Home
News

ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா: ரூ.599 மற்றும் ரூ.598-திட்டங்களில் சிறந்த சலுகை வழங்கும் நிறுவனம் எது?

ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான திட்டங்களை வைத்துள்ளது,ஆனால் சலுகைகளில் தான் கொஞ்சம் மாறுபாடுகள் இருக்கும். மேலும் இந்த ஐபிஎல் 2020 போட்டிகள் தொடங்கும் முன்பு பல்வேறு டெலிகாம் நிறுவனங்கள் சிறப்பு டேட்டா திட்டங்களை அறிமுகம் செய்தது. குறிப்பாக வோடபோன் ஐடியா நிறுவனமும் பட்ஜெட் விலையில் பல திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.

மாதங்களில் ஏர்டெல், வோடபோன்

கடந்த சில மாதங்களில் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் கனிசமாக வாடிக்கையாளர்களை இழந்துள்ளது, அதேசமயம் ஜியோமற்றும் பிஎஸ்என்எல் நிறுவனங்கள் கடந்த சில மாதங்களில் அதிகளவு வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. குறிப்பாக பிஎஸ்என்எல்
நிறுவனம் வாரம் ஒருமுறை சிறந்த திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கிய வண்ணம் உள்ளது.

ஐடியா, ஜியோ, ஏர்டெல்

மேலும் வோடபோன் ஐடியா, ஜியோ, ஏர்டெல் நிறுவனஙகள் ரூ.599 மற்றும் ரூ.598 திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டங்களில் சிறந்த டேட்டா நன்மை மற்றும் வாய்ஸ்கால் உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை வழங்கும் நிறுவனம் எது என்று சற்று விரிவாகப் பார்ப்போம்.

 ஜியோ ரூ.598-திட்டம்

ஜியோ ரூ.598-திட்டம்

ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்த ரூ.598-திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது, பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் மொத்தமாக 112ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தில் போனஸ் டேட்டா நன்மை வழங்கப்படவில்லை. மேலும் ஜியோ டு ஜியோ இலவச கால் அழைப்புகள், ஜியோ அல்லாத மற்ற நெட்வொர்க்குகளுக்கு 2000 FUP நிமிடங்கள் கிடைக்கும்.


ஜியோ ரூ.598-திட்டத்தில் தினசரி 100எஸ்எம்எஸ் நன்மை கிடைக்கும்,பின்பு மாதத்திற்கு ரூ.399 செலவாகும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் வி.ஐ.பியின் இலவச 1 ஆண்டு சந்தாவும் உங்களுக்குக் கிடைக்கும்.

ஏர்டெல் ரூ.599 திட்டம்

ஏர்டெல் ரூ.599 திட்டம்

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.599-திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56நாட்கள் ஆகும். இந்த திட்டம் இந்தியாவிற்குள் உள்ள எந்தவொரு நெட்வொர்க்குக்கும் வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற அழைப்பை வழங்குகிறது. ஏர்டெலுடன் அழைப்பதில் FUP வரம்பு இல்லை. இந்த திட்டம் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது. இந்த திட்டத்தில் பல OTT நன்மைகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால் OTT நன்மைகளில் சேர்க்கப்பட்டுள்ளது டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி திட்டங்களின் இலவச சந்தா. அதனுடன், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிரீமியம், ஹெலோடூன்ஸ், விங்க் மியூசிக், ஷா அகாடமி 1 வருடம், மற்றும் ஃபாஸ்டேக் உடன் ரூ.150 கேஷ்பேக் உள்ளது.

வோடபோன் ஐடியா ரூ.599-திட்டம்

வோடபோன் ஐடியா ரூ.599-திட்டம்

வோடபோன் ஐடியா ரூ.599-திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது, பின்பு இந்த திட்டத்தில் போனஸ் நன்மையாக 5ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28நாட்கள் ஆகும். குறிப்பாக வோடபோன் ஐடியா ரூ.599-திட்டத்தில் வரம்பற்ற இலவச அழைப்பு மற்றும் தினசரி 100எஸ்எம்எஸ் நன்மைகளும் வழங்கப்படுகிறது. எம்.பி.எல் இல் விளையாடுவதற்கு
வாடிக்கையாளருக்கு ரூ.125 உறுதிப்படுத்தப்பட்ட போனஸ் ரொக்கம் கிடைக்கிறது, மேலும் சோமாடோவிலிருந்து உணவுஆர்டர்களுக்கு தினசரி ரூ .75 தள்ளுபடி உள்ளது. ஆனால் Vi-லிருந்து ரூ .599 திட்டத்தில் OTT நன்மை எதுவும் சேர்க்கப்படவில்லை.

ஏர்டெல்லின் திட்டங்களை

ஜியோ மற்றும் ஏர்டெல்லின் திட்டங்களை ஒப்பிடுவது உண்மையில் கடினம், ஏனெனில் அவை கிட்டத்தட்ட ஒரே மாதிரியான நன்மைகளை வழங்குகின்றன. Vi ஐப் பொறுத்தவரை, ஜியோ மற்றும் ஏர்டெல் வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களுக்குப் பின்னால் உள்ளது என்பது தெளிவாக உள்ளது.

Best Mobiles in India

English summary
Jio, Airtel, Vi Best Prepaid Plans Under Rs.600 With Varied Benefits: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X