Home
News

இருக்குற பிரச்சனையில் இது வேறயா.. Jio, Airtel ரீசார்ஜ் விலை உயர்வு.. எப்போது முதல் அமல்?

நீங்கள் ஜியோ (Jio) அல்லது ஏர்டெல் (Airtel) சிம் கார்டுகளை பயன்படுகிறீர்கள் என்றால் "இருக்குற பிரச்சனையில் இது வேறயா?" என்று உங்களை கேட்கவைக்கும் படியான ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அது ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் நிறுவனங்கள் எப்போது அதன் அடுத்த விலை உயர்வை (Tariff Hike) அறிவிக்கும் என்பது பற்றிய தகவலாகும்.

நடப்பு நிதியாண்டின் இரண்டாம் பாதியில், சந்தாதாரர்களின் சேர்க்கை நிலையாகி உள்ளதாலும், கடந்த ஜூலை 2024 இல் அறிவிக்கப்பட்ட விலை உயர்வின் தாக்கம் குறைய தொடங்கி உள்ளதாலும், டெலிகாம் நிறுவனங்கள் மற்றொரு சுற்று கட்டண உயர்வுகளை செய்யக்கூடும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். இது எப்போது அமலாகும்?

Jio, Airtel ரீசார்ஜ் விலை உயர்வு.. எப்போது முதல் அமல்?

டிராய் (TRAI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தரவுகள், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் ஆகிய இரண்டு நிறுவனங்களுமே நிகர சந்தாதாரர் வளர்ச்சியில் நிலையான இடத்திற்கு திரும்பி உள்ளனர். குறிப்பாக ஜியோ, கடந்த ஜனவரி 2025 முதல் நிலையான சேர்க்கைகளைக் கண்டுள்ளது. இந்நிறுவனம் கடந்த மார்ச் மாதத்தில் 2.17 மில்லியன் பயனர்களை சேர்த்தது, இது முந்தைய மாதத்தில் 1.7 மில்லியனாக இருந்தது.

மறுகையில் உள்ள ஏர்டெல் நிறுவனம் மார்ச் மாதத்தில் 1.25 மில்லியன் பயனர்களை சேர்த்தது, அதே நேரத்தில் வோடபோன் ஐடியா தொடர்ந்து சந்தாதாரர்களை இழந்து வருகிறது. இந்நிறுவனம் அதே காலகட்டத்தில் 541,000 க்கும் அதிகமான கஸ்டமர்களை இழந்துள்ளது. இருப்பினும் மார்ச் மாதத்தில் மொத்த தொழில்துறை சேர்க்கைகள் 2.9 மில்லியனாக இருந்தன. இது டெலிகாம் துறைக்கான "சூப்பர் குட் நியூஸ்" ஆகும்!

இதன் மூலம் கடந்த ஜூலை 2024 இல் அறிவிக்கப்பட்ட கட்டண உயர்வானது கஸ்டமர்களால் முழுமையாக உள்வாங்கப்பட்டு இருப்பது உறுதியாகி உள்ளது. எனவே தனியார் டெலிகாம் நிறுவனங்கள் இப்போது அடுத்த சுற்று விலை உயர்விற்கு தயாராக இருக்கலாம் என்றும் ஜெஃப்பெரிஸின் ஆய்வாளர்கள் குறிப்பிட்டு உள்ளனர். இந்த விலை உயர்வு எப்போது வேண்டுமானாலும் அமலுக்கு வரலாம். ஒருவேளை இந்தியா பாகிஸ்தான் இடையே நடக்கும் பதற்றம் காரணமாக இது ஒத்திவைக்கப்பட்டு இருக்க்கலாம்!

ஏனென்றால் கடந்த 2025 ஜனவரி மாதமே, தனியார் டெலிகாம் நிறுவனங்கள் 10% வரை இன்னொரு விலை உயர்வை அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. ஃபைனனாஷியல் எக்ஸ்ப்ரெஸ் வழியாக கிடைத்த அந்த தகவல் தனியார் டெலிகாம் ஆபரேட்டர்கள் பணமாக்குதலின் மீது தங்கள் கவனத்தை தொடரக்கூடும் என்பதால் 2025 ஆம் ஆண்டில் மீண்டுமொரு கட்டண உயர்வுக்கு வாய்ப்பு இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டு இருந்தது!

டெலிகாம் துறை தொடர்பான மற்ற லேட்டஸ்ட் அப்டேட்களை பொறுத்தவரை, பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் அதன் கஸ்டமர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு சேவை சத்தமில்லாமல் நிறுத்தியுள்ளது. அது பிஆர்பிடி (PRBT) என்று சுருக்கமாக அழைக்கப்படும் பெர்சனலைஸ்டு ரிங்பேக் டோன் (Personalised Ringback Tone) சேவையாகும்.

இடி டெலிகாம் வழியாக கிடைத்த அறிக்கையின்படி, பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் பிஆர்பிடி சேவையை கடந்த மாதம் அமைதியான முறையில் நிறுத்தப்பட்டது. மேலும் பிஎஸ்என்எல் அதன் எந்தவொரு ரீசார்ஜ் பேக்குகளுடனும் இந்த சேவையை வழங்குவதையும் நிறுத்திவிட்டது.பிஆர்பிடி சேவை நிறுத்தப்பட்டதை தொடர்ந்து, பிஎஸ்என்எல்-இன் கஸ்டமர் கேர் மையங்கள் ஏராளமான புகார்களையும், கேள்விகளையும் பெற்றதாகவும் கூறப்படுகிறது.

பிஆர்பிடி சேவைக்கு பதிலாக, பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் நெக்ஸ்ட் ஜெனெரஷன் ஏஐ அடிப்படையிலான தளத்தை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த கிளவுட்-நேட்டிவ் சொல்யூஷன் ஆனது வாடிக்கையாளர் சார்ந்த மற்றும் விளம்பரங்களால் நிதியளிக்கப்பட்ட மாடலில் கட்டமைக்கப்படும், இது தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு ஒரு புதிய வருவாய் ஓட்டத்தை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Airtel May Go For Another Round of Tariff Hikes According To Telecom Analysts
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X