Jio, Airtel, Vi சிம் இருக்கா? இனிமே ரூ.200-க்குள்ள 90 நாட்கள்.. 3 மாசத்துக்கு நோ டென்ஷன்.. விட்ராதீங்க ப்ரோ!
ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் விஐ (Vi) சிம் கார்டுகளை வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு ரூ.200 பட்ஜெட்டைவிட மலிவான விலைக்கு கிடைக்கும் 90 நாட்கள் சந்தா கொண்ட திட்டங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம். இதில் டேட்டா மற்றும் ஓடிடி சலுகைகள் மட்டுமே கிடைக்கும். ஆகவே, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளை எதிர்பார்க்க முடியாது. ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) ஓடிடி சந்தாவை இந்த திட்டங்கள் இலவசமாக கொடுக்கின்றன. இதுகுறித்த விவரம் இதோ.
டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோசினிமா ஓடிடி ஆப்கள் இணைந்து ஜியோஹாட்ஸ்டார் ஓடிடியாக மாறியது. அதே நேரத்தில் ஐபிஎல் 2025 போட்டிகளும் தொடங்கியதில் அந்த ஓடிடி சந்தாவுக்கான வரவேற்பு எகிறியது. அதுமட்டுமல்லாமல், ரூ.100 மதிப்பிலான திட்டத்தில் 90 நாட்களுக்கான ஜியோஹாட்ஸ்டார் சந்தாவை ஜியோ கொடுக்க தொடங்கியது.

இதனால், ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற மற்ற நிறுவனங்களும் லாபம் பார்க்காமல், அடிமட்ட விலையிலான டேட்டா திட்டங்களில் இலவச ஜியோஹாட்ஸ்டார் சந்தாவையும் கொடுக்க தொடங்கின. இப்படி, ரூ.200 விலைக்கும் கீழ் ஏகப்பட்ட ஜியோஹாட்ஸ்டார் திட்டங்கள் களமிறக்கப்பட்டன. இதை ஒவ்வொன்றாக இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஜியோ ரூ 100 திட்டம் (Jio Rs 100 Plan): இந்த டேட்டா திட்டத்தில் 5 ஜிபி டேட்டா அதற்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா (Post Data) கிடைக்கும். இதுபோக 90 நாட்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தா (Mobile Subscription) கொடுக்கப்படும். இதற்கு கஸ்டமர்களிடம் ஆக்டிவ் ப்ரீபெய்ட் திட்டம் (Active Prepaid Plan) இருக்க வேண்டியது கட்டாயமாகும்.
ஜியோ ரூ 195 திட்டத்திலும் 90 நாட்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தா கொடுக்கப்படுகிறது. அதேபோல 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கிறது. ஆனால், இந்த டேட்டா திட்டத்துக்கு 15 ஜிபி டேட்டா கொடுக்கப்படுகிறது. இதற்கு அடுத்து இருக்கும் ஜியோஹாட்ஸ்டார் திட்டங்கள் வாய்ஸ் கால்களுடன் அதிக விலைக்கு தொடங்குகின்றன.
ஏர்டெல் ரூ 100 திட்டம் (Airtel Rs 100 Plan): இந்த டேட்டா திட்டமும் ஜியோவின் ரூ.100 திட்டத்தை போலவே இருக்கிறது. ஆகவே, 5 ஜிபி டேட்டா கிடைக்கும். ஆனால், போஸ்ட் டேட்டா கிடைக்காது. 90 நாட்களுக்கான ஜியோஹாட்ஸ்டார் கிடைக்கும். ஆனால், டேட்டாவுக்கு 30 நாட்களுக்கு மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். ஆக்டிவ் திட்டம் இதற்கும் வேண்டும்.
ஏர்டெல் ரூ 195 திட்டத்திலும் 90 நாட்களுக்கான ஜியோஹாட்ஸ்டார் சந்தா கிடைக்கிறது. இந்த திட்டத்துக்கு 15 ஜிபி டேட்டா கொடுக்கப்படுகிறது. முந்தைய திட்டத்தை போலவே இதிலும் போஸ்ட் டேட்டா கிடைக்காது. ஆகவே, ஒரு எம்பிக்கு 50 பைசா கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இப்போது, வோடபோன் ஐடியாவில் கிடைக்கும் ஹாட்ஸ்டார் திட்டத்தை பார்ப்போம்.
வோடபோன் ஐடியா ரூ 101 திட்டம் (Vodafone Idea Rs 101 Plan): இந்த டேட்டா திட்டத்தில் 4 ஜிபி டேட்டா, 90 நாட்களுக்கான ஜியோஹாஸ்டார் மொபைல் சந்தா கிடைக்கிறது. டேட்டாவுக்கு 30 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். இதற்கு சர்வீஸ் வேலிடிட்டி கிடைக்காது. வோடபோன் ஐடியா ரூ 151 திட்டத்திலும் 90 நாட்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் கிடைக்கிறது.
30 நாட்களுக்கு டேட்டா வேலிடிட்டி கிடைக்கிறது. இதற்கு 4 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கிறது. இதற்கு அடுத்து வோடபோன் ஐடியா ரூ 169 திட்டம் இருக்கிறது. இதில் முந்தைய திட்டங்களை போல 90 நாட்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தா மற்றும் 8 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கிறது. ரூ.200 விலைக்கு கீழ் இந்த டேட்டா சலுகைகள் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








