Home
News

மே மாத பரிதாபங்கள்.. தேர்தல் ரிசல்ட் வர்றதுக்குள்ள இன்னொரு டிவிஸ்டு.. Jio, Airtel SIM ஓனர்கள் உஷார்!

வருகிற 2026 மே மாதத்தில் - தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகி பலரும் எதிர்பார்க்கும் ஒரு டிவிஸ்ட்டை மட்டுமல்ல, ஜியோ (Jio) மற்றும் ஏர்டெல் (Airtel) சிம் கார்டுகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கும் ஒரு டிவிஸ்ட்டை வைத்து இருக்கலாம் என்பது போல் தெரிகிறது.

அதென்ன டிவிஸ்டு? பார்தி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள், மிகவும் அமைதியாக ஒரு சிறிய அளவிலான கட்டண உயர்வுகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த விலை உயர்வு - ஒவ்வொரு சில வாரங்களுக்கும் மற்றும் மாதங்களுக்கும் ஒருமுறை நிகழ்ந்து வருகிறது.

மே மாத பரிதாபங்கள்.. இன்னொரு டிவிஸ்டு.. Jio, Airtel SIM ஓனர்கள் உஷார்!

சேவைகளில் தங்கள் லாப வரம்புகளை மேம்படுத்துவதற்காக, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வந்த திட்டங்களையும் மாற்றியமைப்பதை (வேலிடிட்டி குறைப்பு, நன்மைகள் குறைப்பு) பார்க்க முடிகிறது

மிகவும் சமீபத்தில், ஏர்டெல் நிறுவனம் ரூ.799 மற்றும் ரூ.859 திட்டங்களை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக வெறும் ரூ.899 திட்டத்தை மட்டுமே வழங்கி, பயனர்களுக்கான ரூ.40 கட்டண விலை உயர்வை அமல்படுத்தி இருந்தது. இது ஒரு அமைதியான - மொபைல் ரீசார்ஜ் கட்டண விலை உயர்வாகும்; இது பெரிய உயர்வாக இல்லாவிட்டாலும், பயனர்கள் கவனிக்க வேண்டிய ஒரு குறிப்பிடத்தக்க உயர்வாக உள்ளது.

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவும் கூட சமீபத்தில் தனது ரூ.195 டேட்டா வவுச்சரின் செல்லுபடியாகும் கால அளவில் ஒரு மாற்றத்தை செய்தது. இந்த தொலைத்தொடர்பு நிறுவனத்தின் ரூ.195 டேட்டா வவுச்சர், முன்பு இருந்த 90 நாட்களுக்கு பதிலாக, இப்போது 30 நாட்கள் என்ற தனிப்பட்ட செல்லுபடியாகும் காலத்தை கொண்டுள்ளது. இதில் டேட்டா மற்றும் ஓடிடி (ஓவர்-தி-டாப்) நன்மைகள் ஒன்றாக இணைக்கப்பட்டிருந்தாலும், இந்த திட்டத்தை பயன்படுத்துவதற்கான செலவில் இது ஒரு குறிப்பிடத்தக்க விலை உயர்வை காட்டுகிறது.

அரசாங்கத்திற்கு சொந்தமான பிஎஸ்என்எல் (பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட்) நிறுவனமும் கூட , அதன் பயனர்களுக்கான கட்டணங்களை மிகவும் அமைதியாகவும் மறைமுகமாகவும் உயர்த்தி வருவதாக அறியப்படுகிறது. இந்த தொலைத்தொடர்பு நிறுவனம் தனது திட்டங்களின் விலைகளை நேரடியாக உயர்த்துவதில்லை. மாறாக, பிஎஸ்என்எல் அந்த திட்டத்துடன் வழங்கப்படும் சர்வீஸ் வேலிடிட்டியை அமைதியான முறையில் குறைக்கிறது.

இவை அனைத்தும் சிறிய விலை உயர்வுகளே ஆகும். மேலும் இப்போது வரையிலாக - இவைகள் எல்லாமே வணிகங்களின் வருவாய் மற்றும் லாப வரம்புகளில் ஒரு சிறிய முன்னேற்றத்தையே பெறுவதற்கான முயற்சிகளே ஆகும். ஆனால் இது இப்படியே "சிறியதாகவே" நீடிக்க போவதில்லை. டெலிகாம்டால்க்கின் சமீபத்திய அறிக்கையின்படி - ​​தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எதிர்காலத்தில் இன்னும் பெரிய விலை உயர்வுகளை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஏனென்றால் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் திட்டங்களின் விலைகளை உயர்த்தி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. கடந்த சில முறை நடந்த, விலை உயர்வுகளின் போக்கைக் கருத்தில் கொண்டால், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் விலைகளை உயர்த்தியுள்ளன. எனவே, தொழில் வல்லுநர்கள் அடுத்த சுற்று விலை உயர்வுகள் மிகவும் அருகில் இருப்பதாக நம்புகின்றன; அது மே 2026 ஆக கூட இருக்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Airtel Tariff Hike Coming Soon Bigger Round of Recharge Plan Price Increase is Near Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X