Home
News

Jio, Airtel, Vi சிம் இருக்கா.. SBI, ICICI, HDFC பேங்குல லிங்க்.. புது RBI டிஜிட்டல் ஒப்புதல்.. என்னென்ன வருது?

டிராய் (TRAI) என்றழைக்கப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (Telecom Regulatory Authority of India) மற்றும் ஆர்பிஐ (RBI) என்றழைக்கப்படும் இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) இணைந்து புதிய டிஜிட்டல் ஒப்புதலை (Digital Consent) களமிறக்கியுள்ளன. எஸ்பிஐ (SBI), ஐசிஐசிஐ (ICICI), எச்டிஎப்சி (HDFC) போன்ற பேங்குகள் இதில் இணைக்கப்பட்டுள்ளது. ஏர்டெல், ஜியோ, விஐ-க்கும் பொருந்தும். இந்த டிஜிட்டல் ஒப்புதல் என்ன செய்யப் போகிறது? முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

பேங்க் கஸ்டமர்களுக்கு டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, லோன் உள்ளிட்ட வணிக ரீதியாக வரும் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களை கட்டுப்படுத்தவே இந்த டிஜிட்டல் ஒப்புதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டிராய் தொடங்கிய இந்த திட்டத்தில் ஏற்கனவே, ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா, பிஎஸ்என்எஸ் போன்ற டெலிகாம் நிறுவனங்கள் கைகோர்த்துவிட்டன.

Jio, Airtel, Vi சிம் இருக்கா.. SBI, ICICI, HDFC பேங்குல லிங்க்!

இப்போது, ஆர்பிஐ உதவியுடன் எஸ்பிஐ, ஐசிஐசிஐ, எச்டிஎஃப்சி, ஆக்சிஸ் பேங்க் (Axis Bank), பிஎன்பி (PNB), கனரா பேங்க் (Canara Bank), மற்றும் கோடக் மஹிந்திரா பேங்க் (Kotak Mahindra Bank) ஆகியவை இணைந்துள்ளன. இதன் மூலம் பேங்குகள் மற்றும் டெலிகாம் நிறுவனங்கள் கஸ்டமர்களின் ஒப்புதலை டிஜிட்டல் முறையில் பெற்று, அதில் நடவடிக்கை எடுக்க இருக்கின்றன.

அதாவது, ஆஃப்லைன் ஒப்புதல்களை பாதுகாப்பாகவும், டிஜிட்டல் முறையிலான ஒப்புதலாக மாற்றவும் இது கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த ஒப்புதல் மூலம் வணிக ரீதியான கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களை அனுமதிக்க டிஜிட்டல் முறையில் பதிவு செய்யவும், மதிப்பாய்வு செய்யவும் அல்லது ரத்து செய்யவும் கஸ்டமர்களுக்கு அனுமதி கொடுக்கிறது.

ஆகவே, இந்த டிஜிட்டல் ஒப்புதல் மூலம், பேங்க் கஸ்டமர்களுக்கு எந்த ஒரு நிறுவனமும் அவர்களது ஒப்புதல் இல்லாமல், வணிக ரீதியாக கால்கள் அல்லது எஸ்எம்எஸ்களை அனுப்ப முடியாது. இந்த ஒப்புதல்கள், ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா, பிஎஸ்என்எல் போன்ற டெலிகாம் சேவை வழங்குநர்களால் பாதுகாப்பான பராமரிக்கப்பட இருக்கிறது.

ஆகவே, டெலிகாம் மற்றும் பேங்க் கஸ்டமர்களின் அனுமதி இல்லாமல், இது ஒப்புதல்களை மாற்றவோ அல்லது பயன்படுத்தவோ முடியாது என்பதை இது உறுதி செய்கிறது. இது ஆரம்ப கட்டத்தில் இருப்பதால், எஸ்பிஐ, ஐசிஐசிஐ, எச்டிஎஃப்சி, ஆக்சிஸ் பேங்க், கனரா பேங்க், கோடக் மஹிந்திரா பேங்க் ஆகிய கஸ்டமர்களுக்கு மட்டும் தொடங்கப்பட்டு இருக்கிறது.

இவர்களுக்கு வணிக ரீதியான ஸ்பேம் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களுக்கான டிஜிட்டல் ஒப்புதல் அமல்படுத்தப்பட இருக்கிறது. ஏற்கனவே, வணிக ரீதியான ஸ்பேம் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களை அனுப்பும் நிறுவனங்கள், அந்தந்த டெலிகாம் சேவை வழங்குநர்களின் ஒயிட்லிஸ்டில் தங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்று டிராய் உத்தரவிட்டுள்ளது.

அதேபோல 1600 சீரிஸ் அடங்கிய நம்பர்களில் இருந்து மட்டுமே பணப்பரிவர்த்தனை மற்றும் சேவை தொடர்பான கால்களை செய்ய வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இப்போது, இந்த புதிய டிஜிட்டல் ஒப்புதலை அறிமுகம் செய்துள்ளது. ஆர்பிஐ மற்றும் டெலிகாம் நிறுவனங்களுடன் இதற்காக கைகோர்த்துள்ளது.

இந்த டிஜிட்டல் ஒப்புதல் மூலம் பேங்க் கஸ்டமர்களுக்கு வரும் ஸ்பேம் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்கள் குறையும். அதே நேரத்தில் நிதி தொடர்பான மோசடிகளும் அடியோடு குறையும். குறிப்பாக கஸ்டமர்களின் கட்டுப்பாட்டில் இந்த வணிக ரீதியான கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்கள் கொண்டுவரப்படும். ஆகவே, வெளிப்படை தன்மை இதில் உறுதி செய்யப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Airtel Vi SIM Link To SBI ICICI HDFC Banks New RBI Digital Consent Against Spam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X