Home
News

Jio, Airtel, Vi: தினமும் 3GB டேட்டா.. அன்லிமிடெட் 5G நன்மை! கெத்தானவங்க ரீசார்ஜ் செய்யும் திட்டங்கள்!

ஒரு நாளைக்கு 3ஜிபி அல்லது அதற்கு மேற்பட்ட மொபைல் டேட்டாவுடன் வரும் ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ ஆகியவற்றின் ப்ரீபெய்ட் திட்டங்களின் பட்டியலை தான் இந்த பதிவின் மூலம் நாம் பார்க்கப்போகிறோம். என்ன விலையில் எந்த திட்டம் சிறப்பானதென்று பார்க்கலாம் வாங்க.

ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் விஐ ஆகியவை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்ய பல்வேறு வகையான ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகின்றன. ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கியுள்ளதால், பயணத்தின்போது கிரிக்கெட் போட்டிகளைப் பார்க்க வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தரவு தேவைப்படலாம்.

Jio, Airtel, Vi: தினமும் 3GB டேட்டா.. அன்லிமிடெட் 5G நன்மை!

இந்த ஐபிஎல் சீசனில், பயனர்கள் தங்கள் மொபைல் சாதனங்களில் ஐபிஎல் ஸ்ட்ரீம் செய்வதால், டெலிகாம் துறையில் டேட்டா நுகர்வு 10-15 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தினசரி இரண்டு போட்டிகளை ஸ்ட்ரீமிங் செய்ய பயனர்களுக்கு சுமார் 3ஜிபிக்கு மேல் டேட்டா தேவைப்படும் என்பதனால், தினசரி 3ஜிபி டேட்டா கிடைக்கும் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை இங்கு உங்களுக்காக பட்டியலிட்டுள்ளோம்.

ரிலையன்ஸ் ஜியோ தனது ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளைக்கு 3 ஜிபி மொபைல் டேட்டாவுடன் வரும் மூன்று திட்டங்களை வழங்குகிறது. ஜியோ ரூ.219 திட்டம் தினசரி 3ஜிபி டேட்டாவுடன் 2ஜிபி கூடுதல் டேட்டாவை 14 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது. ஜியோ ரூ.399 திட்டம் தினசரி 3ஜிபி டேட்டாவுடன் 6ஜிபி கூடுதல் டேட்டாவை 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது.

ஜியோ ரூ.999 திட்டம் தினசரி 3ஜிபி டேட்டாவுடன் 40ஜிபி கூடுதல் டேட்டாவை 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது. இந்த மூன்று திட்டங்களும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ், தினசரி 100 SMS, ஜியோ சினிமா மற்றும் ஜியோ டிவிக்கான அணுகல் மற்றும் தகுதியான வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா ஆகியவற்றை வழங்குகின்றது. அடுத்தபடியாக ஏர்டெல் திட்டத்தை பற்றி பார்க்கலாம்.

Jio, Airtel, Vi: தினமும் 3GB டேட்டா.. அன்லிமிடெட் 5G நன்மை!

ஏர்டெல் அதன் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளைக்கு 3 ஜிபி மொபைல் டேட்டாவுடன் வரும் இரண்டு திட்டங்களை வழங்குகிறது. இதில் ஏர்டெல் ரூ.499 திட்டம் தினசரி 3ஜிபி டேட்டாவுடன் 28 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது. ஏர்டெல் ரூ.699 திட்டம் 56 நாட்கள் வேலிடிட்டியுடன் தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இரண்டு திட்டமும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் தினசரி 100 SMS ஆகியவற்றை வழங்குகிறது.

ரூ.499 திட்டத்தில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவை மூன்று மாதங்களுக்கு அணுக கிடைக்கிறது. அதே நேரத்தில் ரூ. 699 திட்டம் 56 நாட்களுக்கு அமேசான் பிரைம் சந்தாவுடன் வருகிறது. கூடுதல் நன்மைகளாக Wynk Music, Xstream app, Apollo 24X7, ஃபாஸ்டாக் மீது ரூ.100 கேஷ்பேக், இலவச HelloTunes மற்றும் தகுதியான வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் 5G டேட்டா என்று நிறைய நன்மை கிடைக்கிறது.

Vodafone Idea (Vi) அதன் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளைக்கு 3ஜிபி மற்றும் அதற்கு மேற்பட்ட டேட்டாவுடன் வரும் நான்கு திட்டங்களை கொண்டுள்ளது. விஐ (Vi) ரூ. 359 திட்டம் தினமும் 3ஜிபி டேட்டாவுடன் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. விஐ ரூ.699 திட்டம் தினசரி 3ஜிபி டேட்டாவை 56 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது.

விஐ ரூ.409 மற்றும் ரூ.475 திட்டம் முறையே தினமும் 3.5ஜிபி டேட்டா மற்றும் தினசரி 4ஜிபி டேட்டாவை வழங்குகின்றது. இந்த இரண்டு திட்டங்களும் 28 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. விஐ இன் அனைத்து திட்டங்களும் கூடுதல் 2ஜிபி (டேட்டா டிலைட்) டேட்டாவுடன் வருகிறது.

இவை அன்லிமிடெட் இரவு டேட்டா (காலை 12 மணி முதல் காலை 6 மணி வரை), அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 SMS மற்றும் Vi Movies & TV ஆப்ஸ் போன்ற நன்மைகளை வழங்குகின்றது. தினசரி 3ஜிபி மற்றும் அதற்கு மேற்பட்ட டேட்டா திட்டங்களை யூஸ் செய்ய ஒரு தனி திறமை வேண்டும்மப்பா..!

Best Mobiles in India

English summary
Jio, Airtel, Vi 3GB Daily Data Per Day Prepaid Recharge Plans
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X