அசத்தலான கேஷ்பேக் தரும் டெலிகாம் நிறுவனங்கள்.!
ஏர்டெல் நிறுவனம் தற்சமயம் நோக்கியா 3 ஜி மற்றும் 4ஜி ஸ்மார்ஃபோன்களுக்கு அசத்தலான கேஷ்பேக் சலுகையை அறிவித்துள்ளது.
தற்சமயம் டெலிகாம் நிறுவனங்கள் நாடு முழுவதும் புதிய கேஷ்பேக் சலுகையை அறிவித்த வண்ணம் உள்ளனர், அதன்படி இந்த கேஷ்பேக் திட்டம் பல்வேறு வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ, ஐடியா போன்றவை வாடிக்கையாளர்களுக்கு தகுந்த அசத்தலான கேஷ்பேக் திட்டத்தை அறிவித்துள்ளது.

கேஷ்பேக் திட்டம் பொறுத்தவரை குறைந்த விலையில் அதிக டேட்டா மற்றும் கிஃபுட் வவுச்சர், ரீசார்ஜ் கூப்பன்கள் போன்றவற்றை தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் ஜியோ நிறுவனம் குறிப்பிட்ட கேஷ்பேக் சலுகைகளை அறிவித்ததை தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களும் இப்போது கேஷ்பேக் சலுகைகளை அறிமுகப்படுத்தி வருகின்றன.

ஜியோ கேஷ்பேக்:
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தற்சமயம் 'ஃபுட் பால் ஆஃபர்' என்ற பெயரில், ரூ. 2,200 க்கு கேஷ்பேக் சலுகையை அறிவித்துள்ளது, அதன்படி
இந்த கேஷ்பேக் வரும் மார்ச் 31 ஆம் தேதி, வரை மட்டுமே செயல்பாட்டில் இருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

ஸ்மார்ட்போன்கள்:
பானசோனிக், ஸ்வைப், கோமியோ, செல்கான், சியோக்ஸ், சாம்சங், எல்.ஜி, நோக்கியா, மோட்டோரோலா, சியோமி, பிளாக்பெரி, அசுஸ், ஹூவாய், இன்டெக்ஸ், ஆல்காடெல், மைக்ரோமேக்ஸ், 10.ஆர், லைஃப், ஜிவி, சென், மற்றும் சென்ட்ரிக் போன்ற ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ஜியோ கேஷ்பேக் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மைஜியோ:
குறிப்பாக ஜியோ 4ஜி சேவையை ஸ்மார்ட்போன்களில் ஆக்டிவேட் செய்ய வேண்டும், பின்பு வாடிக்கையாளர்கள் மார்ச் 31(2018)-ம் தேதிக்குள் ரூ.198 அல்லது ரூ.299 செலுத்தி ரீசார்ஜ் செய்ய வேண்டும். ரீசார்ஜ் செய்ததும் ரூ.50 மதிப்புள்ள 44 வவுச்சர்கள் வடிவில் மைஜியோ செயலியில் கிரெடிட் செய்யப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்டெல் கேஷ்பேக்:
ஏர்டெல் நிறுவனம் தற்சமயம் நோக்கியா 3 ஜி மற்றும் 4ஜி ஸ்மார்ஃபோன்களுக்கு அசத்தலான கேஷ்பேக் சலுகையை அறிவித்துள்ளது, மேலும்
ரூ.169 ரீசார்ஜ் திட்டத்திலும் இந்த கேஷ்பேக் ஆஃபரை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐடியா செல்லுலார் கேஷ்பேக்:
ஜியோ ஃபுட்பால் ஆஃபர்-க்கு போட்டியாக தற்சமயம் ஐடியா செல்லுலார் நிறுவனம் மெகா கேஷ்பேக் ஆஃபரை அறிவித்துள்ளது, முன்னணி நிறுவனங்களுடன் தற்போது களத்தில் குதித்துள்ள ஐடியா நிறுவனம், ரூ.2000 மதிப்புள்ள கேஷ்பேக் ஆஃபரை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


ஏப்ரல் 30 :
ஐடியா செல்லுலார் அறிவித்த "மெகா கேஷ்பேக்" ஆஃபர் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் பயனர்களுக்காக கிடைக்கும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு ஏப்ரல் 30 (2018) வரை மட்டுமே இந்த அட்காசமன கேஷ்பேக் சலுகை வழங்கப்படும் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications