Jio, Airtel சிம் வைத்திருப்பவர்களுக்கு தீபாவளி ட்ரீட்.. 22 நாட்களுக்கு வாய்ஸ், எஸ்எம்எஸ்.. 2 திட்டங்கள் இதோ!
ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) சிம் கார்டுகளை வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு தீபாவளிக்கு முன்பே ட்ரீட் வைத்தது போக புதிய வாய்ஸ் ஒன்லி திட்டங்கள் களமிறக்கப்பட்டு உள்ளன. ஜியோ நிறுவனம் ரூ.147 விலைக்கும், ஏர்டெல் நிறுவனம் ரூ.185 விலைக்கும் திட்டத்தை கொண்டுவந்து இருக்கிறது.
வாய்ஸ் ஒன்லி திட்டங்கள் மட்டுமே மலிவான விலைக்கு சிம் ஆக்டிவ் கொடுக்கின்றன. வாய்ஸ் கால்கள் மட்டுமே போதும் என்று கேட்கும் கஸ்டமர்களுக்கும் கைகொடுக்கின்றன. ஆனால், 84 நாட்கள் அல்லது 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்கள் மட்டுமே ஜியோ, ஏர்டெல் போன்ற முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் வாய்ஸ் ஒன்லி திட்டங்களாக (Voice Only Plans) கிடைத்தன.

இதனால், டிராய் (TRAI) ஆனது 28 நாட்கள், 30 நாட்கள், 31 நாட்கள் போன்ற கம்மியான வேலிடிட்டியிலும் திட்டத்தை கொடுக்க ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்கு உத்தரவு போட்டது. இந்த உத்தரவின்படி ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் முறையே 22 நாட்கள் மற்றும் 28 நாட்கள் வேலிடிட்டியில் வாய்ஸ் ஒன்லி திட்டங்களை கொடுத்துள்ளன.
ஜியோ ரூ.147 வாய்ஸ் திட்டம் (Jio Rs 147 Voice Plan): இதுவரையில் ரூ.189 விலை கொண்ட திட்டமே ஜியோவில் மலிவு விலை திட்டமாக இருந்தது. ஆனால், இனிமேல் இந்த திட்டமே மலிவு விலை திட்டமாக இருக்கப்போகிறது. வெறும் ரூ.147 இருந்தால் போதும், வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களை பெற்று கொள்ளலாம். சிம் ஆக்டிவ் கிடைத்துவிடுகிறது.
இந்த ஜியோ ரூ.147 வாய்ஸ் ஒன்லி திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 25 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இந்த நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) கொடுக்கப்படுகின்றன. 300 எஸ்எம்எஸ்கள் கிடைக்கின்றன. இதை தவிர வேறு எந்த சலுகைகளும் கொடுக்கப்படவில்லை.
வழக்கமாக அனைத்து ஜியோ திட்டங்களிலும் ஜியோ டிவி மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் ஆப் சந்தா கிடைக்கும். ஆனால், இந்த வாய்ஸ் ஒன்லி திட்டம், அடிமட்ட விலைக்கு கிடைப்பதால், வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களை தவிர வேறு எந்த சலுகையும் கொடுக்கப்படவில்லை. இதைவிட கூடுதல் விலைக்கு ஏர்டெல் வாய்ஸ் ஒன்லி திட்டம் கிடைக்கிறது.
ஏர்டெல் ரூ.185 வாய்ஸ் திட்டம் (Airtel Rs 185 Voice Plan): இந்த வாய்ஸ் ஒன்லி திட்டத்தின் விலை கூடுதலாக இருந்தாலும், வேலிடிட்டி அதிகமாக கிடைக்கிறது. அதாவது, ஜியோவின் ஆரம்ப விலை வாய்ஸ் ஒன்லி திட்டத்தில் 25 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைத்தது. ஆனால், ஏர்டெல்லில் 28 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்த நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) மற்றும் 300 எஸ்எம்எஸ்கள் கிடைக்கின்றன. கூடுதலாக ப்ரீ-ஹெலோ டியூன்ஸ் (HelloTunes) கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இதில் ஏர்டெல் கூடுதல் சலுகைகளை கொடுப்பதை போல தோன்றலாம். ஆனால், அது உண்மையில்லை.
ஜியோ நிறுவனத்திடம் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் மற்றொரு வாய்ஸ் ஒன்லி திட்டம் இருக்கிறது. இது ஏர்டெல்லை விட மலிவாக கிடைக்கிறது. அதாவது, 25 நாட்களுக்கு ரூ.147 விலைக்கு கிடைக்கிறது என்றால், 28 நாட்களுக்கு ரூ.177 ஆக விலை இருக்கிறது. இது ஏர்டெல்லை விட கம்மியான விலையாகும். ஆனால், ஒரே வேலிடிட்டியில் வருகிறது.


Click it and Unblock the Notifications
