Home
News

ஜோலி முடிஞ்சு.. அமலுக்கு வந்த கட்டண உயர்வு.. இதைவிட்ட அவ்ளோதான்.. எது பரவால்லனு பாக்கனும்.. என்னென்ன விலை!

ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) நிறுவனங்களின் கட்டண உயர்வு ரீசார்ஜ் திட்டங்கள் (Price Increase Recharge Plans) அமலுக்கு வந்துவிட்டன. இனிமேல் புதிய ப்ரீபெய்ட் (New Prepaid), போஸ்ட்பெய்ட் திட்டங்களை (Postpaid Plans) ரீசார்ஜ் செய்யும்போது, எந்த திட்டங்களில் என்னென்ன சலுகைகள் இருக்கிறது என்பதை பார்த்துத்தான் ரீசார்ஜ் செய்ய வேண்டி இருக்கும். ஆகவே, ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களின் விலை உயர்த்தப்பட்ட திட்டங்களின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளுங்கள். இதில் உங்களுக்கு ஏத்த பட்ஜெட் திட்டங்களை தேர்ந்தெடுங்கள்.

ஜியோவின் புதிய ப்ரீபெய்ட், போஸ்ட்பெய்ட் திட்டங்கள் (Jio New Prepaid Postpaid Plans): ஜியோவில் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை உயர்வை பார்க்கையில், 2 ஜிபி டேட்டா சலுகை கொண்ட ரூ.155 திட்டத்தின் விலை ரூ.189ஆகவும், 1 ஜிபி டேட்டா சலுகை கொண்ட ரூ.209 திட்டத்தின் விலை ரூ.249ஆகவும், 1.5 ஜிபி டேட்டா சலுகை கொண்ட ரூ.239 திட்டத்தின் விலை ரூ.299ஆகவும் கிடைக்கிறது.

ஜோலி முடிஞ்சு.. அமலுக்கு வந்த கட்டண உயர்வு.. இதைவிட்ட அவ்ளோதான்.. எது?

மேலும், 2 ஜிபி டேட்டா கொண்ட ரூ.299 திட்டத்தின் விலை ரூ.349ஆகவும், 2.5 ஜிபி டேட்டா கொண்ட திட்டத்தின் விலை ரூ.399ஆகவும், 3 ஜிபி டேட்டா சலுகை கொண்ட ரூ.399 திட்டத்தின் விலை ரூ.449ஆகவும் இருக்கிறது. அதேபோல இரண்டு மாத திட்டங்களில் 1.5 டேட்டாவுடன் கிடைத்த ரூ.479 திட்டமானது, இப்போது ரூ.579 விலைக்கும், 2 ஜிபி டேட்டாவுடன் கிடைத்த ரூ.533 திட்டமானது ரூ.629 விலைக்கும் கிடைக்கிறது.

மூன்று மாத திட்டங்களில் ரூ.395 திட்டம் ரூ.479ஆகவும், ரூ.666 திட்டம் ரூ.799ஆகவும், ரூ.719 திட்டம் ரூ.859ஆகவும், ரூ.999 திட்டம் ரூ.1199ஆகவும் உயர்த்தப்பட்ட விலையில் கிடைக்கிறது. ஜியோவின் வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டங்களை பார்க்கையில், 24 ஜிபி டேட்டா சலுகை கொண்ட ரூ.1559 திட்டமானது, ரூ.1899 விலைக்கும், 2.5 ஜிபி டேட்டா சலுகை கொண்ட ரூ.2999 திட்டமானது, ரூ.3599 விலைக்கும் கிடைக்கிறது.

டேட்டா வவுச்சர்களை பொறுத்தவரை ரூ.15 திட்டம் ரூ.19ஆகவும், ரூ.25 திட்டம் ரூ.29ஆகவும், ரூ.61 திட்டம் ரூ.69ஆகவும் விலை உயர்த்தப்பட்டு கிடைக்கிறது. ஜியோ நிறுவனத்தின் போஸ்ட்பெய்ட் திட்டங்களை பார்க்கையில் 2 திட்டங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, ரூ.299 மதிப்பிலான போஸ்ட்பெய்ட் திட்டமானது, ரூ.349 விலையிலும், ரூ.399 மதிப்பிலான போஸ்ட்பெய்ட் திட்டமானது ரூ.449 விலையிலும் கிடைக்கிறது.

ஏர்டெல் புதிய ப்ரீபெய்ட், போஸ்ட்பெய்ட் திட்டங்கள் (Airtel New Prepaid Postpaid Plans): ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்களை பார்க்கையில், ரூ.179 திட்டம் ரூ.199 விலையிலும், ரூ.455 திட்டம் ரூ.509 விலையிலும் மற்றும் ரூ.1799 திட்டம் ரூ.1999 விலையிலும் கிடைக்கிறது. மேலும், ரூ.265 திட்டம் ரூ.299ஆகவும், ரூ.299 திட்டம் ரூ.349ஆகவும், ரூ.359 திட்டம் ரூ.409ஆகவும், ரூ.399 திட்டம் ரூ.449ஆகவும் விலை மாறிவிட்டது.

ஜோலி முடிஞ்சு.. அமலுக்கு வந்த கட்டண உயர்வு.. இதைவிட்ட அவ்ளோதான்.. எது?

ரூ.479 திட்டமானது, ரூ.579 விலையிலும், ரூ.549 திட்டமானது, ரூ.649 விலையிலும் கிடைக்கிறது. ரூ.719 திட்டம் ரூ.859ஆகவும், ரூ.839 திட்டம் ரூ.979ஆகவும் விலை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ.2999 திட்டமானது, இப்போது ரூ.3599 விலைக்கு கிடைக்கிறது. டேட்டா திட்டங்களை பார்க்கையில், ரூ.19 திட்டம் ரூ.22ஆகவும், ரூ.29 திட்டம் ரூ.33ஆகவும், ரூ.65 திட்டம் ரூ.77ஆகவும் இருக்கிறது.

ஏர்டெல் நிறுவனத்தின் போஸ்ட்பெய்ட் திட்டங்களை பார்க்கையில், ரூ.399 திட்டமானது, ரூ.449 பட்ஜெட்டிலும், ரூ.499 திட்டமானது, ரூ.549 பட்ஜெட்டிலும், ரூ.599 திட்டமானது, ரூ.699 பட்ஜெட்டிலும் ரூ.999 திட்டமானது, ரூ.1199 பட்ஜெட்டிலும் கிடைக்கிறது. இந்த திட்டங்களில் அதிகப்படியான ஓடிடி சலுகைகள் கிடைக்கிறது. மேற்கூறிய விலையிலேயே இனிமேல் ஜியோ மற்றும் ஏர்டெல் கஸ்டமர்களுக்கு திட்டங்கள் கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio, Airtel Tariff Hikes Came into Effect Check New Prepaid, Postpaid Recharge Plans And Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X