Jio Vs Airtel Vs Vi.. மலிவு விலையில் அமோக சலுகை! கூட்டி கழிச்சு பாருங்க புரியும்
அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களின் தேவையையும் பூர்த்தி செய்யும் வகையில் ஏர்டெல், ஜியோ, விஐ நிறுவனங்கள் ரீசார்ஜ் திட்டங்களை தொகுத்து வழங்குகிறது. இந்தியாவில் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமாக ஜியோ இருக்கிறது. ஜியோ நிறுவனத்தின் ரீசார்ஜ் திட்டங்கள் மிகவும் மலிவு விலையில் அதிக நன்மைகளைக் கொண்டிருக்கிறது. ஜியோவுடனான நெருங்கிய போட்டியில் ஏர்டெல் இருக்கிறது. விஐ தத்தி தடுமாறி வாடிக்கையாளர்களை தக்க வைக்கும் முயற்சியில் நடவடிக்கை எடுத்து வருகிறது.

ரூ.300க்கு கீழ் கிடைக்கும் ரீசார்ஜ் திட்டங்கள்
வாடிக்கையாளர்கள் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு ரீசார்ஜ் திட்டங்களை நிறுவனங்கள் வழங்குகிறது. ஏர்டெல், ஜியோ, விஐ ஆகிய மூன்று நிறுவனங்களும் ரூ.300க்கு கீழ் சிறந்த ரீசார்ஜ் திட்டங்களை தொகுத்து வழங்குகின்றன.
கீழே வழங்கப்பட்டுள்ள திட்டங்களில் நியாயமான டேட்டா சேவையுடன் வரம்பற்ற குரல் அழைப்பு உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.

ஏர்டெல் ரூ.239 திட்டம்
ஏர்டெல் ரூ.239 ரீசார்ஜ் திட்டமானது 24 நாட்கள் செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளும் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் இலவச Hellotunes மற்றும் Wynk Music அணுகலும் வழங்கப்படுகிறது. ரூ.239 ரீசார்ஜ் திட்டத்தில் தினசரி 1ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

ஏர்டெல் ரூ.265 திட்டம்
ஏர்டெல் ரூ.265 திட்டத்தில் இலவச Hellotunes மற்றும் Wynk Music அணுகலும் வழங்கப்படுகிறது. இந்த திட்டமானது 28 நாட்கள் வேலிடிட்டி நன்மைகள் வழங்கப்படுகிறது. தினசரி 1ஜிபி டேட்டா இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

ஏர்டெல் ரூ.299 திட்டம்
ஏர்டெல் ரூ.299 திட்டமானது 28 நாட்கள் செல்லுபடியாகும். இந்த திட்டமானது தினசரி 100 எஸ்எம்எஸ் சலுகை வழங்கப்படுகிறது. இந்த ரீசார்ஜ் திட்டத்தில் எக்ஸ் ஸ்ட்ரீம் மொபைல் பேக், அப்பல்லோ 24|7 சர்க்கிள் உள்ளிட்ட அணுகல் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் தினசரி 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. கூடுதலாக ஃபாஸ்டேக், ஹெலோ ட்யூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக் அணுகலும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

Vi ரூ.199 திட்டம்
விஐ வழங்கும் ரூ.199 ரீசார்ஜ் திட்டமானது தினசரி 1ஜிபி டேட்டா சலுகையை வழங்குகிறது. இந்த திட்டமானது 18 நாட்கள் மட்டுமே செல்லுபடியாகும். விஐ டிவி மற்றும் மூவிஸ் அணுகல் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

Vi ரூ.219 திட்டம்
விஐ ரூ.219 திட்டம் ஆனது 21 நாட்கள் செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் வரம்பற்ற குரலழைப்பு நன்மைகள் வழங்கப்படுகிறது. தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளுடன் 1ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகிறது. விஐ டிவி மற்றும் மூவிஸ் அணுகலும் இதில் கூடுதல் அம்சங்களாக வழங்கப்படுகிறது.

Vi ரூ.249 திட்டம்
விஐ ரூ.249 திட்டமானது 21 நாட்கள் செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இந்த திட்டமானது தினசரி 1.5 ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. விஐ டிவி மற்றும் மூவிஸ் அணுகலும் கிடைக்கிறது.

ஜியோ ரூ.149 திட்டம்
ஜியோ ரூ.149 திட்டமானது வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள் வழங்கப்படுகிறது. இந்த திட்டமானது 20 நாட்களுக்கு செல்லுபடியாகும். தினசரி 1ஜிபி டேட்டா நன்மை இதில் கிடைக்கிறது. ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ ஆப்ஸ் அணுகலும் வழங்கப்படுகிறது.

ஜியோ ரூ.179 திட்டம்
ஜியோ ரூ.179 திட்டமானது வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் உடன் தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் 24 நாட்களுக்கு செல்லுபடியாகும். செல்லுபடியாகும் காலம் முழுவதும் தினசரி 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. ஜியோ டிவி, ஜியோ சினிமா உள்ளிட்ட ஜியோ பயன்பாடுகளுக்கான அணுகல் இலவசமாக வழங்கப்படுகிறது.
ஜியோ ரூ.199 திட்டம்
ஜியோ ரூ.199 திட்டமானது 23 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த திட்டமானது தினசரி 1.5 ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இதில் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் சலுகைகளும் வழங்கப்படுகிறது. ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச அணுகலும் இந்த ரீசார்ஜ் திட்டத்தில் கிடைக்கிறது.
ஜியோ ரூ.209 திட்டம்
இந்த ரீசார்ஜ் திட்டத்தில் தினசரி 1 ஜிபி டேட்டா உடன் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் சலுகை இதில் வழங்கப்படுகிறது. இந்த ரீசார்ஜ் பேக்கில் ஜியோ டிவி, ஜியோ சினிமா உள்ளிட்ட ஜியோ பயன்பாடுகளுக்கான அணுகலும் வழங்கப்படுகிறது.
ஜியோ ரூ.239 திட்டம்
ஜியோ ரூ.239 திட்டமானது வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளுடன் தினசரி 100 எஸ்எம்எஸ்-ம் வழங்கப்படுகிறது. இந்த திட்டமானது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். JioTV, Jio சினிமா உள்ளிட்ட பிற பயன்பாட்டு அணுகலும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் தினசரி 1.5 ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும்.

ஜியோ ரூ.259 திட்டம்
ஜியோ ரூ.259 திட்டமானது தினசரி 1.5 ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த திட்டம் முழுமையாக 1 மாத காலம் செல்லுபடியாகும். வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் சலுகை கிடைக்கிறது. ஜியோ நிறுவனத்தின் மிகவும் புகழ் பெற்ற திட்டம் இதுவாகும்.
ஜியோ ரூ.299 திட்டம்
ஜியோ ரூ.299 திட்டமானது 56 ஜிபி டேட்டா நன்மை வழங்கப்படுகிறது. இந்த திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும். தினசரி 2 ஜிபி என்ற வீதம் வழங்கப்படுகிறது. வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ்கள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.
மொத்த நிறுவனங்களின் ரீசார்ஜ் திட்டங்களை ஒப்பிட்டு பார்க்கையில், ஜியோ தான் சற்று மேம்பட்டதாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications