Airtel, Jio, Vi கட்டண உயர்வு.. கஸ்டமர்கள் தலையில் இடி இறங்கிடுச்சு.. இனி TRAI கையில.. இந்திய அரசு போட்டப்போடு!
இந்தியாவின் முன்னணி டெலிகாம் (Telecom) நிறுவனங்களான பார்தி ஏர்டெல் (Bharti Airtel), ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) ஆகியவற்றின் ரீசார்ஜ் கட்டணங்கள் ஜூலை 3ஆம் தேதியில் இருந்து உயர்த்தப்பட்டன. தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், இப்படி கட்டணத்தை உயர்த்துவது (Tariff Hikes) சிம் கார்டு கஸ்டமர்களுக்கு பேரிடியாக இருந்தது. இந்திய அரசு இதை கட்டுப்படுத்த வேண்டிய நேரத்தில் ஒட்டுமொத்த டெலிகாம் கஸ்டமர்களின் தலையில் மீண்டும் இடி இறங்கியதை போல சம்பவம் நடந்துள்ளது.
ஜூலை 3ஆம் தேதியில் இருந்து ப்ரீபெய்ட் (Prepaid) மற்றும் போஸ்ட்பெய்ட் (Postpaid) கட்டணங்கள் அதிடியாக உயர்த்தப்பட்டன. 11 முதல் 25 சதவீதம் வரையல் கட்டண உயர்வு இருந்தது. இதனால், மினிமம் ரீசார்ஜ் கட்டணங்கள் என்று சொல்லக்கூடிய சிம் ஆக்டிவ் திட்டங்களின் விலைகளும் அதிகரித்தன. இது பிஎஸ்என்எல்லுக்கு மாறும் கஸ்டமர்களின் எண்ணிக்கையை அதிகரித்தது.

இருப்பினும், பிஎஸ்என்எல்லில் 4ஜி சேவை கிடைக்காததால், ஏர்டெல், ஜியோ, வோடபோன் நிறுவனங்களைவிட்டு வேறு நிறுவனத்துக்கு மாற முடியாத சூழலில் அவற்றின் கஸ்டமர்கள் இருக்கின்றன. இதனால், தனியார் தொலைத்தொடர்பு ஆப்ரேட்டர்களின் (Private Telecom Operators) கட்டண உயர்வை இந்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும் அல்லது குறைக்க வேண்டும் கோரிக்கை வலுத்தது.
இதனிடையே டேட்டாவுக்கு மட்டுமே அதிகம் செலவாகிறது. ஆகவே, அதை தவிர்த்துவிட்டு, எஸ்எம்எஸ் மற்றும் வாய்ஸ் கால்களுக்காக ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களை கொடுத்து அதற்கு மலிவான விலையை நிர்ணயம் செய்ய இந்திய அரசு திட்டமிட்டது. இப்படிப்பட்ட நேரத்தில் அதே இந்திய அரசு கஸ்டமர்கள் கதிகலங்கும்படி கட்டண உயர்வில் சம்பவம் செய்துள்ளது.
அதாவது, இந்தியாவில் தனியார் தொலைத்தொடர்பு ஆப்ரேட்டர்களின் கட்டண உயர்வுகள் மற்றும் குறைப்புகள் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் என்று அழைக்கப்படும் - டிராய் (Telecom Regulatory Authority of India - TRAI) கட்டுப்பாட்டில் வருகிறது. இது பொதுத்துறை நிறுவனம் என்றாலும், அந்த நிறுவனத்தின் முடிவுகளில் இந்திய அரசு தலையிடாது. ஆகவே, கட்டண உயர்வுக்கும் அரசுக்கும் தொடர்பில்லை.
2004ஆம் ஆண்டில், டெலிகாம் ஆப்ரேட்டர்களில் இடையே சேவை வழங்குவதில் இருந்த போட்டியை அடிப்படையாக கொண்டு தொலைத்தொடர்பு சேவைகளுக்கான சகிப்புத்தன்மை கொள்கையை இந்திய அரசு ஏற்றுக் கொண்டது. இது உலகின் பல்வேறு நாடுகளில் வழங்கப்படும் தொலைத்தொடர்பு சேவையின் அடிப்படையில் எடுக்கப்பட்டது. இதனடிப்படையில் கட்டணங்கள் மாறுகின்றன.
ஆகவே, இந்தியாவில் இருக்கும் டெலிகாம் சேவை வழங்குநர்கள் - டிஎஸ்பி (Telecom Service Providers - TSP) மொபைல் தொலைத்தொடர்பு சேவையில் இருக்கும் விநியோகம் மற்றும் தேவையை அடிப்படையாக கொண்டு கட்டணத்தை நிர்ணயம் செய்யலாம். இதற்கு அந்த சகிப்புத்தன்மை கொள்கை அனுமதி அளிக்கிறது. இதனால் இந்திய அரசு டெலிகாம் ஆப்ரேட்டர்களின் கட்டண உயர்வில் தலையிடாது.
இருப்பினும், கட்டண உயர்வுக்கு பிறகு 7 நாட்களுக்குள் அதில் சிக்கல் இருந்தால் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் டிராயிடம் தெரிவிக்க வேண்டும். அதன்பிறகு டிராய் முடிவை எடுக்கலாம். இதுவே டெலிகாம் கட்டண உயர்வு குறித்த இந்திய அரசின் முடியவாகும். மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெம்மாசானி சந்திர சேகர் இதை உறுதிப்படுத்தி இருக்கிறார்.
ஆகவே, டெலிகாம் கட்டண உயர்வை இந்திய அரசு நேரடியாக கட்டுப்படுத்தாது. இருப்பினும், டெலிகாம் கஸ்டமர்களுக்கு சிம் ஆக்டிவ் திட்டங்களை (SIM Active Plan) அடிமட்ட விலைக்கு வழங்குவதற்காக வாய்ஸ் கால்கள் (Voice Calls) மற்றும் எஸ்எம்எம் (SMS) சலுகைகள் கொண்ட திட்டங்களை மட்டும் கொடுக்க அரசு திட்டமிட்டு இருக்கிறது. பொறுத்திருந்துதான் டெலிகாம் கஸ்டமர்கள் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications