இதுல போடுங்க போட்டியை, அமோகம்- ரூ.20 கீழ் போட்டிப்போட்டு ரீசார்ஜ் திட்டங்கள்: ஜியோ, ஏர்டெல், விஐ எது பெஸ்ட்!
நாடு முழுவதும் உள்ள தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களது ப்ரீபெய்ட் கட்டணத்தை உயர்த்தி அறிவித்து வருகிறது. தொடர்ந்து டேட்டா வவுச்சர்கள் ஏர்டெல், ஜியோ மற்றும் விஐ ஆகியவற்றால் புதுப்பிக்கப்பட்டுள்ளன. ஜியோ ப்ரீபெய்ட் கட்டணங்களை 20 சதவீதமும், ஏர்டெல் மற்றும் விஐ 25 சதவீதமும் அதிகரித்துள்ளது. நிறுவனங்களை டேட்டா பேக்குகள் உள்ளிட்ட கட்டணங்களை அதிகரிப்பதால் வாடிக்கையாளர்கள் வழக்கமான திட்டங்களில் இருந்து பின்வாங்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். தங்கள் திட்டங்களில் போதுமான டேட்டா இல்லை என்ற பட்சத்தில் பயனர்கள் கூடுதல் டேட்டா வவுச்சர்களை தேர்வு செய்யலாம்.

டேட்டா வவுச்சர்கள்
இந்த டேட்டா வவுச்சர்கள் ஆனது எஸ்எம்எஸ் மற்றும் குரலழைப்பு நன்மைகளுக்கு முன்னுரிமை அளித்து டேட்டா தேவைப்படும் எனும் போது இந்த டேட்டா வவுச்சர்கள் பயனுள்ளதாக இருக்கும். இந்த டேட்டா வவுச்சர்களில் பெரும்பாலானவை தற்போதைய திட்டத்தின் வவுச்சர்களை நீடிக்கும் வகையிலேயே இருக்கிறது. சில வவுச்சர்கள் தனித்த திட்டங்களவாகும் செயல்படுகின்றன. தனித்தனியாகவும் சந்தா செலுத்தலாம்.

ஏர்டெல் டேட்டா வவுச்சர்கள்
ஏர்டெல் டேட்டா வவுச்சர்கள் ரூ.58-ல் தொடங்குகின்றன. ரூ.58 வவுச்சரில் 3 ஜிபி டேட்டா வழங்கப்படுகின்றன. ஏர்டெல் கார்டில் தற்போதைய திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் வரை டேட்டா கிடைக்கும். அடுத்த டேட்டா வவுச்சர் ரூ.98-க்கு கிடைக்கும். ரூ.98 வவுச்சர் 5ஜிபி டேட்டாவை வழங்குகிறது. கூடுதலாக இது விங்க் மியூசிக் அணுகலை வழங்குகிறது. ஏர்டெல் ரூ.108, ரூ.118 மற்றும் ரூ.148 விலையில் பல்வேறு டேட்டா திட்டங்களை கொண்டுள்ளது. இந்த திட்டங்கள் முறையே 6 ஜிபி டேட்டா, 12 ஜிபி டேட்டா மற்றும் 15 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. ஏர்டெல்லின் ரூ.301 டேட்டா வவுச்சர் திட்டமானது வாடிக்கையாளர்களுக்கு 50 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இதில் விங்க் மியூசிக் ப்ரீமியத்திற்கான அணுகலை வழங்குகிறது.

ஜியோ டேட்டா வவுச்சர்கள்
ஜியோ டேட்டா வவுச்சர்கள் குறித்து பார்க்கையில், ஜியோ ரூ.15 முதல் பல்வேறு டேட்டா வவுச்சர்களை வழங்குகிறது. ஜியோவின் குறைந்த விலை வவுச்சர்கள், டேட்டா வவுச்சர்கள் போன்ற பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. ஜியோ நிறுவனம் ரூ.15, ரூ.25, ரூ.61 மற்றும் ரூ.121 டேட்டா வவுச்சர்களை வழங்குகின்றன. இந்த வவுச்சர்கள் ஆனது முறையே 1 ஜிபி, 2 ஜிபி, 6 ஜிபி மற்றும் 12 ஜிபி டேட்டாவை வழங்குகின்றன. ஜியோ ரூ.181, ரூ.241 மற்றும் ரூ.301 விலையில் வீட்டில் இருந்து வேலை செய்யும் டேட்டா பேக்குகளை வழங்குகிறது. இந்த திட்டங்களானது 30 ஜிபி, 40 ஜிபி மற்றும் 50 ஜிபி டேட்டாக்களை வழங்குகிறது. இந்த திட்டமானது 30 நாட்கள் செல்லுபடியாகும் நன்மைகளோடு வருகிறது.

விஐ டேட்டா வவுச்சர்கள்
விஐ டேட்டா வவுச்சர்கள் ரூ.19 டேட்டா வவுச்சர் 24 மணிநேரத்துக்கு செல்லுபடியோடு வழங்குகிறது. இந்த திட்டத்தில் 1ஜிபி டேட்டாவை வழங்குகிறது. ஜியோ ரூ.100-க்கு குறைவான விலையில் மூன்று வவுச்சர்களை வழங்குகிறது. இந்த வவுச்சர்கள் முறையே ரூ.48, ரூ.50 மற்றும் ரூ.98 என்ற விலையில் வழங்குகின்றன. இந்த திட்டங்களில் முறையே 2 ஜிபி டேட்டா, 3 ஜிபி டேட்டா மற்றும் 9 ஜிபி டேட்டா நன்மைகளை வழங்குகிறது. விஐ முறையே ரூ.118, ரூ.298 மற்றும் ரூ.418 டேட்டா வவுச்சர்களை வழங்குகிறது. இந்த திட்டங்கள் முறையே 12 ஜிபி டேட்டா, 50 ஜிபி டேட்டா மற்றும் 100 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த விஐ திட்டங்களானது 28 நாட்கள் வேலிடிட்டியோடு வருகிறது.

ஜியோவின் இணையதளத்தின் பட்டியல்
ஜியோவின் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள ஃப்ரீடம் திட்டங்கள் ரூ.127-ல் தொடங்குகின்றன. ரூ.127 திட்டமானது 15 நாட்கள் வேலிடிட்டியுடன் 12 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. ரூ.247 திட்டமானது பயனர்கள் 25 ஜிபி டேட்டாவை 30 நாட்கள் வேலிடிட்டியோடு வருகிறது. அதேபோல் ரூ.447 திட்டமானது 60 நாட்கள் வேலிடிட்டியோடு 50 ஜிபி டேட்டாவை வழங்குகிறது.


Click it and Unblock the Notifications