Home
News

நமக்கு இதெல்லாம் சரியா இருக்கும்: குறைந்த விலையில் நிறைந்த ரீசார்ஜ் திட்டம்-ரூ.300க்கு கீழ் ஜியோ, ஏர்டெல், விஐ

கொரோனா கட்டுப்பாடுகளில் இருந்து தற்போது கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டு வருகிறோம். கொரோனா தொற்று பரவல் தொடங்கிய காலம் முதல் வாழ்க்கை முறை மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது என்றே கூறலாம். வீட்டில் இருந்து வேலை, ஆன்லைன் படிப்பு, ஸ்ட்ரீமிங் தள அணுகல், பொழுதுபோக்கு வீடியோ என பல்வேறு தேவைகளும் பிரதானமானது. இவை அனைத்துக்கும் அவசியமாக இருக்கும் ஒரே விஷயம் இணைய சேவை ஆகும். தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இவற்றை ஈடு செய்ய போட்டிப்போட்டுக் கொண்டு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன.

கட்டண விலை உயர்வு

கட்டண விலை உயர்வு

அதேபோல் நாட்டில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் கட்டண விலை உயர்வை தொடர்ந்து அறிவித்தன. விஐ, ஏர்டெல் நிறுவனத்தை தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ என தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களது கட்டணத்தை உயர்த்தி அறிவித்தன. கட்டண உயர்வால் பயனர்கள் புதிய திட்டங்களை தேட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கட்டண உயர்வை சமாளிக்க சில சலுகைகளையும் அறிவித்து வருகிறது. புதிய திட்டங்களை தேர்வு செய்யும் நிலையில் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். வாடிக்கையாளர்கள் தொடர்ந்து தேர்ந்தெடுக்கும் அதே திட்டத்தின் விலையில் அதே அளவிலான ஒத்த நன்மைகளை வழங்க தயாராகி வருகின்றனர். அதற்கு ஏற்ப தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரூ.300-க்கு கீழ் வாழங்கும் சிறந்த திட்டங்களின் விவரங்களை பார்க்கலாம்.

ஜியோ ரூ.299 திட்டம்

ஜியோ ரூ.299 திட்டம்

ஜியோ ரூ.299 திட்டமானது இந்த விலைப்பிரிவில் கிடைக்கும் சிறந்த திட்டமாகும். ஜியோவின் ரூ.299 திட்டமானது 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இந்த திட்டம் செல்லுபடியாகும் காலம் முழுவதும் தினசரி 2 ஜிபி டேட்டா என மொத்தம் 56 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதேபோல் ரூ.299 திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்புகள், தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச சந்தா ஆகியவையும் வழங்குகின்றன. ஜியோ மார்ட்டில் 20% கேஷ்பேக் சலுகையும் இந்த திட்டத்தில் வழங்குகிறது. ஜியோமார்ட் கேஷ்பேக் சலுகையின் ஒரு பகுதியாக ஜியோவின் ப்ரீபெய்ட் சந்தாதாரர்களுக்கு ரூ.200 கேஷ்பேக் சலுகையும் வழங்கப்படுகிறது.

ஜியோ ரூ.239 திட்டம்

ஜியோ ரூ.239 திட்டம்

ஜியோ ரூ.239 திட்டமானது ரிலையன்ஸ் ஜியோவின் சிறந்த திட்டமாகும். இது 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இந்த திட்டத்தில் தினசரி 1.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. தினசரி 1.5 ஜிபி டேட்டா என மொத்தம் 42 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. ரூ.239 திட்டமானது வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது. ரிலையன்ஸ் ஜியோவானது ரூ.239 திட்டமானது ஜியோ ஆப்ஸ்களுக்கான இலவச சந்தாக்களை வழங்குகிறது.

ஜியோ ரூ.199 திட்டம்

ஜியோ ரூ.199 திட்டம்

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.199 திட்டமானது மொத்தம் 23 நாட்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. ரூ.199 திட்டமானது தினசரி 1.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. ரூ.199 திட்டமானது செல்லுபடியாகும் மொத்த காலத்திற்கும் மொத்தம் 34.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.199 திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்புகள், தினசரி 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் ஜியோ ஆப்ஸ்களுக்கான இலவச சந்தாக்கள் ஆகியைவையை வழங்குகின்றன.

ஏர்டெல் ரூ.299 திட்டம்

ஏர்டெல் ரூ.299 திட்டம்

ஏர்டெல்லின் ரூ.299 திட்டமாது தினசரி 1.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டமானது 28 நாட்களு்கு செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் தினசரி 1.5 ஜிபி டேட்டா என மொத்தம் 42 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. ஏர்டெல்லின் ரூ.299 திட்டமானது வரம்பற்ற குரல் அழைப்புகள், தினசரி 100 எஸ்எம்எஸ், அமேசான் பிரைம் வீடியோவுக்கான 30 நாட்கள் அணுகல், ஃபாஸ்ட்டேக் ரீசார்ஜில் ரூ.100 கேஷ்பேக், இலவச ஷா அகாடமி சலுகை ஆகியவை வழங்கப்படுகின்றன.

ஏர்டெல் ரூ.209 திட்டம்

ஏர்டெல் ரூ.209 திட்டம்

ஏர்டெல் ரூ.209 திட்டமானது தினசரி 1 ஜிபி டேட்டாவை 21 நாட்களுக்கு வழங்குகிறது. செல்லுபடியாகும் மொத்த காலத்திற்கும் மொத்தம் 21 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. ரூ.209 திட்டத்தில் ஏர்டெல் வரம்பற்ற குரல் அழைப்புகள், அமேசான் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பிற்கான 30 நாட்கள் இலவச சந்தா மற்றும் இலவச விங்க் மியூசிக் அணுகல் ஆகியவையை வழங்குகின்றன.

ஏர்டெல் ரூ.155 திட்டம்

ஏர்டெல் ரூ.155 திட்டம்

ஏர்டெல் ரூ.155 திட்டமானது தினசரி 1ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டமானது 24 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் வரம்பற்ற குரலழைப்புகள், தினசரி 100 எஸ்எம்எஸ்கள், அமேசான் பிரைம் சந்தா அணுகலுக்கான 30 நாட்கள் வேலிடிட்டி, இலவச விங்க் மியூசிக் சந்தா உள்ளிட்டவையை வழங்குகிறது.

விஐ ரூ.239 திட்டம்

விஐ ரூ.239 திட்டம்

விஐ ரூ.239 திட்டமானது 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இது தினசரி 1.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மொத்த செல்லுபடியாகும் காலத்திற்கும் விஐ பயனர்களுக்கு 42 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. விஐ நிறுவனத்தில் வரம்பற்ற குரல் அழைப்புகள், தினசரி 100 எஸ்எம்எஸ், 2ஜிபி வரை பேக்அப் டேட்டா, வார இறுதி நாட்களில் ரோல் ஓவர் டேட்டா சலுகை ஆகியவைகளை வழங்குகிறது.

விஐ ரூ.199 திட்டம்

விஐ ரூ.199 திட்டம்

விஐ ரூ.199 திட்டமானது மொத்தம் 18 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் பயனர்களுக்கு தினசரி 1 ஜிபி டேட்டா உள்ளிட்டவையை வழங்குகிறது. தினசரி 1 ஜிபி டேட்டா என மொத்தம் 18 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் விஐ வரம்பற்ற குரல் அழைப்புகள், தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் விஐ மூவிஸ் இலவச சந்தாக்கள் உள்ளிட்டவையை வழங்குகின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio, Airtel, Vi Offers Best Recharge Plans at Under Rs.300: Here the List
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X