ஜியோ, ஏர்டெல், விஐ பயனர்களே- உங்களுக்கான சிறந்த ப்ரீபெய்ட் திட்டம்: வருடம் முழுவதும் உங்க நேரம்தான்!

|

இந்திய தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் திட்டங்களின் விலை அதிகரித்து அறிவித்து வருகிறது. நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களை தக்க வைக்க பல்வேறு விலைப் பிரிவில் திட்டங்களை அறிவித்து வருகின்றன. நீண்ட கால செல்லுபடியாகும் சில திட்டங்களை ஒப்பீட்டளவில் மலிவானவை ஆகும். இந்த திட்டத்தில் ஓடிடி சந்தா உட்பட கூடுதல் சந்தா நன்மைகளை வழங்குகிறது.

ரிலையன்ஸ் ஜியோ வருடாந்திர திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ வருடாந்திர திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ வருடாந்திர திட்டங்கள் குறித்த விவரங்களை பார்க்கலாம். சந்தாதாரர்களுக்கு மூன்று வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டங்களை நிறுவனம் வழங்குகிறது. ஜியோ வருடாந்திர திட்டங்களின் முதல் திட்டம் ரூ.2879 விலையில் கிடைக்கிறது. இந்த திட்டமானது 365 நாட்களுக்கு செல்லுபடியாகும், இந்த திட்டத்தில் 2 ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் டேட்டா மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட அணுகலை வழங்குகிறது.

கூடுதல் ஓடிடி நன்மைகள்

கூடுதல் ஓடிடி நன்மைகள்

இந்த திட்டத்தின் தனித்தன்மை என்னவென்றால் கூடுதல் ஓடிடி நன்மைகள் வழங்கப்படுகிறது. அதேபோல் ரூ.3119 விலையில் கிடைக்கும் திட்டமானது 365 நாட்களுக்கு செல்லுபடியாகும் இந்த திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. ரிலையன்ஸ் ஜியோவில் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் 100 எஸ்எம்எஸ்கள் உள்ளிட்டவைகளை வழங்குகிறது. இந்த திட்டமானது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாருக்கான வருடாந்திர சந்தாவுடன் கூடுதலாக 10 ஜிபி டேட்டாவை வழங்குகிறது.

அதிக டேட்டாவுடன் கூடிய நன்மைகள்

அதிக டேட்டாவுடன் கூடிய நன்மைகள்

அதேபோல் அதிக டேட்டாவுடன் கூடிய நன்மைகள் குறித்த விவரங்களை பார்க்கையில், இந்த திட்டம் ரூ.4199 என்ற விலையில் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் தினசரி 3 ஜிபி டேட்டா நன்மைகள் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் 365 நாட்கள் நன்மையுடன் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்புகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளை வழங்குகிறது. ரிலையன்ஸ் ஜியோ தற்போது ரூ.2545 விலையில் 365 நாட்களுக்கான ஹேப்பி நியூ இயர் திட்டத்ததை வழங்குகிறது. இந்த திட்டத்தின் சாதாரண செல்லுபடியாகும் காலம் 336 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. தினசரி 1.5 ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகள் தினசரி 100 எஸ்எம்எஸ்கள் உள்ளிட்ட நன்மைகளை வழங்குகிறது. ஜியோவின் இந்த திட்டங்கள் ஜியோ டிவி மற்றும் ஜியோ சினிமா போன்ற ஜியோ பயன்பாடுகளுக்கான அணுகலை வழங்குகிறது.

 ரூ.1799 விலையில் கிடைக்கும் திட்டம்

ரூ.1799 விலையில் கிடைக்கும் திட்டம்

விஐ வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டமானது ரூ.1799 விலையில் கிடைக்கிறது. இந்த திட்டமானது மொத்தம் 3600 எஸ்எம்எஸ்கள் மற்றும் 24 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டம் சுமார் 365 நாட்கள் நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டம் விஐ திரைப்படங்கள் மற்றும் டிவிக்கான அணுகலை வழங்குகிறது. கூடுதலாக இரண்டு திட்டங்கள் டேட்டா திட்டங்களாக வழங்கப்படுகின்றன. இந்த திட்டங்கள் ஆனது ரூ.2899 மற்றும் ரூ.3099 என்ற விலையில் வழங்குகிறது. இந்த இரண்டு திட்டங்களும் தினசரி 1.5 ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ்கள் உள்ளிட்ட நன்மைகளை வழங்குகிறது. ரூ.3099 திட்டமானது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாருடன் ஆன வருடாந்திர சந்தாவுடன் வருகிறது.

ஏர்டெல் ரீசார்ஜ் திட்டம்

ஏர்டெல் ரீசார்ஜ் திட்டம்

ஏர்டெல் ரூ.1799 திட்டமானது ரூ.1799 விலையில் கிடைக்கிறது. இந்த திட்டமானது 365 நாட்களுக்கு வரம்பற்ற அழைப்புகள் நன்மையுடன் மொத்தம் 24 ஜிபி டேட்டா மற்றும் 3600 எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது. இரண்டு திட்டங்களை தினசரி டேட்டா திட்டங்களுடன் நிறுவனம் வழங்குகிறது. இந்த திட்டங்களானது ரூ.2999 மற்றும் ரூ.3359 என்ற விலையில் கிடைக்கிறது. இந்த திட்டம் ஆனது தினசரி 2 ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளை வழங்குகிறது. ரூ.3599 திட்டமானது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரின் வருடாந்திர சந்தாவுடன் வருகிறது. கூடுதலாக அமேசான் பிரைம் வீடியோ, விங்க் மியூசிக், ஷா அகாடமி உள்ளிட்ட அணுகலை வழங்குகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Jio, Airtel, Vi offers Best Annual Prepaid plans: Here the List

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X