Home
News

Jio, Airtel வழங்கும் ரூ.2999 வருடாந்திர திட்டம்: எது சிறந்தது? வாங்க பார்ப்போம்.!

ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளன. குறிப்பாக இந்நிறுவனங்கள் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம்.

 ஜியோ, ஏர்டெல்

ஜியோ, ஏர்டெல்

அதேபோல் இந்நிறுவனங்கள் நிறைய வருடாந்திர திட்டங்களையும் வைத்துள்ளன. குறிப்பாக விரைவில் இந்நிறுவனங்கள் தங்களது ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்த உள்ளன. இந்நிலையில் ஜியோ, ஏர்டெல் வாடிக்கையாளர்கள் அதிகமாக வருடாந்திர திட்டங்களைத் தேர்வு செய்து ரீசார்ஜ் செய்து வருகின்றனர்.

ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம்

ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம்

குறிப்பாக ஏர்டெல், ஜியோ ஆகிய இரண்டு நிறுவனங்களும் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளன. இது வருடாந்திர திட்டம் ஆகும். இப்போது இந்நிறுவனங்கள் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கும் நன்மைகளைப் பார்ப்போம். இதை வைத்து எந்த நிறுவனம் அதிக நன்மைகளை வழங்குகிறது என்று பார்த்துவிட்டு, அதன்பிறகு ரீசார்ஜ் செய்யுங்கள்.

ஜியோ ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டத்தில் 23 நாட்கள் வேலிடிட்டி-ஐ நீட்டித்து இருக்கிறது ஜியோ நிறுவனம். தற்போது இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு 388 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டம் தினசரி 2.5ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு நன்மைகள், ஜியோ செயலிகளுக்கான சந்தாவும் ஜியோ வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஜியோ ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேர்வு செய்யும் பயனர்களுக்குக் கூடுதல் வேலிடிட்டி உடன் கூடுதல் டேட்டா நன்மையும் உள்ளது. எனவே கண்டிப்பாக இந்த திட்டம் ஜியோ பயனர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.

ஏர்டெல் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் பயனர்கள் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டத்தில் இப்போது ரீசார்ஜ் செய்தால் தினசரி 2ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், விங்க் மியூசிக், ரூ.100 ஃபாஸ்டேக் கேஷ்பேக், அப்பல்லோ 24|7 சர்க்கிள்,இலவச Hellotunes உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும்.

எது சிறந்தது?

எது சிறந்தது?

ஏர்டெல் நிறுவனத்தை விட ஜியோ நிறுவனம் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டத்தில் கூடுதல் டேட்டா மற்றும் கூடுதல் வேலிடிட்டி-ஐ வழங்குகிறது. பின்பு ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்குத் தினசரி 2.5ஜி டேட்டா வேண்டும் என்றால் ரூ.3359 திட்டத்தைத் தான் தேர்வு செய்ய வேண்டிய நிலை உள்ளது. ஆனால் ஜியோ ரூ.2999 விலையில் 2.5ஜிபி டேட்டாவை வழங்கி கூடுதல் வேலிடிட்டி-ஐ வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஜியோவின் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்வது தான் நல்லது.

ஏர்டெல் புதிய திட்டம்

ஏர்டெல் புதிய திட்டம்

அதேபோல் ஏர்டெல் நிறுவனம் கம்மி விலையில் ஒரு ப்ரீபெய்ட் டேட்டா வவுச்சரை அறிமுகம் செய்துள்ளது. அதாவது ஏர்டெல் நிறுவனம் தற்போது ரூ.35 விலையில் டேட்டா வவுச்சரை அறிமுகம் செய்துள்ளது. ஏர்டெல் நிறுவனத்தின் இணையதளத்தில் இந்த திட்டம் தெரியவில்லை. ஆனால் ஏர்டெல் மொபைல் ஆப்பில் இந்த டேட்டா திட்டம் இருக்கிறது. எனவே ஏர்டெல் மொபைல் ஆப் வசதியில் இந்த ரூ.35 ப்ரீபெய்ட் டேட்டா வவுச்சரை ரீசார்ஜ் செய்யலாம். இப்போது இந்த புதிய திட்டத்தின் நன்மைகளைப் பார்ப்போம்.

 ஏர்டெல் புதிய திட்டத்தின் நன்மைகள்

ஏர்டெல் புதிய திட்டத்தின் நன்மைகள்

ஏர்டெல் ரூ.35 திட்டம் ஆனது 2 நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது. அதேபோல் இந்த திட்டத்தில் 2ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த திட்டத்தில் ஒவ்வொரு ஜிபி டேட்டாவிற்கும் ரூ.17.5 செலுத்துகிறீர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஏர்டெல் நிறுவனம் ரூ.19 விலையில் ஒரு டேட்டா திட்டத்தை வைத்துள்ளது. இந்த ரூ.19 திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு 1ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio, Airtel Rs 2999 Annual Plan: Which Company Offers More : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X