சிறந்த ஐடியா: ரூ.500-க்கு கீழ் பிஎஸ்என்எல், ஏர்டெல், ஜியோ, விஐ ரீசார்ஜ் திட்டங்கள்!

|

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு சலுகைகளை வழங்கி வருகிறது. இதில் பிஎஸ்என்எல், ஏர்டெல், ஜியோ மற்றும் விஐ வழங்கும் திட்டங்களில் ரூ.500 என்ற வரம்பில் கிடைக்கும் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

குறிப்பிடத்தக்கது தொலைத் தொடர்பு நிறுவனங்கள்

குறிப்பிடத்தக்கது தொலைத் தொடர்பு நிறுவனங்கள்

உலகளவில் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடு இந்தியா. இந்தியாவில் தொழில்களை பெருக்க பல்வேறு நிறுவனங்களும் ஆர்வம் காட்டி வருகின்றன. இதில் குறிப்பிடத்தக்கது தொலைத் தொடர்பு நிறுவனங்கள். இந்தியாவில் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களாக திகழ்வது ஜியோ, ஏர்டெல், விஐ, பிஎஸ்என்எல் ஆகும்.

குறைந்த காலங்களில் அசுர வளர்ச்சி

குறைந்த காலங்களில் அசுர வளர்ச்சி

சமீபத்தில் வோடபோன் ஐடியா., விஐ என்ற புதிய பிராண்டை அறிவித்து வாடிக்கையாளர்களை கவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஜியோ அறிமுகமான குறைந்த காலங்களில் அசுர வளர்ச்சி அடைந்திருக்கிறது. ஜியோவுடன் போட்டிப்போடும் முயற்சியில் விஐ, ஏர்டெல் திக்குமுக்காடி வருகின்றன.

வரம்பற்ற குரல் அழைப்பு, இணைய சேவை

வரம்பற்ற குரல் அழைப்பு, இணைய சேவை

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ப்ரீபெய்ட் திட்டங்களை தங்களது வாடிக்கையாளர்களுக்கு போட்டிப்போட்டுக் கொண்டு அறிவித்து வருகின்றன. இதில் வரம்பற்ற குரல் அழைப்பு, இணைய சேவை உள்ளிட்ட சலுகைகளோடு ப்ரீபெய்ட் திட்டங்கள் கிடைக்கின்றன.

ஜியோ, ஏர்டெல், விஐ மற்றும் பிஎஸ்என்எல்

ஜியோ, ஏர்டெல், விஐ மற்றும் பிஎஸ்என்எல்

ப்ரீபெய்ட் திட்டங்கள் இந்தியாவில் அதிக பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஜியோ, ஏர்டெல், விஐ மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனங்கள் சிறந்த சலுகைகளில் திட்டங்களை வழங்கி வருகின்றன. அதன்படி ரூ.500 என்ற வரம்பில் கிடைக்கும் சிறந்த திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

அது நம்ம ஆளுதான்பா., ஒளிஞ்சிருக்கும் லட்சணம் அப்டி: வேற லெவல் வைரலான குட்டி யானை புகைப்படம்!அது நம்ம ஆளுதான்பா., ஒளிஞ்சிருக்கும் லட்சணம் அப்டி: வேற லெவல் வைரலான குட்டி யானை புகைப்படம்!

பிஎஸ்என்எல் எஸ்டிவி247 திட்டம்

பிஎஸ்என்எல் எஸ்டிவி247 திட்டம்

பிஎஸ்என்எல் எஸ்டிவி247 திட்டம் என்பது நிறுவனம் ரூ.500-க்கு கீழ் வழங்கும் சிறந்த திட்டமாகும். இந்த திட்டம் தினசரி 3ஜிபி டேட்டா, தினசரி 250 நிமிட எஃப்யூபி அழைப்புடன் வழங்குகிறது. அதோடு தினசரி 100 எஸ்எம்எஸ்கள், தினசரி இணைய வரம்பு முடிந்தவுடன் இணைய வேகம் 80 கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும். இந்த திட்டத்தில் ஈராஸ்நவ் மற்றும் பிஎஸ்என்எல் ட்யூன்களுக்கான இலவச சந்தாக்கள் கிடைக்கிறது. இந்த திட்டம் மொத்தம் 40 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

ஏர்டெல் ரூ.449 திட்டம்

ஏர்டெல் ரூ.449 திட்டம்

ஏர்டெல் திட்டங்களில் ரூ.500-க்கு கீழ் கிடைக்கும் திட்டமானது ரூ.449-க்கு கிடைக்கிறது. இது தினசரி 2ஜிபி டேட்டா மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது. இந்தியாவில் பிற அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வரம்பற்ற அழைப்புகளை வழங்குகிறது. இந்த திட்டம் 56 நாட்கள் செல்லுபடியாகும். இதன்மூலம் வாடிக்கையாளர்கள் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ப்ரீமியம், ஷா அகாடமி ஆகியவற்றிற்கு 1 ஆண்டுகால அணுகலை வழங்குகிறது.

ரூ.444 என்ற விலையில் ஜியோ திட்டம்

ரூ.444 என்ற விலையில் ஜியோ திட்டம்

ஜியோ ரூ.500-க்கு கீழான திட்டத்தை ரூ.444 என்ற விலையில் வழங்குகிறது. இந்த திட்டம் 56 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் பயனர்கள் தினசரி 2 ஜிபி டேட்டா, தினசரி 100 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது. இந்த திட்டமானது ஜியோ எண்ணிற்கு வரம்பற்ற அழைப்புகளையும் பிற நெட்வொர்க்குகளுக்கு 2000 நிமிட குரலழைப்புகளையும் வழங்குகிறது.

ரூ.449 என்ற விலையில் விஐ திட்டம்

ரூ.449 என்ற விலையில் விஐ திட்டம்

விஐ திட்டங்கள் வழங்கும் ரூ.500-க்கு கீழான திட்டங்கள் குறித்து பார்க்கையில் இந்த திட்டத்தின் விலையும் ரூ.449 ஆக இருக்கிறது. இந்த திட்டம் இரட்டை டேட்டா நன்மையின் கீழ் கிடைக்கிறது. இதன்மூலம் தினசரி 4 ஜிபி டேட்டாவை பெறலாம். அதோடு வரம்பற்ற குரலழைப்பு, தினசரி 100 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Jio, Airtel, Vi, BSNL Offers Best Prepaid Recharge Plans Under Rs.500

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X