Jio, Airtel, Vi, BSNL: ரூ.399 விலை.. 365 நாள் வேலிடிட்டி.. சிறப்பு சலுகை.. இதை மட்டும் ரீசார்ஜ் செய்யாதீங்க..
ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) அல்லது விஐ (Vi) டெலிகாம் நிறுவனங்களின் திடீர் விலை ஏற்றத்திற்கு பிறகு, செல்போன் பயன்பாட்டாளர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். ஒரு புறம் விலை அதிகரித்துவிட்டதே என்ற கடுப்பில் இருக்கிறார்கள். மறுபுறம், பிஎஸ்என்எல் (BSNL) மாற நினைத்தாலும் சிம் கார்டு கிடைக்காமல் தத்தளிக்கும் நிலைமை இப்போது இந்தியாவில் உள்ள சில பகுதிகளில் தலை ஓங்க துவங்கியுள்ளது. இதற்கு மத்தியில், சிறப்பு ரீசார்ஜ் சலுகை என்ற பெயரில் வெறும் ரூ.399-க்கு ரீசார்ஜ் செய்தால் 365 நாள் வேலிடிட்டி கிடைக்குமென்று சமூக வலைத்தளங்களில் சில விளம்பரங்கள் பகிரப்பட்டு வருகிறது.
ஆம் மக்களே, வெறும் ரூ. 365 விலைக்கு ரீசார்ஜ் செய்தால் உங்களுக்கு 1 வருடத்திற்கு செல்லுபடியாகும் திட்டம் (1 year validity for just Rs 399 recharge) இப்போது சிறப்பு சலுகையில் ஒரு பகுதியாக வழங்கப்படும் என்று ஃபேஸ்புக் (Facebook) தளங்களில் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. இதுவொரு பிரத்தியேகமான சலுகை என்று அந்த விளம்பர போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Jio, Airtel, Vi, BNSL வாடிக்கையாளர்களுக்கு ரூ.399 விலையில் 365 நாள் வேலிடிட்டி.. சிறப்பு சலுகை திட்டம்:
இந்த சலுகை இன்று மட்டுமே கிடைக்கும், உடனே ரீசார்ஜ் செய்யுங்கள் என்று, உங்களை ரீசார்ஜ் செய்ய தூண்டும் விதமாக இந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் வெறும் ஜியோ வாடிக்கையாளர்களை (Jio customers) மட்டும் குறிவைத்து வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உங்களிடம் எந்த நெட்வொர்க் சிம் கார்டு இருந்தாலும், நீங்கள் இந்த சிறப்பு சலுகையை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.
அதாவது, வெறும் ரூ. 399 விலைக்கு 365 நாட்கள் செல்லுபடியாகும் ரீசார்ஜ் திட்டங்களை உடனே ரீசார்ஜ் செய்துகொள்ளலாம் என்று அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, உங்களிடம் ஏர்டெல் சிம் (Airtel SIM), வோடபோன் ஐடியா சிம் (Vodafone Idea SIM) அல்லது பிஎஸ்என்எல் சிம் (BSNL SIM) என்று எந்த நெட்வொர்க் சிம் இருந்தாலும் கூட, நீங்கள் இந்த சலுகையை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போஸ்டர் கீழ் உள்ள ரீசார்ஜ் செய் என்ற பட்டனை நீங்கள் கிளிக் செய்தவுடன், இது உங்களை ஒரு ரீசார்ஜ் தளத்திற்கு அழைத்து செல்கிறது. இந்த ஜியோ, ஏர்டெல், விஐ மற்றும் பிஎஸ்என்எல் என்ற நான்கு பிரிவுகள் காண்பிக்கப்படுகிறது. அதில் உங்களுக்கான நெட்வொர்க்கை தேர்வு செய்ய வேண்டும். பிறகு, நீங்கள் ரீசார்ஜ் செய்ய நினைக்கும் மொபைல் எண் தகவலை உள்ளிட்ட வேண்டும்.
மக்களை ஏமாற்ற இது சுத்தமான அக்மார்க் மோசடி:
அடுத்தபடியாக, கூகுள் பே, போன்பே அல்லது ஏதேனும் ஒரு UPI ஆப்ஸ் மூலம் ரூ. 399 கட்டணத்தை நீங்கள் செலுத்த வேண்டும். அவ்வளவு தான் கதை முடிந்தது. உங்கள் கணக்கில் இருந்து பணம் உடனே எடுக்கப்பட்டுவிடும். ஆனால், ரீசார்ஜ் மட்டும் ஆகவே ஆகாது. இதுவொரு புது வகையான ஆன்லைன் மோசடியாக இப்போது இந்தியாவிற்குள், பல மொழிகளில் உலா வந்துகொண்டிருக்கிறது.
பார்ப்பதற்கு ஜியோவின் அதிகாரப்பூர்வ தளம் போல காட்சியளித்தாலும், இதுவொரு மோசடி தளம் என்பது தெரியாமல், மக்கள் கூட்டம் கூட்டமாக ரீசார்ஜ் செய்து ஏமாந்து வருகின்றனர். ரூ. 2999 மதிப்பிலான வருடாந்திர திட்டத்தை வெறும் ரூ.399 விலைக்கு வழங்குவதாக கூறி, மக்களின் ஆசையை அதிகரித்து, ஒரு கும்பல் இப்படி மோசடி செய்து, பணத்தை அபேஸ் செய்துவருகிறது.
இந்த புதிய மோசடி பற்றி தெரியாத உங்கள் நன்பர்கள், குடும்பத்தினர் மற்றும் தெரிந்தவர்களுக்கு இந்த பதிவை ஷேர் செய்து, உண்மை என்ன என்பதை தெரியப்படுத்துங்கள், அவர்களை மோசடியில் இருந்து பாதுகாக்க உதவுங்கள். இந்த மோசடி குறித்து மக்கள் மத்தியில் போதிய இல்லை என்பதனால், இதை உங்கள் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளோம்.


Click it and Unblock the Notifications








