வருடம் முழுவதும் தினசரி டேட்டா சலுகை:ஏர்டெல், ஜியோ, வீ வாடிக்கையாளர்களே!

|

தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இந்தியாவில் போட்டிப் போட்டுக் கொண்டு சலுகைகளை அறிவித்து வருகிறது. இதில் ஏர்டெல், ஜியோ மற்றும் வீ தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் நீண்ட கால ரீசார்ஜ் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

இந்திய தொலைத் தொடர்பு நிறுவனங்கள்

இந்திய தொலைத் தொடர்பு நிறுவனங்கள்

இந்தியாவில் 1 ஜிபி டேட்டா விலை பிற நாடுகளோடு ஒப்பிடுகையில் மிகவும் குறைவாக உள்ளது போன்ற புகார்கள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. இதையடுத்து இந்திய தொலைத் தொடர்பு நிறுவனங்கள் விரைவில் அடுத்த கட்டண உயர்வை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீண்ட நாட்கள் திட்டம்

நீண்ட நாட்கள் திட்டம்

அடுத்த கட்டண உயர்வு குறித்து எந்த தகவலும் இல்லை என்றாலும் முன்னெச்சரிக்கையோடு செயல்படுவது சிறந்தது. அதற்கான ஒரேவழி தற்போதைய விலையிலேயே நீண்ட நாட்கள் திட்டத்தில் ரீசார்ஜ் செய்வதுதான். இப்படி செய்வதன்மூலம் அடுத்த ரீசார்ஜ் செய்யும்வரை விலை உயர்வில் இருந்து தப்பிக்கலாம்.

ஜியோ, ஏர்டெல், வீ

ஜியோ, ஏர்டெல், வீ

இந்தியாவின் முன்னணி நிறுவனங்கள் என்று பார்த்தால் அது ஜியோ, ஏர்டெல், வீ என கூறலாம். ஜியோ இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட நாளில் இருந்து, பிற தொலைத் தொடர்பு நிறுவன்கள் சற்று பின்னடைவையே சந்தித்து வருகின்றன. ஒவ்வொரு நிறுவனங்களும் போட்டிப்போட்டுக் கொண்டு பல்வேறு சலுகைகளோடு திட்டங்களை அறிவித்து வருகின்றன. அதில் சிறந்த நீண்டகால திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

ஏர்டெல் நீண்ட கால ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் நீண்ட கால ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு பல நீண்ட கால ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது. அதில் ரூ.2,698 விலையில் கிடைக்கும் திட்டம் குறித்து பார்க்கலாம். இந்த திட்டம் தினசரி 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதோடு வாடிக்கையாளர்களுக்கு தினசரி 100 எஸ்எம்எஸ்கள், வரம்பற்ற குரலழைப்பு உள்ளிட்டவைகளை வழங்குகிறது. அதோடு இந்த திட்டத்தின் மூலம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ப்ரீமியம் சந்தாவும் வழங்கப்படுகிறது.

Ray-Ban உடன் கூட்டு சேர்ந்து பேஸ்புக் உருவாக்கும் ஸ்மார்ட் கிளாஸ் எப்பொழுது வெளிவரும்!

ரூ.2,599 விலையில் திட்டம்

ரூ.2,599 விலையில் திட்டம்

ஜியோ, வழக்கம்போல் இந்த நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை இந்த திட்டத்தில் வழங்குகிறது. ஜியோ வழங்கும் இந்த திட்டத்தின் விலை ரூ.2,599. இந்த திட்டத்தில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவை வழங்குகிறது. இந்த திட்டமும் ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும்.

டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தா

டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தா

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஜியோ மூலம் பல நீண்டகால திட்டங்களை வழங்குகிறது. சிறந்த ப்ரீபெய்ட் திட்டம் ரூ .2,599. இந்த திட்டம் அனைத்து ஜியோ பயன்பாடுகளுக்கான சந்தாவுடன் டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவையும் வழங்குகிறது. இந்த திட்டம் ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் தினசரி 10 ஜிபி போனஸ் டேட்டா, தினசரி 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. வரம்பற்ற ஜியோ குரலழைப்பு, பிற எண்களுக்கு 12,000 நிமிட பிற நிறுவன அழைப்புகள் ஆகியவையை வழங்குகிறது. தினசரி 100 எஸ்எம்எஸ்களும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

VI ரூ.2,595 மதிப்புள்ள ப்ரீபெய்ட் திட்டம்

VI ரூ.2,595 மதிப்புள்ள ப்ரீபெய்ட் திட்டம்

வீ (வோடபோன் ஐடியா) நிறுவனம் ரூ.2,595 மதிப்புள்ள ப்ரீபெய்ட் திட்டத்தை பல்வேறு சலுகையோடு வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் தினசரி 2 ஜிபி டேட்டா தரவை பெறலாம். இந்த திட்டம் 365 நாட்களுக்கு செல்லுபடியாகும். வரம்பற்ற குரலழைப்பு, தினசரி 100 எஸ்எம்எஸ் சலுகையும் வழங்கப்படுகிறது. ரூ.999 மதிப்புள்ள ஜீ5 ப்ரீமியம் சந்தா, டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் சந்தா உள்ளிட்டவைகளை வழங்குகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Jio, Airtel, VI Offers Long Term Prepaid Recharge Plans For Customers: Here the Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X