Home
News

Jio, Airtel: வாய்ஸ்-ஒன்லி ப்ரீபெய்ட் பிளான்கள்.. ரூ.1748, ரூ.1849.. எது சிறந்தது?

ஜியோ (Jio) மற்றும் ஏர்டெல் (Airtel) நிறுவனங்கள் சமீபத்தில் TRAI இன் வழிமுறைகளைப் பின்பற்றி வாய்ஸ்-ஒன்லி ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்தன. குறிப்பாக இந்த வாய்ஸ்-ஒன்லி ப்ரீபெய்ட் திட்டங்களில் எஸ்எம்எஸ் மற்றும் அழைப்பு நன்மைகள் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் பெரியவர்களுக்கும், கிராமப்புற மக்களுக்கும் இந்த வாய்ஸ்-ஒன்லி திட்டங்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.

அதாவது ஜியோ நிறுவனம் சமீபத்தில் ரூ.1748 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்தது. அதேபோல் ஏர்டெல் நிறுவனம் ரூ.1849 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்தது. இப்போது இந்த இரண்டு நிறுவனங்களின் புதிய ப்ரீபெய்ட் திட்டங்களின் வேலிடிட்டி மற்றும் எது அதிக நன்மைகளை வழங்குகிறது என்பதை இங்கே பார்க்கலாம்.

Jio, Airtel: வாய்ஸ்-ஒன்லி ப்ரீபெய்ட் பிளான்கள்.. எது சிறந்தது?

ஜியோ நிறுவனத்தின் ரூ 1748 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 1748 recharge plan) அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் வேலிடிட்டி 336 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வரம்பற்ற அழைப்பு நன்மைகளைத் தவிர இந்த ஜியோ திட்டத்தில் 3,600 இலவச எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. மேலும் ஜியோ டிவி மற்றும் ஜியோ கிளவுடுக்கான இலவச சந்தாக்களுடன், OTT ஸ்ட்ரீமிங் ஜியோ சினிமாவுக்கான இலவச அணுகல் போன்ற கூடுதல் நன்மைகளுடன் இந்த ஜியோ ரூ.1748 ப்ரீபெய்ட் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ 1849 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 1849 recharge plan) ஆனது 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மை இந்த திட்டத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ஏர்டெல் ரூ 1849 ப்ரீபெய்ட் திட்டத்தில் மொத்தம் 3600 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. மேலும் அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle), ஹலோ டியூன்ஸ் (Hello Tunes) உள்ளிட்ட நன்மைகளும் இந்த அசத்தலான ஏர்டெல் ரூ 1849 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகின்றன.

Jio, Airtel: வாய்ஸ்-ஒன்லி ப்ரீபெய்ட் பிளான்கள்.. எது சிறந்தது?

எது சிறந்தது? அதாவது ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனத்தின் புதிய ப்ரீபெய்ட் திட்டங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான நன்மைகள் வழங்குகின்றன. ஆனாலும் அதிக நாள் வேலிடிட்டி, வாய்ஸ் கால்கள் மட்டும் எதிர்பார்க்கும் பயனர்கள் ஏர்டெல் திட்டத்தைத் தேர்வு செய்வது நல்லது. அதேபோல் ஓடிடி, வாய்ஸ் கால்கள், அதிக நாள் வேலிடிட்டி எதிர்பார்க்கும் பயனர்கள் ஜியோ திட்டத்தை தேர்வு செய்வது நல்லது.

அதேபோல் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் கூடிய விரைவில் இன்னும் பல அசத்தலான திட்டங்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பிஎஸ்என்எல் நிறுவனமும் கூடிய விரைவில் நாடு முழுவதும் 4ஜி சேவை அறிமுகம் செய்யும். இதுதவிர லைவ் டிவி சேனல், 5ஜி சோதனை எனப் பல்வேறு முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது பிஎஸ்என்எல் நிறுவனம். குறிப்பாக இந்தியாவில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவை அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Airtel's New Voice-Only Plans: Up To 365 Days: Which Is Better?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X