ஏர்டெல் VS ஜியோ: ரூ.999 போஸ்ட்பெய்ட் திட்டத்தில் சிறந்த நன்மையை வழங்கும் நிறுவனம் எது?
ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் தொடர்ந்து சிறப்பான சலுகைகள் மற்றும் திட்டங்களை வழங்கி வருகின்றன. குறிப்பாக இந்த இரண்டு நிறுவனங்களின் போஸ்ட்பெய்ட் திட்டங்களும் அதிக இடங்களில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன என்று தான் கூறவேண்டும்.

குறிப்பாக ஜியோ நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு அறிமுகம் செய்த பட்ஜெட் விலை போஸ்ட்பெய்ட் திட்டங்களில் சிறப்பான
சலுகைகள் கிடைக்கிறது. அதேசமயம் ஏர்டெல் நிறுவனமும் முன்பு இருந்தே சிறப்பான சலுகைகளை வழங்கி வருகிறது.

மேலும் இந்த இரண்டு நிறுவனங்களும் ரூ.999 விலையில் போஸ்ட்பெய்ட் திட்டங்ககளை வைத்துள்ளன. மேலும் இந்த விலையில் எந்த நிறுவனங்கள் சிறப்பான சலுகைகளை வழங்குகிறது என்று சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஜியோ ரூ.999 போஸ்ட்பெய்ட் திட்டம்
ஜியோ நிறுவனத்தின் போஸ்ட்பெய்ட் திட்டம் ஆனது பயனர்களுக்கு 200 ஜிபி அளவிலான மாதாந்திர டேட்டா, வரம்பற்ற குரல் மற்றும் எஸ்எம்எஸ், ஒவ்வொரு பில்லிங் சுழற்சிக்கும் 500 ஜிபி வரை டேட்டா ரோல்ஓவர் விருப்பம் உள்ளிட்ட சிறப்பான சலுகைகளை வழங்குகிறது. மேலும் இதனுடன் நெட்பிலிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி + ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோவின் சொந்த பயன்பாடுகளான JioTV, JioCinema மற்றும் பலவற்றின் OTT சந்தாக்களும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த திட்டத்தில் 200ஜிபி டேட்டா தவிர கூடுதலாக 10ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும்.

ஏர்டெல் ரூ.999 போஸ்ட்பெய்ட் திட்டம்
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.999 போஸ்ட்பெய்ட் திட்டம் ஆனது பயனர்களுக்கு மொத்தமாக 150ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் மற்றும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகளும் கிடைக்கும். அதன்பின்பு இந்த திட்டம் பயனர்களுக்கு அமேசான் பிரைம் வீடியோவை 1 வருடம் முற்றிலும் இலவசமாக வழங்குகிறது. குறிப்பாக இதில் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம், டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி 1 வருடத்திற்கான இலவச சந்தாவையும் பெறமுடியும். அதேபோல் இந்த திட்டத்தில் டேட்டா
டேட்டா ரோல்ஓவர் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த ஒடிடி நன்மைகளை வழங்குவது ஜியோ நிறுவனம் தான். அதன்படி நெட்பிலிக்ஸ் உள்ளிட்ட அனைத்து சந்தாக்ளும் ஜியோவில் கிடைக்கின்றன. அதேபோல் ஏர்டெல் நிறுவனம் குறிப்பிட்ட ஒடிடி நன்மைகளை மட்டுமே வழங்குகிறது. மேலும் டேட்டா நன்மைகளிலும் ஜியோ நிறுவனமே அதிகமாக வழங்குகிறது. அதன்படி இதில் 200ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது. பின்பு ஏர்டெல் நிறுவனம் ஆனது
150ஜிபி டேட்டா நன்மையை மட்டுமே வழங்குகிறது.


Click it and Unblock the Notifications