Home
News

தம்பி ஜியோ, ஏர்டெல் ஓரம்போ.. ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தில் அதிக பலன்களை வரும் BSNL.. விட்றாதீங்க..

ஜியோ (jio), ஏர்டெல் (airtel) நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் பிஎஸ்என்எல் (bsnl) நிறுவனம் மலிவு விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. அதுவும் மலிவு விலை ப்ரீபெய்ட் திட்டங்களில் அதிக நாள் வேலிடிட்டி, வாய்ஸ் கால்கள், அதிக டேட்டா உள்ளிட்ட பல நன்மைகளை வழங்கி வருகிறது பிஎஸ்என்எல்.

சமீபத்தில் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டங்களை நீக்கியுள்ளன. ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் இன்னும் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தை நீக்கவில்லை. அதுவும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.249 திட்டம் அதிக பலன்களை வழங்குகிறது. இப்போது பிஎஸ்என்எல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகளைப் பார்க்கலாம்.

ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தில் அதிக பலன்களை வரும் BSNL.. விட்றாதீங்க..

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தில் (BSNL Rs 249 prepaid plan) தினசரி 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. குறிப்பாக 45 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். எனவே நீங்கள் இந்த பிஎஸ்என்எல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் செய்தால் மொத்தம் 90ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை வழங்குகிறது பிஎஸ்என்எல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு 40 கேபிபிஎஸ் என்ற வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும்.

மேலும் சமீபத்தில் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் நீக்கிய ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம் என்னென்ன நன்மைகளை வழங்கியது என்பதையும் இப்போது பார்க்கலாம்.

ஜியோ நிறுவனத்தின் ரூ 249 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 249 prepaid plan) ஆனது தினமும் 1 ஜிபி டேட்டாவை வழங்கியது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 28ஜிபி டேட்டா கிடைத்தது. மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மையை வழங்கியது ஜியோ ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம்.

இதுதவிர தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (Jio TV), ஜியோ கிளவுட் (Jio Cloud) உள்ளிட்ட பல சிறப்பான நன்மைகளை வழங்கியது ஜியோ ரூ.249 ப்ரீபெய்ட திட்டம். பின்பு இந்த திட்டத்தில் தினசரி 1ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் 64 கேபிபிஎஸ் வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடிந்தது.

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம் (airtel Rs 249 prepaid plan) ஆனது தினமும் 1ஜிபி டேட்டா நன்மையை வழங்கியது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 24 நாட்கள் ஆகும். எனவே இந்த ஏர்டெல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 24ஜிபி டேட்டா வழங்கப்பட்டது. இதுதவிர பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைத்தன.

ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தில் அதிக பலன்களை வரும் BSNL.. விட்றாதீங்க..

அதாவது அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மையை வழங்கியது ஏர்டெல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ், எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே, பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ (Perplexity Pro AI), ஹலோ டியூன்ஸ் (Hello Tunes) உள்ளிட்ட நன்மைகள் இதில் கிடைத்தன.

எனவே கம்மி விலையில் அதிக சலுகைகள் விரும்பும் பயனர்கள் இனி பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்வது நல்லது. அதேபோல் பிஎஸ்என்எல் தற்போது 4ஜி சேவை வழங்கும் பணிகளில் உள்ளது. கூடிய விரைவில் இந்நிறுவனம் 5ஜி சேவையைக் கூட அறிமுகம் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio, Airtel remove Rs 249 prepaid plan, but BSNL offers more benefits on Rs 249 plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X