Jio, Airtel, Vi: இந்தியாவுல இனி குறைந்த விலை திட்டமே இது தானா? ஆரம்பமே எகுறுதே.. என்ன விலை? என்ன நன்மை?
ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் விஐ (Vi) என்ற வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற டெலிகாம் நிறுவனங்கள் ஒன்றின்-பின்-ஒன்றாக அதன் டேரிஃப் மீது இந்தியாவில் கடுமையான விலை ஏற்றத்தை (Telecom Tariff Hike) அறிவித்துள்ளது. மக்களுக்கு இந்த திடீர் விலை ஏற்றம் பிடிக்கவில்லை என்றாலும், டெலிகாம் நிறுவனங்கள் ஜூலை 3, 2024 ஆம் தேதி முதல் விலை ஏற்றத்தை நடைமுறைப்படுத்தும் என்று உறுதியாக அறிவித்துள்ளன. இந்த நிலையில் இனி இந்தியாவில் கிடைக்கக்கூடிய அடிப்படை அல்லது குறைந்த விலை திட்டத்தின் விலை என்ன என்பதை பற்றி தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம்.
ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் விஐ (Vi) நிறுவனங்கள் இப்போது அதன் ப்ரீபெய்ட் (Prepaid) மற்றும் போஸ்ட்பைட் (Postpaid) திட்டங்களின் விலையை 25% வரை உயர்த்தியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டன. இந்த புதிய விலை மாற்றம் வரும் ஜூலை 3, 2024 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் (New price hike Of Jio and Airtel from July 3rd) என்று ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

Jio, Airtel, Vi: இந்தியாவுல இனி குறைந்த விலை திட்டமே இது தானா?
அதேபோல், விஐ (Vodafone Idea or Vi) நிறுவனம் ஜூலை 4, 2024 ஆம் தேதி முதல் அதன் புதிய விலை ஏற்றத்தை நடைமுறைப்படுத்தும் என்று அறிவித்துள்ளது. இந்த மூன்று நிறுவனங்களின் மாதாந்திர (monthly), காலாண்டு (quarterly) மற்றும் வருடாந்திர ரீசார்ஜ் திட்டங்கள் (annual recharge plans) என்று எல்லா திட்டங்களின் விலையும் இன்னும் இரண்டு தினங்களில் அதிகரிக்கவுள்ளது. இதனால், அடிப்படை திட்டங்களின் விலையில் மாற்றங்களை மக்கள் சந்திக்கவுள்ளனர்.
புதிய விலை ஏற்றத்திற்கு பிறகு, இந்தியாவில் எந்த நெட்வொர்க்கின் திட்டம் மிகவும் குறைந்த விலை அடிப்படை திட்டமாக (Low price basic recharge plans in India) இருக்கும் என்பதை தெளிவாக இப்போது தெரிந்துகொள்ளலாம். ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் விஐ (Vi) ஆகிய மூன்று நிறுவனங்களின் கீழ் இனி ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் மிகவும் குறைந்த விலை மற்றும் அடிப்படை ரீசார்ஜ் திட்டங்களை பற்றிய விபரங்கள் இதோ.
1. ஜியோ அடிப்படை ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை (Jio Basic Prepaid Plan Price):
ஜியோ அதன் அடிப்படை திட்டத்தை இதற்கு முன்பு வெறும் ரூ.155 விலைக்கு (Jio Rs.155 Plan) வழங்கி வந்தது. இதன் விலை வரும் ஜூலை 3ம் தேதி முதல் ரூ.199 ஆக (New Jio Rs.199 Plan) உயர்த்தப்படுகிறது. இந்த விலை உயர்வுக்கு பிறகும், மக்கள் அதே பழைய நன்மைகளான அன்லிமிடெட் வாய்ஸ் கால், 300 எஸ்எம்எஸ், 2GB டேட்டா நன்மைகளை 28 நாள் வேலிடிட்டியுடன் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
2. ஏர்டெல் அடிப்படை ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை (Airtel Basic Prepaid Plan Price):
ஏர்டெல் ரூ.179 என்ற அடிப்படை திட்டம் (Airtel Rs.179 Basic Plan) இனி இந்தியாவில் ரூ.199 என்ற புதிய விலையில் (New Airtel Rs.199 Plan) ரீசார்ஜ் செய்ய கிடைக்கும். இதுவும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் (Unlimited voice calls), 300 எஸ்எம்எஸ் (SMS), 2GB டேட்டா (SMS) நன்மைகளை 28 நாள் வேலிடிட்டியுடன் (Validity) வழங்குகிறது. இந்த திட்டங்கள் தினசரி டேட்டா தேவையில்லாத பயனர்களுக்கு பொருந்தும்.
3. வோடபோன் ஐடியாவின் அடிப்படை ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை (Vi Basic Prepaid Plan Price):
வோடபோன் ஐடியா நிறுவனமும் அதன் விலை ஏற்றத்திற்கு பிறகு, அதன் அடிப்படை திட்டத்தின் விலையை ரூ. 199 ஆக நிர்ணயம் செய்துள்ளது. இதில் அன்லிமிடெட் வாய்ஸ் கால் (Unlimited voice calls), 300 எஸ்எம்எஸ் (SMS), 2GB டேட்டா (SMS) நன்மைகளை 28 நாள் வேலிடிட்டியுடன் (Validity) வழங்குகிறது.


Click it and Unblock the Notifications








