கம்மி விலையில் தினசரி 3ஜிபி டேட்டா வேண்டுமா? அப்போ இந்த Jio, Airtel திட்டங்களை பாருங்க...
ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் போட்டிப்போட்டு கொண்டு அருமையான திட்டங்கள் மற்றும் எக்கச்சக்க சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளன. குறிப்பாக இந்நிறுவனங்கள் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு திட்டங்களுக்கும் இந்தியாவில் அதிக வரவேற்பு உள்ளன. மேலும் வோடபோன் ஐடியா, பிஎஸ்என்எல் நிறுவனங்களை விட ஏர்டெல், ஜியோ அதிக சலுகைகளை வழங்குகின்றன.
அதேபோல் ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் 5ஜி சேவையை அறிமுகம் செய்துவிட்டன. ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் இதுவரை 4ஜி சேவையை கூட வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது தினசரி 3ஜிபி டேட்டா எதிர்பார்க்கும் பயனர்களுக்கு ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் வைத்துள்ள ப்ரீபெய்ட் திட்டங்களை இப்போது விரிவாகப் பார்ப்போம்.

ஜியோ ரூ.219 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 14 நாட்கள் ஆகும். இதுதவிர கூடுதலாக 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். எனவே ஜியோ ரூ.219 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு மொத்தமாக 44ஜிபி டேட்டா கிடைக்கும். பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், நன்மைகளும் இதில் உள்ளன. அதேபோல் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ க்ளவுட் உள்ளிட்ட ஜியோ ஆப் பயன்பாடுகளின் அணுகலை வழங்குகிறது இந்த திட்டம்.
ஜியோ ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். மேலும் கூடுதலாக 6ஜிபி டேட்டா வழங்குகிறது இந்த திட்டம். எனவே ஜியோ ரூ.399 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு மொத்தமாக 90ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், நன்மைகளும் இதில் உள்ளன. அதேபோல் ஜியோ ஆப் பயன்பாடுகளின் அணுகலை வழங்குகிறது இந்த திட்டம்.

ஜியோ ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். மேலும் கூடுதலாக 40ஜிபி டேட்டா வழங்குகிறது இந்த திட்டம். எனவே ஜியோ ரூ.399 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு மொத்தமாக 292ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளும் இதில் உள்ளன. அதேபோல் ஜியோ ஆப் பயன்பாடுகளின் அணுகலை வழங்குகிறது இந்த திட்டம்.
ஏர்டெல் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். குறிப்பாக xstream app, அப்பல்லோ 24|7 சர்க்கிள், விங்க் மியூசிக் பிரீமியம், இலவச ஹெலோட்யூன்ஸ் போன்ற பல அசத்தலான சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளது.

ஏர்டெல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். குறிப்பாக டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தா, அப்பல்லோ 24|7 சர்க்கிள், விங்க் மியூசிக் பிரீமியம், இலவச ஹெலோட்யூன்ஸ் போன்ற பல அசத்தலான சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளது.
ஏர்டெல் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் 56 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும்.
அதேபோல் ஏர்டெல் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம் வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அமேசான் பிரைம் வீடியோ சந்தா
இந்த திட்டத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








