ஜியோ, ஏர்டெல், விஐ பயனர்களே: தினசரி 2ஜிபி டேட்டா வேண்டுமா?- இதோ சிறந்த ரீசார்ஜ் திட்டம்!

|

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு சலுகைகளை அறிவித்து வருகின்றன. ஏர்டெல், ஜியோ மற்றும் விஐ நிறுவனங்கள் இந்தியாவில் முன்னணியில் இருக்கிறது. இந்த நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு தங்களது வாடிக்கையாளர்களை அதிகரிக்கும் நோக்கிலும், தக்க வைக்கும் நோக்கிலும் திட்டங்களை வழங்கி வருகின்றன. பயனர்களின் டேட்டா தேவை அதிகரித்து வரும் நிலையில் அதை உணர்ந்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பயனர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன. டேட்டா நன்மை, குரல் அழைப்பு, எஸ்எம்எஸ், ஸ்ட்ரீமிங் சேவை உள்ளிட்டவைகளை குறி வைத்து திட்டங்கள் தொகுத்து வழங்கப்படுகின்றன. ஏர்டெல், விஐ, ஜியோ வழங்கும் தினசரி 2 ஜிபி டேட்டா திட்டங்களை விரிவாக பார்க்கலாம்.

ஏர்டெல் 2 ஜிபி தினசரி டேட்டா ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் 2 ஜிபி தினசரி டேட்டா ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் 2 ஜிபி தினசரி டேட்டா ப்ரீபெய்ட் திட்டம் மற்றும் வருடாந்திர தினசரி 2 ஜிபி ப்ரீபெய்ட் திட்டத்தை தொகுத்து வழங்குகின்றன. ஏர்டெல் நிறுவனம் பல்வேறு விலைப்பிரிவில் திட்டங்களை வழங்குகிறது. அது 28 நாட்கள் சலுகைகளுடன் ரூ.179 திட்டம், 28 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் ரூ.359 திட்டம், 56 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் ரூ.549 திட்டம், 56 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் ரூ.839 திட்டம், 365 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் ரூ.1799 திட்டம், 365 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் ரூ.2999 திட்டம் மற்றும் 365 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் ரூ.3359 திட்டங்கள் வழங்கப்படுகின்றன. இந்த திட்டங்கள் அனைத்தும் தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளை வழங்குகின்றன. ஸ்ட்ரீமிங் நன்மைகளும் இந்த திட்டங்களில் வழங்கப்படுகின்றன. இதில் பெரும்பாலானவை 30 நாட்கள் வழங்கப்படும் அமேசான் பிரைம் வீடியோ சலுகையாகும். மேலும் சில ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் பலன்களையும், ரூ.838 மற்றும் ரூ.3359 ஆகிய திட்டங்களில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாருக்கான ஒரு வருட சந்தா அணுகலையும் வழங்குகின்றன.

ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கான சலுகை

ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கான சலுகை

ஏர்டெல் சமீபத்தில் திட்டங்களின் விலையை உயர்த்தி அறிவித்தது. அதன்படி மாதம் ரூ.359 விலை திட்டத்தை தேர்வு செய்து ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள் மொத்தம் 12 மாத காலத்திற்கு ரூ.4308 செலுத்த வேண்டிய தேவை இருக்கிறது. அதற்கு பதிலாக ரூ.2999 செலுத்தி வருடாந்திர திட்டத்தை தேர்வு செய்யலாம். இதன் மூலம் ரூ.1309 சேமிக்கப்படும்.

ஜியோ 2 ஜிபி தினசரி டேட்டா ப்ரீபெய்ட் திட்டம் மற்றும் வருடாந்திர திட்டம்

ஜியோ 2 ஜிபி தினசரி டேட்டா ப்ரீபெய்ட் திட்டம் மற்றும் வருடாந்திர திட்டம்

ஜியோ 2 ஜிபி தினசரி டேட்டா ப்ரீபெய்ட் திட்டங்கள் ஆனது ரூ.249 முதல் தொடங்குகின்றன. அதிகபட்ச ஜியோ வருடாந்திர திட்டமானது ரூ.3119-க்கு கிடைக்கிறது. ஜியோ தினசரி 2 ஜிபி டேட்டா பல்வேறு விலைப்பிரிவுகளில் வழங்கப்படுகின்றன. 23 நாட்கள் செல்லுபடியாகும் திட்டத்தை ரூ.249-க்கு வழங்கப்படுகிறது. அதேபோல் 28 நாட்கள் வேலிடிட்டி திட்டம் ரூ.299 எனவும் 28 நாட்கள் வேலிடிட்டி திட்டம் ரூ.499 எனவும் 56 நாட்கள் வேலிடிட்டி திட்டம் ரூ.533 எனவும் 84 நாட்கள் வேலிடிட்டி திட்டம் ரூ.719 எனவும் 56 நாட்கள் வேலிடிட்டி திட்டம் ரூ.799 எனவும் 84 நாட்கள் வேலிடிட்டி திட்டம் ரூ.1066 எனவும் 365 நாட்கள் வேலிடிட்டி திட்டம் ரூ.2879 எனவும் 365 நாட்கள் வேலிடிட்டி திட்டம் ரூ.3119 எனவும் வழங்கப்படுகின்றன. அனைத்து திட்டங்களும் ஜியோவின் சொந்த ஸ்ட்ரீமிங் பயன்பாடுகள் உடன் வருகின்றன. இதில் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் 100 எஸ்எம்எஸ்கள் வழங்கப்படுகின்றன. அதேபோல் ரூ.499, ரூ.799, ரூ.1066 மற்றும் ரூ.3119 திட்டமானது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஸ்ட்ரீமிங் நன்மைகளுக்கான ஒரு வருட இலவச மொபைல் சந்தாவுடன் வழங்கப்படுகின்றன.

விஐ தினசரி 2ஜிபி ப்ரீபெய்ட் டேட்டா திட்டம்

விஐ தினசரி 2ஜிபி ப்ரீபெய்ட் டேட்டா திட்டம்

விஐ தினசரி 2 ஜிபி டேட்டா ப்ரீபெய்ட் திட்டங்கள் ஆனது 28 நாட்கள் வேலிடிட்டி திட்டம் ரூ.179 எனவும் 28 நாட்கள் வேலிடிட்டி திட்டம் ரூ.359 எனவும் 56 நாட்கள் வேலிடிட்டி திட்டம் ரூ.539 எனவும் 84 நாட்கள் வேலிடிட்டி திட்டம் ரூ.839 எனவும் தினசரி 2 ஜிபி டேட்டா சலுகைகள் உடன் வழங்கப்படுகின்றன.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Jio, Airtel, Vi Offers Daily 2GB Data Plans Under Various Prices- Here the List

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X