பக்கா பட்ஜெட் விலை: ரூ.250-க்கு கீழ் கிடைக்கும் சிறந்த ரீசார்ஜ் திட்டங்கள்: ஜியோ, ஏர்டெல், விஐ!
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு சலுகைகளை வழங்கி வருகிறது. இதில் ஜியோ, ஏர்டெல், விஐ நிறுவனம் ரூ.250-க்கு கீழ் வழங்கும் சிறந்த ரீசார்ஜ் திட்டங்களின் பட்டியல் குறித்து பார்க்கலாம்.

ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம்
ரிலையன்ஸ் ஜியோ தங்களது வாடிக்கையாளர்களுக்கு ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்குகிறது. இந்த திட்டமானது 28 நாட்கள் செல்லுபடியாகும், இதில் தினசரி 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கிறது. அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதேபோல் தொலைத் தொடர்பு நிறுவனம் ஐயூசி கட்டணங்களை நீக்கியுள்ளதால் அனைத்து நெட்வொர்க் அழைப்புகளுக்கும் இலவச வரம்பற்ற அழைப்புகள் கிடைக்கிறது.

ஜியோ ரூ.199 ப்ரீபெய்ட் திட்ட
அதேபோல் ஜியோ ரூ.199 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 1.5 ஜிபி டேட்டா, தினசரி 100 எஸ்எம்எஸ்கள் வழங்கப்படுகிறது. இந்த திட்டமானது 28 நாட்கள் செல்லுபடியாகும். அதேபோல் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வரம்பற்ற அழைப்புகளை வழங்குகிறது. மேலும் ரூ.149 திட்டத்தில் தினசரி 1 ஜிபி டேட்டாவை, வரம்பற்ற அழைப்புகளுடன் வழங்குகிறது.

விஐ ரூ.199 ரீசார்ஜ் திட்டம்
Vi ரூ.199, ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தை பொருத்தவரையில் ரூ.199 ரீசார்ஜ் திட்டத்தில் தினசரி 1 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வரம்பற்ற அழைப்புகளை வழங்குகிறது. இந்த திட்டம் 24 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம்
Vi ரீசார்ஜ் திட்டத்தை பொருத்தவரை ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 1.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தில் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வரம்பற்ற அழைப்புகளை வழங்குகிறது. இந்த திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். தினசரி 100 எஸ்எம்எஸ்கள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

ரூ.250-க்கு கீழ் ஏர்டெல் ரீசார்ஜ் திட்டம்
ரூ.250-க்கு கீழ் ஏர்டெல் ரூ.199, ரூ.219, ரூ.249 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை வழங்குகிறது. ரூ.199 ப்ரீபெய்ட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற அழைப்புகளையும், தினசரி 1 ஜிபி தரவையும் வழங்குகிறது. மேலும் தினசரி 100 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது. இந்த திட்டம் மொத்தம் 24 நாட்களுக்கு செல்லுபடியாகும். இதில் இலவச வரம்பற்ற ஹலோ டியூன்கள், விங்க் மியூசிக் அணுகல் உள்ளிட்ட அணுகல் வழங்கப்படுகிறது. இதே நன்மைகளுடன் ரூ.219 திட்டமானது மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

ரூ.249 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்
ஏர்டெல் ரூ.249 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் தினசரி 1.5 ஜிபி டேட்டா தரவை, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் வழங்கப்படுகிறது. இந்த திட்டமானது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். இதிலும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ப்ரீமியம், ஹலோடியூன்களுக்கான இலவச அணுகல் உள்ளிட்டவைகள் வழங்கப்படுகின்றன.


Click it and Unblock the Notifications