Jio, Airtel, Vi, BSNL: ரூ.147 முதல் முழுசா 30 நாள் வேலிடிட்டி கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள்..இது ஏன் பெஸ்ட்

|

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) சமீபத்தில் ஒரு புதிய விதியை கட்டாயமாக்கியது. இதன்படி, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் குறைந்தபட்சம் ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தையாவது முழு மாத செல்லுபடியுடன் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பல திட்டங்களை 30 நாட்கள் செல்லுபடியுடன் கொண்டு வந்தன. இப்போது, ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல், விஐ (வோடாஃபோன் ஐடியா) மற்றும் BSNL (பிஎஸ்என்எல்) வழங்கும் ​​30 நாட்கள் வேலிடிட்டியுடன் வரக் கூடிய ப்ரீபெய்ட் திட்டங்களைப் பற்றிப் பார்க்கப் போகிறோம்.

30 நாள் செல்லுபடியாகும் திட்டம் எப்படி செயல்படும் தெரியுமா?

30 நாள் செல்லுபடியாகும் திட்டம் எப்படி செயல்படும் தெரியுமா?

ஜியோ வழங்கும் ரூ. 259 ப்ரீபெய்ட் திட்டம் முழுமையான ஒரு மாத வேலிடிட்டி திட்டமாகும். நீங்கள் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், இந்தத் திட்டத்துடன் ரீசார்ஜ் செய்யும் தேதி ஒவ்வொரு மாதமும் ஒரே மாதிரியாக இருக்கும் என்பது கவனிக்கத்தக்கது. எடுத்துக்காட்டாக, ஜூன் 5 ஆம் தேதி இந்தத் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால், அடுத்த ரீசார்ஜ் ஜூலை 5, ஆகஸ்ட் 5 மற்றும் பல தேதிகளில் தொடரும். ஒரு மாதத்திற்கு 30 அல்லது 31 நாட்கள் உள்ளதா என்பதைப் பொருட்படுத்தாமல், ரீசார்ஜ் செய்யும் தேதி பயனர்களுக்கு ஒரே மாதிரியாக இருக்கும்.

ஜியோவின் ரூ. 259 திட்ட நன்மைகள்

ஜியோவின் ரூ. 259 திட்ட நன்மைகள்

இப்படி தான், இந்த ஒரு மாத கால ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் செயல்படும் என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். சரி, இப்போது ஜியோ வழங்கும் இந்த ரூ. 259 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் அதன் பயனர்களுக்கு என்னென்ன நன்மைகளை வழங்குகிறது என்று பார்க்கலாம். இந்த ரூ. 259 திட்டமானது தினசரி 1.5ஜிபி டேட்டாவுடன் வருகிறது. இத்துடன் உங்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை ஆகியவற்றை இந்த திட்டம் 30 நாள் செல்லுபடியுடன் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாயில் மனிதனுக்கு இவ்வளவு ஆபத்திருக்கிறதா? இந்த 7 காரணங்கள் தெரிந்தால் நீங்க செவ்வாய்க்கு போகமாட்டீங்க..செவ்வாயில் மனிதனுக்கு இவ்வளவு ஆபத்திருக்கிறதா? இந்த 7 காரணங்கள் தெரிந்தால் நீங்க செவ்வாய்க்கு போகமாட்டீங்க..

ஜியோவின் ரூ. 296 திட்டம் மற்றும் நன்மை

ஜியோவின் ரூ. 296 திட்டம் மற்றும் நன்மை

ஜியோ 30 நாள் செல்லுபடியுடன் வழங்கும் மற்றொரு திட்டம் என்றால் அது ரூ.296 விலையில் கிடைக்கும் இந்த ப்ரீபெய்ட் திட்டமாகும். இந்த ரூ. 296 திட்டம், அதன் பயனர்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது. ஆனால், இந்த திட்டம் உங்களுக்குத் தினசரி டேட்டா நன்மையை வழங்குவதைத் தவிர்த்து, மொத்தமாக 25ஜிபி மொத்த டேட்டாவை வழங்குகிறது. இந்த இரண்டு திட்டங்களும் பயனர்களுக்கு JioCinema, JioTV, JioCloud மற்றும் JioSecurity உள்ளிட்ட ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச சந்தாவையும் வழங்குகிறது.

பாரதி ஏர்டெல் வழங்கும் ரூ. 319 ப்ரீபெய்ட் திட்டம்

பாரதி ஏர்டெல் வழங்கும் ரூ. 319 ப்ரீபெய்ட் திட்டம்

பாரதி ஏர்டெல்லின் ரூ. 319 ப்ரீபெய்ட் திட்டமும் 30 நாட்கள் செல்லுபடியாகும் ஒரு முழு மாத ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமாகும். இந்தத் திட்டமானது, அதன் பயனர்களுக்குத் தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இத்துடன், நிறுவனம் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை ஆகியவற்றை வழங்குகிறது. கூடுதல் நன்மையாக, வின்க் மியூசிக் சந்தா, அப்பல்லோ 24 | போன்ற ஏர்டெல் தேங்க்ஸ் நன்மைகள் கொண்ட பல நன்மைகளை வழங்குகிறது.

ரேஷன் கார்டில் புதிய உறுப்பினர் பெயரை ஆன்லைன் மூலம் சேர்ப்பது எப்படி? எந்தெந்த ஆவணங்கள் தேவை?ரேஷன் கார்டில் புதிய உறுப்பினர் பெயரை ஆன்லைன் மூலம் சேர்ப்பது எப்படி? எந்தெந்த ஆவணங்கள் தேவை?

ஏர்டெல் வழங்கும் ரூ. 296 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் வழங்கும் ரூ. 296 ப்ரீபெய்ட் திட்டம்

இந்த ரூ.319 திட்டம் கூடுதல் விலையாகத் தெரிந்தால், ஏர்டெல் ஜியோவைப் போலவே ரூ. 296 விலையில் வழங்கும் ப்ரீபெய்ட் திட்டத்திற்கு நீங்கள் செல்லலாம். ஏர்டெல்லின் ரூ. 296 திட்டம், அதன் பயனர்களுக்குத் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளுடன் 25ஜிபி மொத்த டேட்டாவை வழங்குகிறது. இதில் உங்களுக்குத் தினசரி டேட்டா நன்மை கிடைக்காது என்பது கவனித்துக்கொள்ளுங்கள். இந்த திட்டம் மொத்தம் 30 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது.

வோடபோன் ஐடியாவின் ரூ. 195, ரூ. 319 மற்றும் ரூ. 337 ப்ரீபெய்ட் திட்டங்கள்

வோடபோன் ஐடியாவின் ரூ. 195, ரூ. 319 மற்றும் ரூ. 337 ப்ரீபெய்ட் திட்டங்கள்

வோடபோன் ஐடியா நிறுவனம் ஒரு மாத வேலிடிட்டியுடன் மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது. இந்த திட்டங்கள் ரூ. 195, ரூ. 319 மற்றும் ரூ. 337 விலையில் கிடைக்கிறது. Vi வழங்கும் ரூ. 195 ப்ரீபெய்ட் திட்டம், அதன் பயனர்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை மற்றும் 300 எஸ்எம்எஸ் நன்மைகளுடன் மொத்தமாக 2ஜிபி டேட்டாவை மட்டுமே டேட்டா நன்மையாகப் பெறுகிறார்கள். இதன் நன்மைகள் சிறப்பாக இல்லாவிட்டாலும், குறித்த விலையில் கிடைக்கக்கூடிய 30 நாள் வேலிடிட்டி உடன் வருகிறது.

ரூ.300 முதல் ரீசார்ஜிங் ஃபேன்.. கரண்ட் இல்லாவிட்டாலும் சில்லுனு காத்து வாங்கலாம்.. உடனே வாங்குங்கள்..ரூ.300 முதல் ரீசார்ஜிங் ஃபேன்.. கரண்ட் இல்லாவிட்டாலும் சில்லுனு காத்து வாங்கலாம்.. உடனே வாங்குங்கள்..

Vi வழங்கும் ரூ. 319 மற்றும் ரூ. 337 திட்டம்

Vi வழங்கும் ரூ. 319 மற்றும் ரூ. 337 திட்டம்

அதேபோல், Vi வழங்கும் ரூ. 319 திட்டமானது அதன் பயனர்களுக்குத் தினசரி 2ஜிபி டேட்டா நன்மை, தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மை மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை போன்ற நன்மைகளை வழங்குகிறது. இத்துடன், கூடுதல் நன்மையாக Vi Hero அன்லிமிடெட் நன்மைகள் மற்றும் Vi Movies & TV சந்தா ஆகியவற்றை இத்திட்டம் வழங்குகிறது. இறுதியாக, ரூ. 337 திட்டமானது அதன் பயனர்களுக்கு 28ஜிபி மொத்த டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. Vi Movies & TV கிளாசிக் அணுகலுக்கான இலவச அணுகல் உள்ளது.

BSNL ரூ. 147, ரூ. 247 மற்றும் ரூ. 299 ப்ரீபெய்ட் திட்டங்கள்

BSNL ரூ. 147, ரூ. 247 மற்றும் ரூ. 299 ப்ரீபெய்ட் திட்டங்கள்

பிஎஸ்என்எல் ஒரு மாத திட்டங்களை வழங்கவில்லை. ஆனால் பயனர்கள் கண்டிப்பாக 30 நாட்கள் வேலிடிட்டியுடன் ப்ரீபெய்ட் திட்டங்களைப் பெறலாம். ரூ.147 திட்டமானது பயனர்களுக்கு 10ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இதை வரம்பின்றி மொத்தமாகப் பயன்படுத்தலாம். இந்த திட்டத்துடன் இணைந்த BSNL ட்யூன்களுடன் அன்லிமிடெட் குரல் அழைப்பு நன்மையும் உங்களுக்குக் கிடைக்கிறது. பிஎஸ்என்எல் வழங்கும் அடுத்த 30 நாள் திட்டம் ரூ. 247 திட்டமாகும். இந்தத் திட்டத்தில், பயனர்கள் ரூ. 10 டாக்டைம் முக்கிய மதிப்பு + வரம்பற்ற குரல் அழைப்புடன் 50 ஜிபி மொத்த டேட்டா வழங்கப்படுகிறது.

வீட்டிலிருந்தபடி PAN கார்டு போட்டோவை இவ்வளவு சுலபமாக மாற்ற முடியுமா? கட்டணம் எவ்வளவு தெரியுமா?வீட்டிலிருந்தபடி PAN கார்டு போட்டோவை இவ்வளவு சுலபமாக மாற்ற முடியுமா? கட்டணம் எவ்வளவு தெரியுமா?

BSNL வழங்கும் ரூ. 299 திட்டம்

BSNL வழங்கும் ரூ. 299 திட்டம்

இத்துடன் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை, பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் மற்றும் ஈரோஸ் நவ் என்டர்டெயின்மென்ட் போன்ற கூடுதல் சேவைகளும் கிடைக்கிறது. BSNL இலிருந்து 30 நாட்கள் வேலிடிட்டியுடன் வரும் கடைசி திட்டம் ரூ. 299 திட்டமாகும். இந்த திட்டத்தில், பயனர்கள் தினசரி 3 ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகள் கிடைக்கிறது. இவை அனைத்தும் இந்தியாவில் உள்ள நான்கு தொலைத்தொடர்பு நிறுவனங்களிடமிருந்து ஒரு மாத வேலிடிட்டியுடன் நீங்கள் பெறக்கூடிய திட்டங்களாகும். 30 நாட்கள் செல்லுபடியாகும் திட்டத்தைத் தேர்வு செய்யும் பயனர்களுக்குச் சாதாரண திட்டத்தின் வேலிடிட்டியை விட 2 நாட்கள் கூடுதலாகக் கிடைப்பதுடன், ரீசார்ஜ் செய்யும் தேதியை நினைவில் வைத்துக்கொள்ளவும் சுலபமாக இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Jio Airtel Vi BSNL One Month Validity Prepaid Plans With 30 Full Days Validity : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X