Home
News

தினசரி 2.5ஜிபி டேட்டா நன்மைகளை வழங்கும் ஜியோ, ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்கள்: இதோ பட்டியல்.!

ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு அசத்தலான திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளன என்றுதான் கூறவேண்டும். அதேபோல் இந்நிறுவனங்கள் தற்போது சில நகரங்களில் மட்டும் 5ஜி சேவையை வழங்கியுள்ளன. விரைவில் இந்நிறுவனங்கள் அனைத்து நகரங்களிலும் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினசரி 2.5ஜிபி டேட்டா

தினசரி 2.5ஜிபி டேட்டா

மேலும் இந்த இரண்டு நிறுவனங்களும் பட்ஜெட் விலையில் தினசரி 2.5ஜிபி டேட்டா நன்மைகளை வழங்கும் திட்டங்களை வைத்துள்ளன. இப்போது அந்த திட்டங்களைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

 ஜியோ ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2.5ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இதுதவிர ஜியோ டிவி, ஜியோசினிமா, ஜியோசெக்யுரிட்டி மற்றும் ஜியோகிளவுட் உள்ளிட்டவைகளுக்கான அணுகலை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம்.

ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 90 நாட்கள் ஆகும். குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு நன்மைகள் கிடைக்கிறது. இதுதவிர ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோசெக்யுரிட்டி மற்றும் ஜியோகிளவுட் உள்ளிட்டவைகளுக்கான அணுகலை வழங்குகிறது இந்த ஜியோ திட்டம்.

 ஜியோ ரூ.2023 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.2023 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.2023 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 252 நாட்கள் ஆகும். அதாவது இந்த திட்டத்தில் மொத்தமாக 630ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு நன்மைகள் கிடைக்கிறது. இதுதவிர ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோசெக்யுரிட்டி மற்றும் ஜியோகிளவுட் உள்ளிட்டவைகளுக்கான அணுகலை வழங்குகிறது இந்த ஜியோ திட்டம்.

 ஏர்டெல் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 2.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இதுதவிர ஏர்டெல் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டத்தில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவின் மூன்று மாதங்களுக்கு அணுகல், அப்பல்லோ 24|7 சர்க்கிள் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். குறிப்பாக வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் உள்ளது. பின்பு இந்ததிட்டத்தில் கூடுதல் கட்டணமின்றி 84 நாட்களுக்கு Amazon Prime மெம்பர்ஷிப் உள்ளது. ஹலோ ட்யூன்கள், Wynk மியூசிக் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கிறது. அதேபோல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவும் இந்த திட்டத்தில்
கிடைக்கிறது.

 ஏர்டெல் ரூ.3359 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.3359 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.3359 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 2.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், உள்ளிட்ட பல நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. அதேபோல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் அமேசான் பிரைம் வீடியோவிற்கு ஒரு வருட சந்தாவை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். குறிப்பாக ஏர்டெல் ரூ.3359 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். மேலும் பாஸ்டாக்கில் ரூ.100 கேஷ்பேக் மற்றும் அப்பல்லோ 24/7 மெம்பர்ஷிப் உள்ளிட்ட சில சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio, Airtel prepaid plans offering 2.5GB daily data benefits at budget prices: Here's the list: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X