Home
News

ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் வழங்கும் ரூ.296 ப்ரீபெய்ட் திட்டம்: அதிக நன்மைகளை வழங்கும் நிறுவனம் எது?

ஜயோ, ஏர்டெல் நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளன. குறிப்பாக இந்நிறுவனங்கள் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கின்றன என்றே கூறலாம். அதேபோல் இந்நிறுவனங்கள் இந்தியாவில் சில நகரங்களில் மட்டும் 5ஜி சேவையை வழங்கியுள்ளது.

ஆனால் கூடிய விரைவில் இந்தியா முழுவதும் இந்நிறுவனங்கள் 5ஜி சேவையை வழங்கத் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த இரண்டு நிறுவனங்களும் ரூ.296 விலையில் ப்ரீபெய்ட் திட்டத்தை வைத்துள்ளன. இப்போது எந்த நிறுவனம் அதிக நன்மைகளை வழங்குகிறது என்பதைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் வழங்கும் ரூ.296 ப்ரீபெய்ட் திட்டம்.!

ஜியோ ரூ.296 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ நிறுவனத்தின் ரூ.296 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது மொத்தமாக 25ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். குறிப்பாக வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள் இதில் உள்ளது. இதுதவிர இதுதவிர ஜியோவின் ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோ கிளவுட் மற்றும் ஜியோ செக்யுரிட்டி போன்ற செயலிகளுக்கான சந்தாவும் வழங்கப்படுகின்றன.

ஏர்டெல் ரூ 296 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ 296 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 30 நாட்கள் வேலிடிட்டி உடன் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் மொத்தம் 25 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயனர்களுக்குத் தினசரி 100 எஸ்எம்எஸ் உடன் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளை வழங்குகிறது. Apollo 24|7 Circle, FASTag இல் ரூ.100 கேஷ்பேக், இலவச Hellotunes மற்றும் Wynk Music அணுகலும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் வழங்கும் ரூ.296 ப்ரீபெய்ட் திட்டம்.!

ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் ரூ.296 ப்ரீபெய்ட் திட்டத்தில் ஒரே மாதிரியான டேட்டா நன்மையை வழங்குகின்றன. பின்பு வேலிடிட்டி கூட இரண்டு நிறுவனங்களும் 30 நாட்கள் வழங்குகின்றன. ஆனால் ஏர்டெல் நிறுவனம் FASTag இல் கேஷ்பேக் உள்ளிட்ட சிறப்பான கூடுதல் நன்மையை வழங்குகிறது. ஆனால் ஜியோ நிறுவனம் இதேபோன்ற கூடுதல் நன்மையை வழங்கவில்லை. எனவே ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.296 ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேர்வு செய்வது மிகவும் நல்லது. மேலும் ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த புதிய திட்டங்களை இப்போது பார்ப்போம்.

ஏர்டெல் ரூ.489 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.489 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் 300 எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது. தினசரி வரம்பு ஏதும் இல்லாமல் மொத்தமாக 50 ஜிபி டேட்டா வரவு வைக்கப்படுகிறது. கூடுதலாகப் பயனர்களுக்கு ஏர்டெல் விங்க் மியூசிக், இலவச ஹலோ ட்யூன், அப்பல்லோ 24/7 மற்றும் ஃபாஸ்ட்டேக் நன்மைகள் வழங்கப்படுகிறது. இந்த திட்டமானது 30 நாட்கள் செல்லுபடியாகும்.

ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் வழங்கும் ரூ.296 ப்ரீபெய்ட் திட்டம்.!

ஏர்டெல் ரூ.509 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.509 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் மூலம் பயனர்கள் சில கூடுதல் நன்மைகளைப் பெறலாம். இந்த திட்டமானது முழுமையாக 1 மாதத்திற்குச் செல்லுபடியாகும். உள்ளூர் மற்றும் எஸ்டிடி உட்பட வரம்பற்ற அழைப்பு நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. மேலும் இதில் 300 எஸ்எம்எஸ் நன்மையும் வழங்கப்படுகிறது. அதேபோல் இந்த திட்டத்தில் மொத்தமாக 60 ஜிபி டேட்டா நன்மை வழங்கப்படுகிறது.

அதேபோல் ஏர்டெல் நிறுவனம் கூடிய விரைவில் பல அசத்தலான திட்டங்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ஏர்டெல் நிறுவனத்திற்குப் போட்டியாக ஜியோ, வோடபோன் ஐடியா நிறுவனங்களும் தொடர்ந்து அசத்தலான திட்டங்களை அறிமுகம் செய்கின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio, Airtel Rs 296 prepaid plan: Which company offers more benefits: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X