரத்தை வெளியான தரவுகளின் அடிப்படையில் பார்க்கலாம்.

ஜியோ 5ஜி வேகம்

ஜியோ 5ஜி வேகம்

AGM 2022 இல், Jio தனது 5G வேகத்தை 1.09Gbps ​​ஆக பதிவு செய்தது. இது ஸ்மார்ட்போனில் பதிவு செய்யப்பட்டுள்ள வேகம் ஆகும். 5ஜி சேவைக்கான சோதனை நடைபெற்ற காலத்திலும் ஜியோ அடைந்த அதிகபட்ச வேகம் இதுதான். இந்தியா முழுவதும் 5ஜி அறிமுகம் செய்யும்பட்சத்தில் இந்த வேகம் 60% குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஏர்டெல் 5ஜி வேகம்

ஏர்டெல் 5ஜி வேகம்

5G வேகத்தில் ஏர்டெல் சிறப்பாக இருக்கிறது. மார்ச் மாதம் மும்பை மற்றும் குருகிராமில் 1Gbps அதிவேக இணைப்பை ஏர்டெல் பதிவு செய்தது.அதேநேரத்தில் ஹைதராபாத்தில் நடத்திய சோதனையில் ஏர்டெல் 3Gbps என்ற உச்ச 5G வேகத்தை எட்டியது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

Vi 5G வேகம்

Vi 5G வேகம்

புனேவில் நடந்த 5ஜி சோதனைகளில் அதிகபட்சமாக 5.92 ஜிபிபிஎஸ் வேகத்தை பதிவு செய்ததாக விஐ கூறியது. அதேபோல் எம்எம்வேவ் ஸ்பெக்ட்ரமில் 3.7ஜிபிபிஎஸ் வேகத்தை விஐ எட்டியது. காந்திநகர் பகுதியில் செயற்கையான 5ஜி நெட்வொர்க் பயன்படுத்தி விஐ நடத்திய சோதனையில் 1.5Gbps வேகத்தை நிறுவனம் எட்டியது. அதேபோல் பெங்களூரு மெட்ரோ ரயில் நிலையத்தில் நடந்த சோதனையில் Vi ஆனது 1.2Gbps என்ற 5G பதிவிறக்க வேகத்தை எட்டியது.

எது பெஸ்ட்?

எது பெஸ்ட்?

5ஜி வேகம் மிக சுவாரஸ்யமாகத் தோன்றினாலும், இது அனைத்தும் சோதனைகளில் அடைந்த வேகம் மட்டுமே என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பரவலாக அனைத்து பகுதிகளிலும் அறிமுகம் செய்யப்பட்டு பயன்பாட்டுக்கு வரும்பட்சத்தில் இந்த வேகம் குறைய வாய்ப்பிருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அடுத்த விஷயமான விலை குறித்து பார்க்கையில், இதில் ஜியோ வெளிப்படையாக தனது அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ 5ஜி

ரிலையன்ஸ் ஜியோ 5ஜி

IMC 2022 இல், ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி, உலகில் வேறு எவரும் வழங்காத உயர்ந்த தரம் மற்றும் மிகவும் மலிவு விலைகளை 5ஜி சேவை வழங்குவதை ஜியோ உறுதி செய்யும் என கூறினார்.

மலிவு விலையில் 5ஜி சேவை உறுதி..

மலிவு விலையில் 5ஜி சேவை உறுதி..

2023 டிசம்பரில் அனைத்து மாவட்டங்களிலும் 5ஜி சேவை வழங்கப்படும் என்பதை ஜியோ உறுதியளித்துள்ளது. ஜியோ தனது 5ஜி சேவையை தீபாவளிக்குள் அதாவது அக்டோபர் 23,24 தேதிகளில் வெளியிடப்படும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஜியோ பிற நிறுவனங்களை விட மலிவு விலையில் 5ஜி சேவை அறிமுகம் செய்யும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Jio, Airtel, VI.. Who is the best in 5G competition in terms of speed and price?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X