ஜியோ, ஏர்டெல், வி: ஸ்பேம் அழைப்புகளை தடுப்பது எப்படி? சிம்பிள் டிப்ஸ்.!

|

ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் தொடர்ந்து சிறப்பான சலுகைகள் மற்றும் அருமையான திட்டங்களை வழங்கி வருகின்றன. குறிப்பாக இந்நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு சில சிறப்பான சலுகைகளை வழங்குகின்றன.

இதுபோன்ற ஸ்பேம்

மேலும் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா சிம் பயன்படுத்தும் பயனர்களுக்கு ஒரு முக்கியமான பிரச்சனை என்வென்றால் ஸ்பேம் அழைப்புகள் தான். அதாவது நமக்கு முக்கியமான நேரங்களில் தேவையில்லாத அழைப்புகள் வரும். அது என்வென்றால், டெலிமார்க்கெட்டர்கள் மற்றும் வங்கிகளிடமிருந்து வரும் அழைப்புகள் தான். இன்னும் சுருக்கமாக கூறவேண்டும் என்றால், நாங்கள்வங்கியில் இருந்துபேசுகிறோம், லோன் தருகிறோம் என பலமுறை தேவையில்லாத அழைப்புகள் வரும். இதுபோன்ற ஸ்பேம் அழைப்புகளை தடுப்பதற்கு வழி உள்ளது.

ஸ்பேம் அழைப்புகளை தடுக்க முடியும்

அதாவது ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா சிம் பயன்படுத்தும் பயனர்கள் வலைத்தளம் அல்லது மெசேஜ் மூலம் இந்த ஸ்பேம்அழைப்புகளை தடுக்க முடியும். இப்போது ஸ்பேம் அழைப்புகளை தடுக்கும் வழிமுறைகளை விரிவாகப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி எஸ் 20 எஃப்இ 5 ஜி இந்தியாவில் அறிமுகம்.. சிறப்பு விலை இது தான் மிஸ் பண்ணாதீங்க..சாம்சங் கேலக்ஸி எஸ் 20 எஃப்இ 5 ஜி இந்தியாவில் அறிமுகம்.. சிறப்பு விலை இது தான் மிஸ் பண்ணாதீங்க..

ஏர்டெல்-ஸ்பேம் அழைப்புகளை தடுப்பது எப்படி?

ஏர்டெல்-ஸ்பேம் அழைப்புகளை தடுப்பது எப்படி?

வழிமுறை-1
முதலில் ஏர்டெல் நிறுவனத்தின் https://www.airtel.in/airtel-dnd/ வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும். அங்கு Airtel Mobile Services என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

வழிமுறை-2
Airtel Mobile Services தேர்வு செய்த பின்பு Click Here என்பதை கிளிக் செய்யவும். அதன்பிறகு OTP-ஐப் பெற உங்களது மொபைல் எண்ணை உள்ளிடவும்.

வழிமுறை-3
அடுத்து சரியான இடத்தில் OTP ஐ உள்ளிட்டு சரிபார்க்கவும். பின்பு அனைத்து பிரிவுகளிலும் விளம்பரங்களைத் தடுக்க உங்களைஅனுமதிக்கும். அதாவது வங்கிகள், ரியல் எஸ்டேட், சுகாதார கல்வி, உணவு, பானங்கள், சுற்றுலா மற்றும் பலவற்றில் வரும் தேவையில்லாத ஸ்பேம் அழைப்புகளை நீங்கள் தடுக்க முடியும்.

வோடபோன் ஐடியா-ஸ்பேம் அழைப்புகளை தடுப்பது எப்படி?

வோடபோன் ஐடியா-ஸ்பேம் அழைப்புகளை தடுப்பது எப்படி?

வழிமுறை-1
முதலில் வோடபோன்ஐடியா நிறுவனத்தின் www.myvi.in/dnd வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும். அந்த பக்கத்தில்உங்களது மொபைல் எண்ணை உள்ளிடவும்.

வழிமுறை-2
அடுத்து நீங்கள் பதிவிட்ட மொபைல் எண்ணிற்கு OTP ஒன்று கிடைக்கும். அதை உள்ளிட்டு, மின்னஞ்சல் முகவரி மற்றும் பெயர் உள்ளிட்ட விவரங்களை கொடுக்க வேண்டும்

வழிமுறை-3
அடுத்து நீங்கள் Full அல்லது Partial எனும் விருப்பத்தைக் கிளிக் செய்து Submit செய்ய வேண்டும். இந்த வசதிமூலம் நீங்கள் தேவையில்லாத அழைப்புகளை தவிர்க்க முடியும்.

ஜியோ-ஸ்பேம் அழைப்புகளை தடுப்பது எப்படி?

ஜியோ-ஸ்பேம் அழைப்புகளை தடுப்பது எப்படி?

வழிமுறை-1
ஜியோ பயனர்கள் முதலில் https://www.jio.com/en-in/faq/apps/my-jio/how-do-i-activate-do-not-disturb-dnd.html என்ற வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும்.

வழிமுறை-2
அடுத்து மைஜியோ பக்கத்தில் Sign In செய்து Menu பிரிவில் கிளிக் செய்யவும். பின்னர் Profile & other Settingsஎன்பதை தேர்வு செய்து அதில் இருக்கும் DND விருப்பத்தை கிளிக் செய்யவும்.

வழிமுறை-3
அதன்பின்னர் preference என்பதை தேர்வு செய்து Submit பொத்தானைக் கிளிக் செய்தால் போதும். இதன் மூலம்தேவையில்லாத அழைப்புகளை தடுக்க முடியும்.

மெசேஜ் மூலம் ஸ்பேம் அழைப்புகளை தடுப்பது எப்படி?

மெசேஜ் மூலம் ஸ்பேம் அழைப்புகளை தடுப்பது எப்படி?

தேவையில்லாத ஸ்பேம் அழைப்புகளை நிறுத்த 1909எண்ணுக்கு மெசேஜ் அனுப்ப வேண்டும். மேலும் உங்கள் மொபைல் எண்ணில் DND சேவைகளை செயல்படுத்த தொலைத் தொடர்பு நிறுவனம் ஒரு வாரம் எடுத்துக்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு 1909 அனைத்து ஆபரேட்டர்களுக்கும் வேலை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Jio, Airtel, Vi: How to block spam calls? Simple tips: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X