Jio, Airtel, Vi பயனர்களே இலவசமாக Disney+ Hotstar வேண்டுமா? அப்போ இதத்தான் நீங்க செய்யணும்!

|

கிரிக்கெட் சீசன் துவங்கிவிட்டது, இந்த நிலையில் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் Disney+ Hotstar நன்மை கிடைக்கும் ரீசார்ஜ் திட்டங்களை மிகவும் தீவிரமாக தேடி வருகின்றனர். Disney+ Hotstar சப்ஸ்கிரிப்ஷனை தனியாக வாங்கினால் நிச்சயமாக உங்களுக்கு செலவு அதிகமாகிறது. ஆனால், Jio, Airtel, Vi இன் சில ரீசார்ஜ் திட்டங்களை நீங்கள் ரீசார்ஜ் செய்தால், Disney+ Hotstar நன்மை இப்போது உங்களுக்கு இலவசமாகவே கிடைக்கிறது என்பதே உண்மை.

எந்த ரீசார்ஜ் திட்டத்துடன் Disney+ Hotstar நன்மை இலவசமாகக் கிடைக்கும்?

எந்த ரீசார்ஜ் திட்டத்துடன் Disney+ Hotstar நன்மை இலவசமாகக் கிடைக்கும்?

எந்த ரீசார்ஜ் திட்டத்தை நீங்கள் ரீசார்ஜ் செய்தால் உங்களுக்கு Disney+ Hotstar நன்மை இலவசமாகக் கிடைக்கும் என்று பார்க்கலாம். Disney+ Hotstar இப்போது அதன் தளத்தில் பிரீமியம் பிளான், சூப்பர் பிளான் மற்றும் மொபைல் பிளான் என்று 3 திட்டங்களை வெவ்வேறு வேலிடிட்டி உடன் வழங்குகிறது. Disney+ Hotstar பிரீமியம் பிளான் ஒரு வருடத்திற்கு ரூ.1,499 விலையிலும், சூப்பர் பிளான் ஒரு வருடத்திற்கு ரூ. 899 என்ற விலையிலும், மொபைல் பிளான் ரோ வருடத்திற்கு ரூ.499 விலை கிடைக்கிறது.

Disney+ Hotstar சந்தாவை கூடுதல் நன்மைகளோடு பெற மிகவும் சாமர்த்தியமான வழி இது தானா?

Disney+ Hotstar சந்தாவை கூடுதல் நன்மைகளோடு பெற மிகவும் சாமர்த்தியமான வழி இது தானா?

Jio, Airtel மற்றும் Vi ஆகிய நிறுவனங்கள் இப்போது இந்த 3 பிளான்களை வழங்கும் ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகின்றன. இந்த குறிப்பிட்ட சில ரீசார்ஜ் திட்டங்களை நீங்கள் தேர்வு செய்யும் போது உங்கள் மொபைல் பயன்பாட்டிற்குத் தேவையான டேட்டா, வாய்ஸ் கால்ஸ், SMS நன்மைகளுடன் இனி உங்களுக்கு Disney+ Hotstar சந்தாவிற்கான நன்மைகளும் கிடைக்கிறது. Disney+ Hotstar சந்தாவைப் பெறுவதற்கு இது தான் சாமர்த்தியமான வழியும் கூட என்பது கவனிக்கத்தக்கது.

ஜியோ ரீசார்ஜ் திட்டத்துடன் கிடைக்கும் 3 மாத டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா திட்டங்கள்

ஜியோ ரீசார்ஜ் திட்டத்துடன் கிடைக்கும் 3 மாத டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா திட்டங்கள்

ஜியோ இப்போது Disney+ Hotstar சேவைக்கான 3 மாதங்கள் முதல் 1 வருடம் வரையிலான செல்லுபடியாகும் சந்தாவை வழங்கும் பல திட்டங்களை ஜியோ கொண்டுள்ளது. இதில் முதலில் 3 மாத டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவுடன் கிடைக்கும் மூன்று ஜியோ திட்டங்களை பற்றி இப்போது பார்க்கலாம்.

ஜியோ ரூ.333 திட்டம், உங்களுக்கு 28 நாட்கள் வேலிடிட்டி உடன் தினசரி 1.5ஜிபி டேட்டா, அன்லிமிடெட் குரல் அழைப்பு நன்மை, தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் கூடுதல் ஜியோ ஆப்ஸ் பலன்களை Disney+ Hotstar 3 மாத சந்தாவுடன் வழங்குகிறது.

ஜியோவின் ரூ.419 மற்றும் ரூ.583 திட்டம்

ஜியோவின் ரூ.419 மற்றும் ரூ.583 திட்டம்

ஜியோவின் ரூ.419 திட்டமானது 28 நாட்கள் வேலிடிட்டி, 3ஜிபி தினசரி டேட்டா, இலவச குரல் அழைப்பு, தினமும் 100 SMS மற்றும் கூடுதல் ஜியோ ஆப்ஸ் பலன்கள் உடன் வருகிறது.

இதேபோல், ரூ.583 திட்டமானது 56 நாட்கள் வேலிடிட்டி உடன் தினசரி 1.5ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை, தினமும் 100 SMS மற்றும் கூடுதல் ஜியோ ஆப்ஸ் பலன்கள் வழங்குகிறது. இந்த இரண்டு ரீசார்ஜ் திட்டங்களும் Disney+ Hotstar 3 மாத சந்தாவுடன் இலவசமாக வருகிறது.

ரூ.499, ரூ.799 மற்றும் ரூ.1066 திட்டத்துடன் என்ன Disney+ Hotstar நன்மை கிடைக்கிறது?

ரூ.499, ரூ.799 மற்றும் ரூ.1066 திட்டத்துடன் என்ன Disney+ Hotstar நன்மை கிடைக்கிறது?

ரூ.499 திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் தினசரி 2ஜிபி டேட்டா, இலவச குரல் அழைப்பு, தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ ஆப்ஸ் பலன்களை வழங்குகிறது.

ஜியோவின் ரூ.799 திட்டம் 56 நாட்கள் வேலிடிட்டியுடன் தினசரி 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ், தினமும் 100 SMS உடன் ஜியோ ஆப்ஸ் பலன்களை வழங்குகிறது.

Jio ரூ.1066 திட்டம் தினமும் 2ஜிபி டேட்டா, வாய்ஸ் கால்ஸ், தினமும் 100 SMS உடன் கூடுதல் 5ஜிபி டேட்டாவுடன் 84 நாள் வேலிடிட்டி உடன் வருகிறது. இந்த திட்டங்கள் 1 வருட Disney+ Hotstar மொபைல் சந்தாவை இலவசமாக வழங்குகிறது.

1 வருட டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தா இலவசமாக வேண்டுமா?

1 வருட டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தா இலவசமாக வேண்டுமா?

ஜியோ 1 வருட டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாவுடன் 2 ப்ரீபெய்ட் பேக்குகளை வழங்குகிறது. ஜியோவின் ரூ.1499 திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டியுடன், தினசரி 2ஜிபி டேட்டா, இலவச குரல் அழைப்பு நன்மை, தினமும் 100 SMS நன்மை மற்றும் ஜியோ ஆப்ஸ் பலன்களை வழங்குகிறது.

Jio ரூ. 4199 திட்டம் 365 நாள் வேலிடிட்டியுடன் தினசரி 3 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை, தினமும் 100 SMS மற்றும் ஜியோ ஆப்ஸ் நன்மை உடன் 1 வருட Disney+ Hotstar பிரீமியம் சந்தாவை இந்த திட்டங்கள் இலவசமாக வழங்குகிறது.

ஏர்டெல் எந்த திட்டங்களுடன் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்குகிறது?

ஏர்டெல் எந்த திட்டங்களுடன் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்குகிறது?

ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் நிறுவனமும் இப்போது 3 மாத டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவுடன் 1 வருடச் சந்தா வரை அதன் ரீசார்ஜ் திட்டங்களுடன் வழங்கி வருகிறது.

இதில் முதல் குறைந்த விலை திட்டமாக ரூ.399 திட்டம் உள்ளது. இது 28 நாட்கள் வேலிடிட்டி, தினசரி 2.5ஜிபி டேட்டா, இலவச குரல் அழைப்பு, தினமும் 100 SMS மற்றும் ஏர்டெல் தேங்க்ஸ் கூடுதல் நன்மைகளோடு, இப்போது 3 மாத Disney+ Hotstar மொபைல் சந்தாவை வழங்குகிறது.

ஏர்டெல்லின் ரூ.839 மற்றும் ரூ.499 திட்டத்துடன் கிடைக்கும் Disney+ Hotstar நன்மை எத்தகையது?

ஏர்டெல்லின் ரூ.839 மற்றும் ரூ.499 திட்டத்துடன் கிடைக்கும் Disney+ Hotstar நன்மை எத்தகையது?

ஏர்டெல்லின் ரூ.839 திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டி உடன் தினசரி 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ், தினமும் 100 SMS மற்றும் ஏர்டெல் தேங்க்ஸ் பலன்களுடன் 3 மாதங்களுக்கு இலவச Disney+ Hotstar மொபைல் சந்தாவை வழங்குகிறது.

Airtel ரூ.499 திட்டமானது 28 நாள் வேலிடிட்டி உடன் தினசரி 2ஜிபி டேட்டா, இலவச குரல் அழைப்பு, தினமும் 100 SMS மற்றும் கூடுதல் பலன்கள் உடன் 1 வருட Disney+ Hotstar மொபைல் சந்தாவை இப்போது வழங்குகிறது.

1 வருட Disney+ Hotstar சந்தா கிடைக்கும் Airtel திட்டங்கள் இது தானா?

1 வருட Disney+ Hotstar சந்தா கிடைக்கும் Airtel திட்டங்கள் இது தானா?

ஏர்டெல்லின் ரூ.599 திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் தினசரி 3ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 SMS உடன் கூடுதல் பலன்களோடு 1 வருடத்திற்கு Disney+ Hotstar மொபைல் சந்தாவையும் சேர்த்து வழங்குகிறது.

Airtel ரூ.3359 திட்டமானது தினசரி 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ், தினசரி 100 SMS மற்றும் கூடுதல் பலன்கள் உடன் 1 வருடத்திற்கான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவுடன் வருடாந்திர திட்டம்.

Vi வழங்கும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா திட்டங்கள்

Vi வழங்கும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா திட்டங்கள்

Jio மற்றும் Airtel நிறுவனம் போல, வோடபோன் ஐடியாவின் Vi நிறுவனம் கூட இப்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைலுக்கான 1 வருடச் சந்தாவுடன் 2 ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது.

இதில் முதல் திட்டம் ரூ.499 விலையில் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் வருகிறது. இது தினசரி 2ஜிபி டேட்டா, இலவச வாய்ஸ் கால்ஸ், தினமும் 100 SMS உடன் கூடுதல் நன்மைகளோடு 1 வருட Disney+ Hotstar மொபைல் சந்தாவை வழங்குகிறது.

Vi இன் ரூ.601 திட்டம் என்ன நன்மையை வழங்குகிறது?

Vi இன் ரூ.601 திட்டம் என்ன நன்மையை வழங்குகிறது?

Vi இன் ரூ.601 திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் தினசரி 3ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மை, தினமும் 100 SMS மற்றும் கூடுதல் நன்மைகளோடு 1 வருடத்திற்கான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவுடன் வருகிறது. இந்த ரீசார்ஜ் திட்டங்கள் அனைத்தும் இப்போது உங்களுக்கு Disney+ Hotstar சந்தாவுடன் கிடைக்கின்றன.

தனியாக இவற்றை வாங்குவதை விட, ரீசார்ஜ் திட்டங்களுடன் இவற்றை நீங்கள் பெரும் போது இவை உங்களுக்கு இலவசமாகக் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Jio, Airtel And Vi Users Can Now Get Free Disney+ Hotstar Subscription With These Recharge Plans

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X