Home
News

UNLIMITED மற்றும் FREE 5ஜி டேட்டா ஆபரை நிறுத்த ஜியோ, ஏர்டெல் திட்டமிட்டுள்ளதா?

கடந்த 2022 அக்டோபர் மாதம் தொடங்கி, இந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையிலாக ஜாலியாக இருந்த ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) மற்றும் பார்தி ஏர்டெல் (Bharti Airtel) கஸ்டர்மர்களின் தலையில் இடியை இருக்கும்படியான தகவலொன்று வெளியாகி உள்ளது.

அதென்ன தகவல்? நினைவூட்டும் வண்ணம் கடந்த அக்டோபர் 2022 இல் தான் இந்தியாவில் 5ஜி சேவைகள் (5G Service) வெளிவர தொடங்கின. நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் ஆகிய இரண்டுமே தத்தம் வாடிக்கையாளர்களுக்கு 5ஜி சேவைகளை வழங்க தொடங்கின.

FREE 5ஜி டேட்டா ஆபரை நிறுத்த ஜியோ, ஏர்டெல் திட்டமிட்டுள்ளதா?

மிகவும் குறுகிய காலத்தில் 5ஜி சேவையை பெரிய அளவில் பரப்ப வேண்டும், அதிக எண்ணிக்கையிலான மக்களை பயன்படுத்த வைக்க வேண்டும் என்கிற நோக்கத்தின்கீழ் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டுமே 5ஜி ஸ்மார்ட்போன்களை வைத்து இருக்கும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகையை அறிவித்தன.

அன்லிமிடெட் 5ஜி சலுகையின்கீழ்.. எந்த விதத்திலும் விலை உயர்வு இல்லாத "வழக்கமான" 4ஜி ரீசார்ஜ்ஜின் கீழ் அன்லிமிடெட் ஹை-ஸ்பீட் 5ஜி டேட்டா கிடைத்தது. ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனத்தின் இந்த அன்லிமிடெட் 5ஜி ஐடியாவானது "செம்ம ஹிட்" அடித்தட்டு என்றே கூறலாம். ஏனென்றால் இவ்விரு நிறுவனங்களிடம் தற்போது 125 மில்லியனுக்கும் அதிகமான 5ஜி சந்தாதாரர்கள் உள்ளனர்.

FREE 5ஜி டேட்டா ஆபரை நிறுத்த ஜியோ, ஏர்டெல் திட்டமிட்டுள்ளதா?

இதற்கிடையில் தான் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டும், தங்களுடைய அன்லிமிடெட் 5ஜி சலுகையை கூடிய விரைவில் நிறுத்தலாம் என்றும், தற்போதுள்ள 4ஜி திட்டங்களை விட 5ஜி திட்டங்களின் கட்டணங்களானது 5% முதல் 10% வரை அதிகரிக்கலாம் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அன்லிமிடெட் 5ஜி சலுகை எப்போது நிறுத்தப்படும்? சரியான காலக்கெடு குறித்த எந்த தகவலும் இல்லை. ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் ஆகிய இரன்டுமே தங்களுடைய அன்லிமிடெட் 5ஜி டேட்டா திட்டங்களை கூடிய விரைவில் நிறுத்தும் என்றும், 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் (4ஜி சேவையுடன் ஒப்பிடும்போது) 5ஜி சேவைக்கான திட்டங்கள் அதிக விலை நிர்ணயத்துடன் அறிவிக்கப்படும் என்றும் ஆய்வாளர்கள் கூறி உள்ளனர்.

FREE 5ஜி டேட்டா ஆபரை நிறுத்த ஜியோ, ஏர்டெல் திட்டமிட்டுள்ளதா?

இவ்விரு டெலிகாம் நிறுவனங்களுமே 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் தங்களுடைய மொபைல் ரீசார்ஜ் கட்டணங்களை குறைந்தபட்சம் 20% அதிகரிக்கும் என்று தொழில் வல்லுநர்கள் கணித்துள்ளனர். அதே வேளையில் விலை உயர்வை காணும் திட்டங்களின் டேட்டா நன்மையானது 30% முதல் 40% வரை அதிகரிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ஆகமொத்தம் 2024-ல் ரீசார்ஜ் செலவுகள் பெரிய தலைவலியாக மாற போகின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Airtel to Stop Free Unlimited 5G Data Offer Soon and Increase Recharge Price in 2024 Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X